???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்கும் 21-வயது இளைஞர்! 0 தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி 0 அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை 0 தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து 0 ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு 0 நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் 0 மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

’வேண்டும்.. வேண்டும்.. வறுத்த கோழி வேண்டும்’: பிக்பாஸ் போட்டியாளர்கள் போராட்டம்

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   31 , 2019  03:23:34 IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோட் ’ லாலா கடை சாந்தி’ என்ற பாடலுடன் தொடங்கியது. இந்த பாடல் முடியும்வரை கவின் தூக்கத்திலிருந்து எழவே இல்லை.

 

இதைத்தொடர்ந்து  வனிதா போட்டியாளர்களுக்கு ’ஜும்பா’ நடனம் சொல்லிக்கொடுத்தார். அவருக்கே ஜும்பா நடனம் தெரியவில்லை. ஏதோ சொல்லித்தர வேண்டும் என்று இஸ்டப்படி ஆடினார். அவரைப்போலவே மற்றவர்களும் ஆட முயற்சித்தனர். சாண்டி நடன அசைவுகளுக்கு ஏற்ப தாளம் போட்டார். அதனால் சும்பா நடனம் ஆடவில்லை.

 

தொடர்ந்து கவினுக்கு மாத்திரையும் டீயையும் கொடுத்தார் லாஸ்லியா. அதற்கு கவின் நன்றி கூறினார். இதற்கு லாஸ்லியா ‘ நன்றி ஏன் சொல்லுரீங்க’ என்று கேட்டார். அதற்கு கவின் ‘ சொல்லனும்னு தோனிச்சு’ என்றார். இருவரும் ஒருவரை ஒருவர் வாங்க போங்க என்று பேசிக்கொண்டது வினோதமாக இருந்தது. கவின் ‘ நான் நான்னாகவே இருக்கிறேன். நீ நீயாக இரு’ என்றார். ‘ஓ அப்போ நான்  கதைக்கக்கூடாதா? என்று லாஸ்லியா கேட்க, கவின் அமைதியானார். லாஸ்லியாவின் முகம் மாறியது. கிட்டதட்ட அழவே தொடங்கினார்’ நானாக வந்து உன்னிடம் பேச மாட்டேன்’ என்றார்.

 

உடனே கவின் ‘ நான் அப்படி சொல்லவில்லை’ என்று கூற மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிரித்துக்கொண்டனர். பிறகு பிக்பாஸ் வீட்டின் விதிமுறைகளை பற்றி லாஸ்லியா பேசினார்.’ பிக்பாஸின் விதிகளை நான்தான் சரியாக கடைபிடிக்கிறேன்’ என்று லாஸ்லியா கூறியதும் சாண்டி, சேரன், முகென், தர்ஷன் ஆகியோர் அவரை கிண்டல் செய்தனர். மேலும் குறும்படத்தில் பார்த்தோம் என்றனர்.

 

இதற்கு லாஸ்லியா சிரித்துக்கொண்டே ’ என்னிடம் பிக்பாஸ் மைக்கை சரியாக அணிந்துகொள்ள வேண்டும் என்று இதுவரை சொன்னதேயில்லை’ என்று கூறினார். அப்போது திடீரென்று பிக்பாஸ் குரல் ஒலித்து ‘ லாஸ்லியா மைக்கை சரியாக மாட்டிக்கொள்ளுங்கள்’ என்று சொன்னார். நேற்றைய எபிசோட் முழுக்க மூன்று முறை மைக் விஷ்யத்தில் பிக்பாஸ் லாஸ்லியாவை எச்சரித்தார்.

 

லாஸ்லியா மேக் அப் போடுவதை தர்ஷன் , சாண்டி, முகென் கிண்டல் செய்தனர்.

 

தொடர்ந்து தலைவர் போட்டி நடைபெற்றது. வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை புகழின் அடிப்படையில் மற்ற போட்டியாளர்கள் வரிசைப்படுத்த வேண்டும். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்களை  தனியாக அழைத்து மற்ற போட்டியாளர்கள் வரிசைப்படுத்திய முறையை விளக்கச்சொல்வார். இந்த போட்டியில் வனிதா வென்றதால் அவர் அடுத்த வாரத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

 

இதைத்தொடர்ந்து தங்களுக்கு வருத்த சிக்கன் வேண்டும் என்று போட்டியாளர்கள் சொன்னார்கள். இதற்காக உண்ணாவிரதம் இருக்கப்போகிறோம் என்று விளையாட்டாக போட்டியாளர்கள் போராட்டம் செய்தனர்.

 

’வேண்டும் வேண்டும் வறுத்த கோழி வேண்டும்’ என்று சாண்டி கோஷம் போட்டார். இதைத்தொடர்ந்து பிக்பாஸ்  வறுத்த சிக்கனை கொடுத்தார். பல நாட்கள் சாப்பிடாமல் இருந்தவர்கள்போல் சிக்கனைப் பார்த்ததும் போட்டியாளர்கள் வெளுத்து வாங்கினர்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...