???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை 0 கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது! 0 சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் 0 மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது! 0 வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் 0 குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு 0 வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 0 தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் 0 நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொலை செய்யப்பட்ட சாக்‌ஷி: பிக்பாஸில் என்ன நடந்தது ?

Posted : புதன்கிழமை,   ஜுலை   10 , 2019  02:07:13 IST


Andhimazhai Image

பிக்பாஸ் வீட்டின் நேற்றைய நாள் சில சலசலப்புகளுடன் தொடங்கியது.  ’கேப்டன்  பதவிக்கு வந்த பிறகு அபிராமி மாறிவிட்டதாக’ சாக்‌ஷி ஷெரினிடம் கூறுகிறார். மேலும் இன்று காலையில் கூட தன்னை பார்த்தும் பார்க்காததுபோல் அபிராமி போய்விட்டதாக சாக்‌ஷி கூறுகிறார்.

 

இதைத்தொடர்ந்து மீரா மிதுன் மற்ற போட்டியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கிறார்.  இந்த பயிற்சியின்போது சாண்டி மாஸ்டர் இடையிடையே  நக்கல் செய்கிறார். இதனால் இந்த நிகழ்வு சுவாரஸ்யமாக நகர்கிறது.

 

இதற்கு இடையில் லாஸ்லியாவிடம் கவின் மனிப்பு கேட்கிறார். கவின் செய்த ஏதோ இரு விஷயம் லாஸ்லியாவை காயப்படுத்தியதால்  மன்னிப்பு கேட்பதாக அவர் கூறுகிறார்.  பல் துலக்கிக்கொண்டிருக்கும் லாஸ்லியா இதற்கு முதலில் எந்த பதிலும் சொல்லவில்லை. இதைத்தொடர்ந்து நான் மன்னிக்க வேண்டும் என்றால் உனக்கு ஒரு டாஸ்க் கொடுக்கிறேன் என்று கூறுகிறார்.  ஒரு நாள் முழுக்க தன்னை பார்க்கவேகூடாது என்று கூறுகிறார். இதற்கு கவின், “நாள் முழுக்க பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறு நான் வைத்த கண்களை எடுக்காமல் பார்ப்பேன்,” என்று ஜொள் ஒழுக கூறுகிறார்.

 

அது எல்லாம் சொல்ல முடியாது என்று கூறும் லாஸ்லியா ஒரு நாள் முழுவதும் தன்னை பார்க்காமல் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில் லாஸ்லியாவை தேடி வரும் சேரன், ’’குளித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றாயே.. இன்னும் ஏன் வரவில்லை என்று பார்க்க வந்தேன் ‘’என்று கூறிவிட்டு கவினை நக்கல் செய்யத்தொடங்குகிறார் .. இதைத்தொடர்ந்து கவினும் என்னடா இது லாஸ்லியாவிடம் தனியாகக் கூட பேசு முடியவில்லை என்று பதிலுக்கு நக்கல் செய்கிறார்.

 

இதைத்தொடர்ந்து வீட்டின் வெளிபுறம் மயானம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எதற்காக இருக்கும் என்று போட்டியாளர்கள் குழப்பம் அடைகின்றனர்.

 

இதைத்தொடர்ந்து ஒரு பெண் குரல் ஒலிபரப்பப்படுகிறது. காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து கொலையாளிகள் தப்பித்துவிட்டதாகவும், அவர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை கொலை செய்யப்போகிறார்கள் என்று கூறப்படுகிறது.

 

போட்டியாளர்களை தனியாக அழைத்து பிக்பாஸ் ஒரு கட்டையை கொடுத்து இதை வைத்து எப்படி தற்காத்துகொள்வீர்கள் என்று கேட்கிறார். அனைவரும் அந்த கட்டையால் கொலையாளிகளை எப்படி அடிக்கப்போகிறார்கள் என்று செய்து காட்டுகின்றனர்.

 

இதைத்தொடர்ந்து வனிதாவிடம் பேசும் பிக்பாஸ், வனிதாதான் அந்த கொலையாளி என்றும் அவருக்கு முகென்  கூட்டாளி என்று கூறுகிறார். வனிதாவிடம் பழைய மாடல் பட்டன் மொபைல் கொடுக்கப்படுகிறது. அதை யாருக்கும் தெரியாமல் ஒளித்துவைக்க வேண்டும் என்று பிக்பாஸ் சொல்கிறார்.

 

முதலில் சாக்‌ஷியை கொலை செய்ய வேண்டும் என்று செல்போனில் பிக்பாஸ் கூறுகிறார்.  சாக்‌ஷியின் மேக் அப்பை சாக்‌ஷியே துடைக்க வைக்க வேண்டும் என்று கூறும் பிக்பாஸ். அப்படி செய்தால் அவர் கொலை செய்யப்பட்டதாக அர்த்தம் என்கிறார். இதைத்தொடர்ந்து வனிதா சாக்‌ஷியின் மேக்- அப்பை அவரே  அழிக்க வைக்கிறார். இதைத்தொடர்ந்து சாக்‌ஷி கொலை செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்படுகிறது.  இதைத்தொடர்ந்து சாக்‌ஷிக்கு ஆவி உடை அணிவிக்கப்பட்டு வெளியில் உள்ள சுடுகாடுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. மேலும் ஆவியாக மாறிய சாக்‌ஷியிடம் யாரும் பேசக் கூடாது என்று பிக்பாஸ் கூறுகிறார்.

 

இதைத்தொடர்ந்து மோகன் வைத்யாவை மைக்கேல் ஜாக்சன் நடனத்தை ஆட வைக்க வேண்டும் என்று பிக்பாஸ் வனிதாவிடம் கூறுகிறார். அதுபோலவே மோகன்  வைத்யாவை   ஆட வைக்கிறார் வனிதா.

 

இதைத்தொடர்ந்து மோகன் வைத்யா கொலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரையும் கல்லறைக்கு கொண்டு செல்கின்றனர்.

 

பிக்பாஸ் 13-ஆம் நம்பர் வீடு ஆகிவிட்டது!click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...