???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு 0 அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது 0 ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் 0 நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! 0 கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 0 தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் 0 கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் 0 சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 0 இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் 0 குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 0 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து! 0 பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் 0 தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸில் கலந்துகொள்ள சொன்னதே விஜய் சேதுபதிதான்! – சேரன் என்ன சேதுபதி இப்டி பண்ணிட்டீங்க!

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   01 , 2019  04:39:51 IST

பிக்பாஸின் நேற்றைய எபிசோட்   ‘என் வீட்டுல நான் இருந்தேனே,  எதிர் வீட்டுல அவ இருந்தாளே’  என்ற பாடலுடன்  தொடங்கியது.

 

போடு ஆட்டம் போடு என்ற டாஸ்கின்   பகுதி மீண்டும் தொடங்கியது.  சிறிது நேரம் மட்டுமே இந்த டாஸ்க் நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து  மதுமிதா அனைத்து போட்டியாளர்களுக்கும்  நடிப்பு சொல்லிக்கொடுத்தார்.  மனதில் இருந்து சிரிப்பது எப்படி என்றும் மனதில் துயரத்தை வைத்துக்கொண்டே வெளியில் சிரிப்பது எப்படி என்றும்  விவரித்தார்.  நடிப்பில் தனக்கு நடைபெற்ற அனுபவத்தை விவரித்தார். அவருக்கு கிடைத்த பிச்சைக்காரி கதாபாத்திரத்தில் எப்படி  நடித்தார் என்றும் கூறினார்.

 

இதைத்தொடர்ந்து ’மொட்டை கடிதாசி’ டாஸ்க் கொடுக்கப்பட்டது. வீட்டில் இருக்கும்  போட்டியாளர்கள் யாரிடம்  வேண்டுமானாலும்  கேள்வி கேட்கலாம்.  ஆனால் அதை யார் கேட்டது என்று வெளியில் சொல்லத்தேவையில்லை.  கன்ஃபஷன்  அறைக்கு ( தனியறை) போட்டியாளர்கள் சென்று  கேட்க நினைக்கும் கேள்விகளை துண்டு காகிதத்தில் எழுத வேண்டும். 

 

கிடைத்தது வாய்ப்பு என்று போட்டியாளர்கள், சர்ச்சையான கேள்விகளை கேட்ட, அழுகை, சிரிப்பு என்று உணர்வுப்பூர்வமாக நகர்ந்தது.  கன்ஃபஷன் அறைக்கு சென்ற அபிராமி  சாக்‌ஷிக்கான கேள்வியை எழுதினார். ‘ ஒருவரிடம் தனக்கு பிரச்னை ஏற்படுகிறது என்று கூறுகிறார். மீண்டும் அவருடனே நெருக்கமாகவும் பேசுகிறார். இந்த மாற்றத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் எனக்கு நல்ல தோழியாக இருந்தாலும். அவர் எப்படிப்பட்டவர் என்பதை கணிக்க முடியவில்லை’ என்று எழுதுகிறார்.

 

இதைத்தொடர்ந்து மதுமிதாவிற்கான கேள்வியை எழுதினார் ‘ எப்போதும் கடவுள் கடவுள் என்று சொல்கிறார்.  ஆனால் டாஸ்க் என்று வந்துவிட்டால் சிலரை குறிவைத்து அவருக்கு எதிராக செயல்படுவது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார்.

 

இதைத்தொடர்ந்து   ஷெரின், சாக்‌ஷிக்கான கேள்வியை எழுதுகிறார். ‘  அனைவரின் முன்னிலையில்  கவினை வெளியேற்ற வேண்டும் என்று கூறியது ஏன்? . இதைத்தொடர்ந்து கவினுக்கான கேள்வியை எழுதுகிறார்.  ‘  அனைவரின் முன்பு சாக்‌ஷி உங்களை வெளியேற்ற நினைக்கிறேன் என்று சொன்னது எப்படி இருந்தது. இனி உங்களுக்கும் சாக்‌ஷிக்குமான உறவு எப்படி இருக்கும்?

 

இதைத்தொடர்ந்து செல்லும் ரேஷ்மா  லாஸ்லியாவைப் பற்றிய கேள்வியை எழுதுகிறார்.  ‘திடீரென்று அன்பாக பேசுவதும், திடீரென்று ஆணவமாக பேசுவதும் ஏன், எது உங்கள் உண்மை முகம்?

 

தொடர்ந்து சாண்டிக்கான கேள்வியை எழுதுகிறார். ‘ ஆடுவது, மற்றவர்களை கலாய்ப்பதை தவிற  உங்கள் குணம் என்ன?’ என்று கேட்கிறார்.

 

இதைத்தொடர்ந்து மதுமிதா  முகெனுக்கான கேள்வியை எழுதுகிறார்.
 ‘ அபிராமியை தோழியாகத்தான் நினைக்கிறேன் என்று சொல்லும் நீங்கள்  தொடர்ந்து அவருடன் நெருக்கமாக இருப்பது ஏன்?  கைவினைப்பொருட்கள் செய்வது, பாடல் பாடுவதை தவித்து உங்கள் குணம் எப்படி இருக்கும் ? ’ என்று கேட்கிறார்.

 

இதைத்தொடர்ந்து லாஸ்லியாவிற்கான கேள்வியை எழுதும் மதுமிதா,  ‘ முதலில் பாடல் பாடிக் கொண்டும் , ஆடிக்கொண்டும் இருந்தீர்கள், யாருடனும் அதிகமாக பேசுவதுபோல் தெரியவில்லை. அவ்வப்போது ஆணவமாக நடந்துகொள்கிறீர்கள். உண்மையான குணத்தை வெளிக்காட்டுவதில் தயக்கம் காட்டுவது ஏன் என்று கேட்கிறார்.

 

இதைத்தொடர்ந்து சரவணன் சேரனுக்கான கேள்வியை எழுதுகிறார்’ பல படங்கள் இயக்கி  பேரும் புகழும் பெற்ற நீங்கள் ஏன் இந்த போட்டிக்கு வர வேண்டும்?  நீங்கள் பெற்ற புகழைவிடவா இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அதிகமாக புகழை தேடித்தரப் போகிறது?’ என்று கேட்கிறார்.

 

இதைத்தொடர்ந்து சாண்டிக்கான கேள்வியை எழுதுகிறார். ‘நடனமாடுவதை தவிர உங்களது உண்மையான முகம் என்ன?’ என்று கேட்கிறார்.

 

இதைத்தொடர்ந்து செல்லும் கவின் அபிராமிக்கான கேள்வியை எழுப்புகிறார். ‘ முதலில்  அழுது கொண்டு உணர்ச்சிவசப்பட்ட அபிராமி நிஜமா அல்லது இப்போதுபோல் எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் இருக்கும் அபிராமி  நிஜமா? ’ என்று எழுதுகிறார்.

 

இதைத்தொடர்ந்து செல்லும் முகென்  மதுமிதாவிற்கான கேள்வியை எழுதுகிறார் ‘வீட்டில் இருக்கும் அனைவரிடமும் அன்பாக இருப்பது ஏன்? அதற்கு என்ன காரணம்? .

 

தொடர்ந்து சேரனுக்கான கேள்வியை எழுதுகிறார் ‘போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பக்குவமாக நடந்துகொள்கிறீர்களா?  என்று எழுதுகிறார்.

 

இதைத்தொடர்ந்து செல்லும் தர்ஷன்  சேரனுக்கான கேள்வியை எழுதுகிறார். ‘போட்டியில் சாதுர்யமாக  வெற்றிப்பெற வேண்டும் என்பதற்கு ஏதேனும்  வழிமுறையை கடைப்பிடிக்கிறீர்களா?’  இதைத்தொடர்ந்து கவினுக்கான கேள்வியை எழுதுகிறார். ‘ சாக்‌ஷி-லாஸ்லியா- கவின் பிரச்சனையில் என்ன நடந்தது?’ என்று கேட்கிறார்.

 

தொடர்ந்து போட்டியாளர்கள் எழுதிய கேள்விகளுக்கான பதிலை சம்பந்தப்பட்ட போட்டியாளர்கள் சொல்கின்றனர்.  சாக்‌ஷிக்கும் தனக்கும் இடையில் என்ன நடந்து என்பதை வெளிப்படையாக பேசும் கவின்,  ஒருகட்டத்தில் கண்ணீர் விட்டு அழத்தொடங்கினார்.  தான் செய்த எல்லா தவறுக்கும் சாக்‌ஷியிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர் என்னை தவறாகத்தான் புரிந்துகொள்கிறார்.  இதற்கு மேல் தான் என்ன செய்வது என்று தெரியவில்லை என்கிறார்.

 

இதைத்தொடர்ந்து தன்னைப்பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் லாஸ்லியா ‘ மற்றவர்கள் பின்னால்போய் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை என்பதால், பல உரையாடலில் நான் பேசுவதில்லை.  புறம் பேசுவது எனக்கு பிடிக்காது. என்னைப்பற்றி புறம் பேசுகிறார்கள் என்பது எனக்கு தெரிந்தால் அவர்களிடமும் பேச மாட்டேன் என்கிறார்.

 

தான் யாருக்காகவும் பாடல் பாடவும் , ஆடவுமில்லை என்றும் தன்னை மகிழ்விக்க தனக்கு பிடித்த விஷயங்களை செய்கிறேன் என்று கூறினார்.  தன் உண்மையாக முகம் இதுதான், ஆனால் நீங்கள் தவறாக புரிந்துகொண்டால், அதை மாற்ற வேண்டாம் ,அந்த புரிதல் என்னை ஒன்றும் செய்யாது என்றார்.

 

இதைத்தொடர்ந்து பேசிய சேரன் ‘ மக்கள் என்னை மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இங்கே வந்தேன். விஜய் சேதுபதிதான் இந்நிகழ்ச்சிக்கு  செல்லுமாறு   கூறினார்.  எனது  எல்லா அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றும் அது மக்களுக்கு பயன்படும் என்றும் விஜய் சேதுபதி சொன்னார்.  எனக்கும் அது சரி என்று பட்டது’ என்றார்.

 

விஜய் சேதுபதி தப்பு பண்ணிட்டாரோ?

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...