???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: முகெனுக்கு ஐ லவ் யூ சொன்ன அபிராமி!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   16 , 2019  02:59:12 IST


Andhimazhai Image
வனிதா இல்லாத பிக்பாஸ் வீட்டில் எந்த சண்டைகளும் வராதே இனி எப்படி சுவாரஸ்யமாக நிகழ்ச்சி செல்லும் என்று நினைத்தால், கதை தலை கீழாக  மாறி இருக்கிறது.  
 
 
 
காலையிலே பஞ்சாயத்தை கூட்டினார் மோகன் வைத்யா. சரவணன் தன்னுடைய உடல்மொழியை பகடி செய்வதாக குற்றச்சாட்டைமுன்வைத்து தேம்பி தேம்பி  அழுதார். 
 
 
 
 அவருக்கு ஆதரவாக தர்ஷன், ரேஷ்மா, சாக்‌ஷி வாதிட்டாலும் , சரவணன் ’தான் எந்த தவறு  செய்யவில்லை’’ என்று ஒரேயடியாக பிரச்னையைமுடிக்க பார்த்தார்.
 
 
 
ஆனால் மோகன் வைத்யா சமாதானமாகாமல் பிரச்சனையை மேலும் வளர்த்தார். இதைத்தொடர்ந்து இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர்களை வீட்டில் இருக்கும் நபர்கள் தேர்வு செய்யும் எலிமினேஷன் முறை நடந்தது.
 
 
தர்ஷன் மீது தவறான குற்றச்சாட்டை கூறி வருகிறார் என்ற கருத்தின் அடிப்படையில் மீராவின் பெயரை கிட்டதட்ட எல்லா போட்டியாளர்களும் குறிப்பிட்டனர்.
 
 
 
.அதேபோல, மோகன் வைத்யாவை கேலி செய்ததால் பலரும் சரவணின் பெயரை எலிமினேஷனுக்கு பரிந்துரைத்தனர். 
 
 
 
அதை தொடர்ந்து சமையல் அணியில் உள்ள மதுமிதா, சரவணன் மீது குற்றச்சாட்டை அனைவருமே முன்வைத்தனர். அது பிக்பாஸ் வீட்டுக்குள்சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. எனினும், பெரியளவில் அந்த பிரச்சனை வெடிக்கவில்லை. அதற்கடுத்து நாளை மதுமிதா சமைப்பார் என்று ஒருமனதாக சமையல் அணியினர் முடிவு செய்தனர். 
 
 
 
பிறகு, நான் சொல்வதெல்லாம் உண்மை என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் பேசிய அபிராமி, முகென் ராவ் நண்பனாக கிடைக்க பெற்றதில்மகிழ்ச்சி என்று கூறினார். மேலும், அந்த அன்பை அதீதமாக வெளிப்படுத்தும் விதமாக அவருக்கு ‘ஐ லவ் யூ’ சொன்னார் அபிராமி. 
 
 
 
பெரும்பாலான போட்டியாளர்கள் அனைவரும் மீரா குறித்து எதிர்மறையான எண்ணங்களை பதிவு செய்தனர். அதற்கு பதிலடி தரும் விதத்தில்,அனைத்தையும் போட்டியாகவே பார்ப்பதாக கூறி முற்றுப்புள்ளி வைத்தார் மீரா மிதுன். 
 
 
 
அதை தொடர்ந்து உணவுக்கூடத்தில் அனைத்து போட்டியாளர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது லாஸ்லியா, கவினை‘அண்ணா’ என்று அழைத்தார். இதனால் மனமுடைந்த கவின், நீச்சல் குளத்திற்கு அருகில் அமைதியாக சென்று அமர்ந்துவிட்டார். 
 
 
 
வழக்கம் போல சாண்டி,மோகன் வைத்தியாவுடன் செய்யும் சேட்டைகளுடன் பிக்பாஸின் நேற்றைய எபிசோட்  முடிவடைந்தது. 
 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...