???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: சேரன் கேட்ட மூன்று கேள்விகள்!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   11 , 2019  06:02:46 IST

பிக்பாஸ் வீட்டின் நேற்றைய எபிசோடின் தொடக்கத்தில் லாஸ்லியாவுக்கும் சாண்டிக்கும் முட்டிக்கொண்டது. சாண்டி கூட்டணி அதாவது கவின், லாஸ்லியா, தர்ஷன் , முகென் ஆகியோர் காப்பி குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது லாஸ்லியா ‘ காப்பி குடித்த பிறகு அனைவரும் அவரவர் வேலையை ஒழுங்காக செய்யுங்கள்’ என்றார்.

 

இதற்கு சாண்டி ‘ நீங்கள் வீட்டின் தலைவராக மாறியதும் உடனே வேலையை செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் மற்றவர்கள் தலைவராக இருக்கும்போது அப்படி செய்யவில்லையே’ என்றார். உடனே கோபமான லாஸ்லியா ‘ நான் எப்போதும் எனது வேலையை சரியாக பார்த்திருக்கிறேன். இந்த வாரம் எல்லா வேலைகளை எல்லாரும் செய்ய வேண்டும் என்பதால் அப்படிச் சொன்னேன். நீங்கள் வேலை செய்ய வரவேண்டாம் ‘ என்றார்.

 

உடனே சாண்டி ‘நான் விளையாட்டாகத்தான் சொன்னேன்’ என்றார். தொடர்ந்து பேசிய கவின் ‘ நீங்கள் காமெடி என்ற பெயரில் பேசுவது மற்றவர்களுக்கு உறுத்தலாக இருக்கிறது. ஏற்கனவே தலைவர் போட்டியில் தர்ஷன் விட்டுக்கொடுத்ததிலிருந்து லாஸ்லியாவுக்கு மனசு சரியில்லை. நீங்கள் செய்யும் தவறை உங்களிடத்தில் வந்து பேசினால், அதை காது கொடுத்துக்கூட கேட்பதில்லை. இந்த சிறு பிரச்சனைகள் பெரிதாக மாறி நமது குழுவை பிரித்து விடுமோ என்று தோன்றுகிறது’ என்றார்.

 

இதற்கு சாண்டி ‘ சரி டா.. நான் தெரியாமல் செய்துவிட்டேன். நமது கூட்டணி பிரியாது ‘ என்றார்.

 

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் ஒரு கடிதம் அனுப்பினர். அந்த கடிதத்தில் ‘ இனி இந்த வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் கட்டுப்பாடு பிக்பாஸிடம்தான் இருக்கும் என்றும். ப்ளே, ஃபார்வர்டு, லூப், ஃபிரீஸ் (அசையாமல் நிற்பது), ஸ்லோ மோஷன்  என்ற வார்த்தைகள் சொல்லி பிக்பாஸ் போட்டியாளர்களை கட்டுப்படுத்துவார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 

ஷெரின் தலையை சாண்டி கலைத்தபோது பிக்பாஸ் லூப் சொன்னதால் மீண்டும் மீண்டும் அதை சாண்டி செய்தார். அதுபோல் முகென் சாண்டியை தூக்கினார் உடனே பிக்பாஸ் ஃபிரீஸ் சொன்னார். இது சிறிது நேரம் தொடர்ந்தது.

 

முகெனின் அம்மாவும் தங்கையும் வந்தனர். அம்மாவை பார்த்ததும் முகென் அழுதார். போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதே முதல் இலக்கு என்று  முகெனின் அம்மா அவரிடத்தில் சொன்னார். சிறிது நேரம் கழித்து முகெனின் அம்மாவும் தங்கையும் பிக்பாஸ் வீட்டிலிரிந்து வெளியேறினர்.

 

இதன்பிறகு  லாஸ்லியா நடுவராகவும் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து பந்துகளை கூடையில் போட வேண்டும். இந்த டாஸ்கில் வனிதா, சாண்டி, முகென் அணி வெற்றிபெற்றனர். போட்டி முடிந்ததும் ரகசிய அறையில் இருக்கும் சேரன், பிக்பாஸ் போட்டியாளர்களிடம் 3 கேள்வி கேட்டார்.

 

அவர் ரகசிய அறையில் இருக்கிறார் என்பதை சொல்லாமல், அவர் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு கேள்வி கேட்கிறார் என்று பிக்பாஸ் கூறினார். முதல் கேள்வி லாஸ்லியாவிடம் கேட்கப்பட்டது. சேரன் அப்பாவின் பிரிவை உணர்ந்தாயா, அதை யாரிடத்திலாவது பகிர்ந்துகொண்டாயா? என்று கேட்கப்பட்டது.  இதற்கு லாஸ்லியா ‘உங்கள் பிரிவு மிகவும் பாதித்தது. இதைப்பற்றி ஷெரினிடம் பேசியிருக்கிறேன்’ என்று கூறிவிட்டு அழுதார். இரண்டாவது கேள்வி கவினிடத்தில் கேட்கப்பட்டது: ‘பிக்பாஸை விட்டுச் சென்ற பிறகு இதைப்பற்றி பேசிக்கொள்ளுங்கள் என்று எத்தனை முறை கூறியிருக்கிறேன்?. ஆனால் லாஸ்லியாவை உடனே பதில் சொல்லும்படி கட்டாயப்படுத்துவது சரியா? கொண்டாடலாமா என்று கேட்பது நியாயமா? இதை நிறுத்த முடியுமா?’ என்ற கேள்வி. இதற்கு கவின் ‘ நான் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. முடிவை சாதாரணமாக கேட்டேன். போட்டியை பாதிக்கக்கூடாது என்பதற்காக நிறுத்திக்கொள்கிறேன்’ என்றார்.

 

இதைத்தொடர்ந்து வனிதாவிடம் மூன்றாவது கேள்வி. ‘நான் வெளியேதும், உங்கள் கோபத்தை சரியாக வெளிக்காட்டினீர்கள். இந்த இரண்டு நாட்கள் உங்கள் நடவடிக்கை மாறியிருக்கிறது. இனி இதுபோல் உங்களால் இருக்க முடியுமா? யாரையும் குழப்பாமல்.? நாமினேஷனை பார்த்துவிட்டுத்தான் கேட்கிறேன்’ என்றார்.

 

இதற்கு வனிதா ‘இதுவரை எனக்கு எப்படி விளையாட்டை விளையாட வேண்டும் என்பது தெரியவில்லை. இப்போதுதான் தெரிந்திருக்கிறது’ என்றார். வனிதா மற்றும் தர்ஷன், ‘சேரன் சார் இரகசிய அறையில் இருக்கலாம்’ என்று பேசிக்கொண்டனர்.

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...