???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வீட்டின் தலைவரான அபிராமி…! சண்டைக்கு பஞ்சமில்லாமல் செல்லும் பிக்பாஸ்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   09 , 2019  02:44:39 IST


Andhimazhai Image

பிக்பாஸ் வீட்டின் நேற்றைய எபிசோடில் வீட்டின் தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய போட்டிகள் நடத்தப்பட்டது.

 

பாத்திமா பாபு பரிந்துரை செய்த சாண்டி, தர்ஷன், அபிராமி ஆகியோர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.  மூவரும் ஒருவரை ஒருவர் இணைக்கும் பெல்ட்டால் இணைக்கப்பட்டு , அவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்ல வேண்டும் என்று கூறப்பட்டது.  கழிப்பறை முதல் சமையலறை வரை எங்கு சென்றாலும் சாண்டி, அபிராமி, தர்ஷன் ஆகியோர் இணைந்தே சென்றனர்.  யாரும்  இந்த பெல்டில் இருந்து விடுவித்துக்கொள்ள விரும்பாததால், பிக்பாஸ் மூவரில் ஒருவரை விட்டுக்கொடுக்கச் சொன்னார்.

 

இதைத்தொடர்ந்து சாண்டி போட்டியிலிருந்து விலகுவதாக  அறிவித்தார். தர்ஷன் மற்றும் அபிராமி தற்போது விளையாட்டில் மும்மூரமாக ஈடுபட்டனர். தற்போது யாராவது ஒருவர்தான் தலைவராக முடியும் அதை நீங்களே முடிவு செய்யுமாறு பிக்பாஸ் தர்ஷன் மற்றும் அபிராமியிடம் கூறுகிறார். வீட்டில் உள்ள போட்டியாளர்கள்  சீட்டில் இருவர் பெயரை எழுதி ஒரு சீட்டை எடுத்து தேர்வு செய்யலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதற்கு அபிராமி மற்றும் தர்ஷன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

 

இதைத்தொடர்ந்து ஆழ்ந்த யோசனையில் இருக்கும் தர்ஷன் நான் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கிறார். ஏன் ? தர்ஷன் இப்படி செய்கிறார் என்று அனைவரும் கேட்கின்றனர். அதற்கு  அபிராமி தான் யார் என்பதை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பு அவருக்கு கொடுக்கவேண்டும் என்று தர்ஷன் கூறுகிறார்.

 

இந்த முடிவால் சாக்‌ஷி, ஷெரின், வனிதா கடுப்பாகிறார்கள். தலைவராக தேர்வு செய்யப்பட்ட அபிராமி மதுமிதாவிடம் சமரசம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். மீண்டும் தமிழ் பெண்கள், தமிழ் கலாச்சாரம் என்று பேச்சு வருகிறது. ’’நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்’’ என்பதுபோல் மதுமிதா, தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசியது சரி என்கிறார். மேலும் பாலியல் வன்கொடுமை நடப்பதற்கு உடையும் ஒரு காரணம் என்கிறார். மீராவிடம் கூட நான் அவரது உடை சரியில்லை என்று கூறினேன் என்று கூறுகிறார்.  இதனால் மேலும் அபிராமிக்கு வெறுப்பு ஏற்படுகிறது. ஆனால் அவர் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், நீங்கள் பேசும் வார்த்தைகளை பார்த்து பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார்.

 

இத்துடன் அபிராமி இந்த பிரச்சனையை விடாமல், சமையல் செய்துகொண்டிருக்கும் ஷெரின் , சாக்‌ஷி, வனிதாவிடம் இதை கூற மேலும் சண்டை அதிகமாகிறது. இதைத்தொடர்ந்து பேசும் வனிதா ‘’ நீ இப்போது எதற்கு  மதுமிதாவைப் பற்றி தேவையில்லாமல் பேசுகிறாய்’’ என்று குரலை உயர்த்தி பேசத் தொடங்குகிறார்.

 

இதனால் கோபம் கொள்ளும் அபிராமி ’’மீன் சந்தையைப் போல்’’ இருக்கிறது என்று கூறுகிறார். உடனே கடுப்பாகும் வனிதா ’’அது என்ன?  மீன் சந்தை என்ற வார்த்தையை பயன்படுத்துகிறாய். நீ கேப்டனாக இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் பேசுவாயா’’  என்று கேட்கிறார்.

 

இதைத்தொடர்ந்து நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று கூறும் அபிராமி தான் பேச வருவதை முழுவதுமாக கேட்டுவிட்டு பேசுங்கள் என்று கூறினார்.

 

ஆனால் மீன் சந்தை என்ற வார்த்தையை பிடித்துக்கொண்டு விடாமல் மீண்டும் வனிதா சண்டையிட்டார். அபிராமிக்கு ஆதரவாக தர்ஷன் பேசினார். ஆனால் தர்ஷன் பேசியதையும் வனிதா கேட்கவில்லை.

 

இதைத்தொடர்ந்து  இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் நபர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் கூறினார். மதுமிதா, மீரா, மோகன் வைத்யா, சரவணன் , வனிதா ஆகியோர் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

 

அபிராமி மீன் சந்தை என்று சொன்னது குறிப்பிட்ட மக்களை இழிவு படுத்துவதுபோல் இருந்தது என்ற சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் பிக்பாஸின் முதல் சீசனில்  ’சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தையை  காயத்திரி பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...