???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போட்டியாளர்களை மட்டுமல்ல பார்வையாளர்களையும் வசீகரிக்கும் பிக்பாஸ் குரல்!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   18 , 2019  05:08:30 IST

பிக்பாஸ் வீட்டின் நேற்றைய எபிசோடின் ஹீரோவாக கவின் மாறிவிட்டார். தொடர்ந்து காதல் , சண்டை என்று சென்றுகொண்டிருந்த பிக்பாஸில் தற்போது கடுமையான போட்டி நடைபெற்றுவருகிறது.

 

டிக்கெட் டு ஃபினாலே டாஸ்குகள் இன்றும் தொடர்ந்தது. போட்டியாளர்களுக்கு தனித் தனியாக பியூரட் (வடியளவி) வைக்கப்பட்டிருக்கும். அதுபோல டெஸ்ட் டியூபுகளில் பல வர்ண திரவம் இருக்கும். போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக சென்று கொடுக்கப்படிருக்கும் வாசகத்தை படிக்க வேண்டும். அந்த வாசகம் யாருக்கு பொருந்தும் என்று அவர்கள் நினைக்கிறாரகளோ அந்த போட்டியாளரின் பியூரட்டில் வர்ண திரவத்தை ஊற்ற வேண்டும்.

 

இந்த போட்டியில் கொடுக்கப்பட்ட வாசகங்கள்

 

பிக்பாஸ் வீட்டில் தங்களை தொலைத்துவிட்டு தேடுபவர்கள்.

 

மக்கள் அனுதாபத்திற்காக நடிப்பவர்கள்

 

மற்றவர்கள் வெற்றியில் பயணம் செய்பவர்கள்

 

கூட்டத்தில் தங்களை மறைத்துக்கொள்பவர்கள்

 

நட்புக்கு பின்னால் சுயநலம் , தந்திரத்தை வைத்துகொண்டு செயல்படுபவர்.

 

இந்த டாஸ்கில் ஷெரின் முதல் இடத்தையும், சேரன் இரண்டாவது இடத்தையும், தர்ஷன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். வழக்கம்போல் கவின் கடைசி இடத்தை பிடித்தார். லாஸ்லியாவும் முகெனும் நான்காவது  இடத்தில் சமமாக இருந்ததால்,  அந்த இடத்திற்கு இருவரில் ஒருவரை தேர்வு செய்யுங்கள் என்று போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கட்டளையிட்டார். லாஸ்லியாவே முகென் பெயரை சொன்னதால் முகெனுக்கு நான்காம் இடம் வழங்கப்பட்டது.

 

தொடர்ந்து தராசு மாதிரியான ஒரு வடிவமைப்பு செய்யப்பட்ட டாஸ்க் தொடங்கியது. தராசின் ஒரு பக்கத்தை போட்டியாளர்கள் ஒரு  காலால் அழுத்தி சமநிலையில் பிடித்துக் கொள்ள வேண்டும். இன்னொரு பக்கம் ஐந்து மரக்கட்டைகளை குறிப்பிட்ட இடைவெளியில் அடுக்கி அது சாயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

 

ஒவ்வொரு முறை டாஸ்க் பசரின் ஒலி கேட்கும்போது மரக்கட்டைகளை அடுக்க வேண்டும். டாஸ்க் தொடங்கிய சில நொடிகளில் சேரனும் தர்ஷனும் போட்டியை விட்டு வெளியேறினர். தொடர்ந்து சாண்டி வெளியேறினார். ஷெரின் சிறிது நேரம் தாக்குப்பிடித்தாலும் அவரும் வெளியேறினார். ஐந்து மரக்கட்டைகளையும் அடுக்கி முடித்த லாஸ்லியா, முகென், கவின் ஆகியோர் டாஸ்கை தொடர்ந்தனர். ’கவினா இது’... என்பதுபோல் அசத்தலாக விளையாடினார். போட்டியாளர்கள் அனைவரும் லாஸ்லியாவையும் முகெனும் உற்சாகப்படுத்தினாலும் கவின் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விளையாடினார்.

 

லாஸ்லியாவும் அசத்தலாக விளையாடினார். லாஸ்லியா டாஸ்கில் தனது முழு கவனத்தை செலுத்தினாலும்கூட கவினை உற்சாகப்படுத்தினார். ‘கவின் விட்டுவிடாதே ‘ என்று கூறிய அவர் டாஸ்கை தொடராமல் வெளியேறினார். இறுதியாக கவினா? முகெனா? என்ற நிலை ஏற்பட்டது. இருவரும் விட்டுகொடுக்காமல் விளையாடினார்கள்.  இந்த டாஸ்கில் முகென் முதல் இடத்தையும் கவின் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

 

என்னதான் போட்டி மனப்பான்மையுடன் விளையாடினாலும் டாஸ்க் முடிந்ததும் அனைவரும் ஒன்றாகி விடுகிறார்கள்.

 

தொடர்ந்து பிக்பாஸ் குரல் ஒலித்தது. ’பிக்பாஸை பற்றி என்ன நினைத்தாலும் சொல்லாம். அது கோபமாக இருந்தாலும் சரி அன்பாக இருந்தாலும் சரி. மனதில் இருப்பதை நேரடியாக சொல்லாம்’ என்றார். ஷெரின் முதலில் சென்றார். ‘ எனது பெயரை சொல்வதற்கு உங்களுக்கு 7 நாட்கள் ஆனது. உங்கள் குரலில் எனது பெயரை கேட்கும்போது கிடைத்த மகிழ்ச்சியை விவரிக்க இயலாது. இந்த வீட்டுக்குள் வந்த போது ஒரு வித தனிமை என்னிடம் இருந்தது. தற்போது நிறைய அனுபவங்கள் இருக்கிறது’ என்றார்.

 

தர்ஷனோ ‘ எனக்கு சில நேரங்களில் தனியறைக்கு அழைத்து ஆறுதலாக பேசியிருக்கிறீர்கள். பரோட்டாவும் சிக்கனும் தாருங்கள்’ என்றார்.

 

சேரன்’ ஒரு குரலுக்கு கட்டுபட்டு இருப்பது என்ற உணர்வு இங்கே வந்துதான் கிடைத்தது. உங்களை நேசிக்கிறேன்’ என்றார்.

 

சாண்டி ‘ உங்களை பார்த்தால் கட்டியணைத்து முத்தமிட வேண்டும். அவ்வளவு உங்களை பிடிக்கும். எப்போதும்போல் இல்லாமல் நீங்களும் எங்களை கலாய்ப்பது எங்களுக்கு பிடித்திருக்கிறது’ என்றார்.

 

தொடர்ந்து பேசிய பிக்பாஸ் ‘ நீங்கள்  அனைவரும் நன்றாக பேசினீர்கள். இப்போது அனைவரும் சமைத்து சாப்பிட்டு. தூங்குங்கள்’ என்றார்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...