???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: சொந்த மகள் பேச்சை கேட்பாரா சேரன் ?

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   13 , 2019  04:19:17 IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோட் முழுக்க உணர்ச்சி பொங்கி வழிந்தது. லாஸ்லியாவின் குடும்பத்தினர் வீட்டை விட்டு சென்றதும், என்ன செய்வது என்று தெரியாமல் லாஸ்லியா தவித்தார்.

                                                                              

தேம்பித் தேம்பி அழுததால் சோர்வடைந்த லாஸ்லியா இனி கவினை எப்படி சமாளிக்கப்போகிறார்? இனி இவர்களது உறவு எப்படி இருக்கும் என்று பல கேள்விகள் பார்வையாளர்களுக்கு எழுந்திருக்கும்.

 

ஒரு புறம் காதல் இயல்பு என்றாலும், நூறு கேமிராக்கள் இருக்கும் ஒரு விளையாட்டு நிகழ்வில் ஒரு பெண் காதலித்தால், அவரை இந்த சமூகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடவா போகிறது?

 

சோபாவில் படுத்துக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்த லாஸ்லியாவிடம் வனிதா ஆறுதலாக பேசினார். அவர் பேசிய வார்த்தைகள் எதுவும் போலியானதாக இல்லை. ’நம் வாழ்க்கையில் எது சரி எது தவறு என்பதை எடுத்துச்சொல்ல பெற்றோர் தேவை. அப்படி யாரும் இல்லை என்றால் வாழ்க்கை திசைமாறி சென்றுவிடும். இந்த போட்டி முடிந்த பிறகு உங்கள் உறவு உண்மையாக இருந்தால் நிலைத்து நிற்கும்’ என்றார்.

 

லாஸ்லியாவின் குடும்பத்தினர் வந்தலிருந்து கவின் சோகமாகவே இருக்கிறார். இனி என்ன ஆகுமோ என்ற பீதி அவர் முகத்தில் வெளிப்படையாக தெரிகிறது. சாண்டியிடம் கவின் மனிப்பு கேட்டார்.  சாண்டியோ ‘இதை விட்டுவிடு. நாம் பழையதுபோல் பாட்டுப்பாடிக்கொண்டு இருக்கலாம். அவர்கள் குடும்பத்தினர் என்னிடம்கூட பேசவில்லை. எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது’ என்றார்.

 

லாஸ்லியாவும் கவினும் தனியாக பேசினர். கவின் ‘ என்னால்தான் இப்படி நடந்தது. மன்னித்துவிடு’ என்றார். இதற்கு லாஸ்லியா ‘உன்னை நான் காயப்படுத்துகிறேன். நீ முன்பு மாதிரி இருக்கவேண்டும்’ என்றார். தொடர்ந்து பேசிய கவின் ‘  அம்மா உனது ஆசைகளை ஏற்றுக்கொள்வார் என்று சொன்னதால், நானும் ஒரு நம்பிக்கையில் இருந்தேன்’ என்றார். உடனே லாஸ்லியா ‘ நான் செய்யும் விஷயத்திற்காக எனது அம்மா, அப்பா, தங்கைகள் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். என்னைப்பற்றி யாரும் அவர்களிடம் நல்லவிதமாக சொல்லவில்லை.  நான் பழைய லாஸ்லியாவாக மாற வேண்டும் என்று அவர்கள் எதிர்பாக்கிறார்கள். நான் சொன்னேனே அதுதான் உண்மையான உலகம் கவின். இங்கே இருக்கிறோமே, இது உண்மையான உலகம் அல்ல. இத்தோடு இதை முடித்துக்கொள்ளலாம். இனி விளையாட்டில் கவனத்தை திருப்ப வேண்டும்’ என்றார்.

 

கவினோ என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தார் பின்பு அவரும் இதற்கு ஒப்புக்கொண்டார்.

 

இத்தொடர்ந்து ’காலையில் தினமும் கண் விழித்தால். நான் கை தொடும் தேவதை அம்மா’ என்ற பாடல் ஒலிபரப்பானது. இதை கேட்டதும் தர்ஷன் ஏக்கத்தில் ஓடி வந்தார். தர்ஷனின் தாயும் தங்கையும் உள்ளே வந்தனர். தாயைக் கட்டித் தழுவிய தர்ஷன் அழுதுகொண்டே அவருக்கு முத்தம் கொடுத்தார். அவரது தாயும் தர்ஷனை இறுக்கமாக அணைத்துகொண்டார்.

 

தொடர்ந்து தர்ஷனின் அம்மாவுக்கு சாண்டி பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னர். தர்ஷனே இந்த விஷயத்தை மறந்துவிட்டார். தர்ஷனின் தாய்க்கு சாண்டியை பிடித்துப்போனது. வீட்டில் இருக்கும் அனைவரிடமும் பாசத்தை வெளிப்படுத்தினார் தர்ஷனின் தாய். பிக்பாஸ் தர்ஷனின் அம்மாவிற்காக கேக் அனுப்பினார்.

 

இறுதியாக தர்ஷனின் தங்கை தர்ஷனுக்கு சில அறிவுரைகளை சொனார். ’போட்டியில் வெல்வது முக்கியம் இல்லை. ஆனால் நம்மால் முடிந்த முயற்சிகளை செலுத்த வேண்டும். விட்டுக்கொடுப்பது எப்போதும் சரியாக இருக்காது’ என்றார். பிறகு தர்ஷனின் தாயும் தங்கையும் வெளியேறினர்.

 

சிறிது நேரம் கழித்து ‘வாயாடி பெத்த புள்ள பாடல்’ ஒலித்தது. வனிதாவின் இரு மகள்கள் வீட்டுக்குள் வந்தனர். அவர்களை பார்த்ததும் வனிதா உணர்ச்சிவசப்பட்டாலும் அதை வெளிக்காட்டாமல் எப்படி இருக்கிறீர்கள் என்று கூறிவிட்டு இருவரையும் கட்டியணைத்தார். இரண்டாவது மகளை ‘ வாடி...என்  அரிசி மூட்டை என்று அழைத்து தூக்கிய காட்சிகள்’ நமக்கே ஆனந்த கண்ணீரை வரவழைக்கும்போல் இருந்தது.

 

வனிதாவைப் பார்த்த குழந்தைகள் ஏங்கிப்போனார்கள். அம்மாவைவிட்டு நகரவே இல்லை. ’நான் தங்க பதக்கம் வாங்கினேன்’ என்று மூத்த மகள் வனிதாவிடம் கூறினார். வனிதா ‘ வாழ்த்துகள் என் செல்லமே’ என்றார்.

 

தொடர்ந்து பேசிய சிறியவள் ‘நான் குறைவாக படித்தாலும் கூட நாற்பதுக்கு முப்பத்து எட்டு மதிப்பெண் எடுத்தேன் மம்மி’ என்றார்.

 

இதற்கு வனிதா ‘நீ தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதில்லை. வகுப்பில் சரியாக கவனித்தால் போதும்’ என்றார்.

 

வனிதாவை எல்லோரும் சண்டைக்காரி என்று விமர்சித்து வருகின்றனர். ஆனால் நேற்றைய  எபிசோடில் அக்கரை உள்ளம் கொண்ட தாயாகவே வனிதா தெரிந்தார். தனியொரு பெண்ணாக குழந்தைகளை சரியாக வளர்த்திருக்கிறார் என்று நெட்டீசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

வனிதாவின் தாயுள்ளத்தை பார்த்த அனைவரும் நேற்று கண்கலங்கியிருப்பர். முகெனும் சாண்டியும் வனிதாவின் குழந்தைகளோடு விளையாடினர்.

 

’டிக் டிக் யார் அது’ விளையாட்டு, நடனம் என்று மனநிறைவாக இருந்தது. குழந்தைகள் இப்போது வீட்டிருந்து செல்ல வேண்டும் என்று பிக்பாஸ் கூறியதும் குழந்தைகள் வனிதாவை கட்டியணைத்துகொண்டனர். இரண்டாவது மகள் நெடு நேரம் வனிதாவை கட்டிப்பிடித்துகொண்டிருந்தார். அவருக்கு வனிதாவை நீங்க மனம் இல்லை.

 

மூத்த மகள் மட்டும் வனிதாவுக்கு சில அறிவுரைகள் சொன்னார் . ’யாரையும் நம்ப வேண்டாம் மம்மி. நீ விளையாட்டில் ஈடுபாடாக இருக்க வேண்டும்’ என்றார்.

 

இதைத்தொடர்ந்து ‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே’ என்ற பாடல் ஒளிபரப்பானது. சேரனின் அம்மா, மனைவி, மகள் ஆகியோர் வீட்டினுள் நுழைந்ததை பார்த்த சேரன் அழுதுகொண்டே ஓடி வந்து அம்மாவை  கட்டியணைத்தார். தொடர்ந்து மகளையும் கட்டியணைத்தார்.

 

இவ்வளவு நாட்கள் குடும்பத்தைவிட்டு பிரிந்து இருந்த வலி சேரனின் அழுகையில் தெரிந்தது. சேரனின் மகள் லாஸ்லியாவிடம் சரியாக பேசவில்லை. சேரனிடம் தனியாக பேசிய அவரது மகள் ‘ லாஸ்லியாவிடம் இருந்து விலகுங்கள். அவர் உங்களை விட்டுக்கொடுத்துதான் பேசுகிறார். எனது தோழிகள் எல்லாம் கோபமாக இருக்கிறார்கள். உன் அப்பா உன்னையே மறந்துட்டாரா என்று என்னிடம் கேட்கிறார்கள்’ என்றார். உடனே சேரன் அவரை சமாதானப்படுத்தினார்.

 

 

சேரனின் அம்மா சாண்டியை கட்டியணைத்து முத்தமிட்டார் ‘ எல்லாரும் நல்ல விளையாடுங்க’ என்றார். சிறிது நேரத்திலே சேரனின் குடும்பத்தினர் வீட்டை விட்டு சென்றனர்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...