???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு 0 அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது 0 ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் 0 நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! 0 கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 0 தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் 0 கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் 0 சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 0 இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் 0 குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 0 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து! 0 பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் 0 தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: லாஸ்லியாவின் அழுகைக்கு யார் காரணம்!

Posted : புதன்கிழமை,   ஜுலை   17 , 2019  01:44:18 IST

பிக்பாஸின் நேற்றைய எபிசோட் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது.

 

தனக்கு தண்ணீரைப்பார்த்தால் ஒத்துக்கொள்ளவில்லை என்று சாக்‌ஷியிடம் மோகன் வைத்யா சொல்கிறார். அதனால் தன்னை கழிப்பறை சுத்தம் செய்யும் குழுவில் இருந்து மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் சமையல் குழுவுக்கு செல்ல விரும்புகிறேன் என்று கூறினார்.

 

இதைத்தொடர்ந்து ரேஷ்மாவிடம் இதை சாக்‌ஷி கூறவே,திடீர் என்று இப்படி சொன்னால் என்ன செய்வது என்று கேட்டார். இதைத்தொடர்ந்து ரேஷ்மா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  இறுதியில் சம்மதித்தார். இத்துடன் இந்த பிரச்சனையை முடிக்காமல் மோகன் வைத்யாவிடம் ரேஷ்மா சொன்னதை சாக்‌ஷி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இந்த வீட்டில் யாரும் நேருக்கு நேர் பேசுவது கிடையாது என்றும் புறம் பேசுவதுதான் அதிகமாக இருக்கிறது என்றும் சாக்‌ஷி கூறினார்.

 

இதைத்தொடர்ந்து ரேஷ்மாவும், அபிராமியும் இந்த வாக்குவாதத்தில் தலையிட்டனர். ரேஷமாவிடம் என்னோடு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் என்னிடமே சொல்லு என்று மோகன் வைத்யா கூறுகிறார். ரேஷ்மாவும் எனக்கு எந்த வேறுபாடும் இல்லை நீங்கள் எந்த குழுவில் இருந்தாலும் சரி என்று கூறிவிடுகிறார். இதைத்தொடர்ந்து தங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை என்பதை நிரூபிக்க மோகன் வைத்யா ரேஷ்மாவுக்கும், அபிராமிக்கு (கன்னத்தில்) முத்தம் கொடுத்து வெளிக்காட்டுகிறார். 

 

இதைத்தொடர்ந்து சாக்‌ஷி கவினுக்கு ஸ்பெஷலாக கொடுத்த சாக்லேட்டை கவின் லாஸ்லியாவுக்கு கொடுத்துவிட்டார் என்பதை தெரிந்து கொண்ட சாக்‌ஷி கவின் மீது கோபித்துகொள்கிறார். இதை அறிந்த லாஸ்லியா  அந்த  சாக்லேட்டை கவினிடம் கொடுக்கச் செல்கிறார். கவினோ ‘ இந்த சாக்லேட்டை திருப்பி கொடுத்தால், எனது மனம் காயப்படும் என்று உனக்கு தெரியவில்லையா? என்று கேட்கிறார். சிறிது நேரம் யோசிக்கும் லாஸ்லியா சாக்லேட்டை மீண்டும் கவினிடம் கொடுத்து விடுகிறார்.

 

இதைத்தொடர்ந்து லாஸ்லியாவை சமாதானம் செய்ய கவின் முயற்சிக்கிறார். இந்த நேரத்தில் என்ன பிரச்சனை என்று சாண்டி கேட்கிறார்.

 

இதைத்தொடர்ந்து கவினும் சாக்லேட் சண்டையை பற்றி சொல்கிறார். உடனே சாண்டி ‘சரி வா அந்த  சாக்லேட்டை நாம் சாப்பிடலாம்’ என்கிறார். கவினும் ‘ சாக்‌ஷி மற்றும் லாஸ்லியாவை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்தால், சாக்லேட்டை நாம் பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறுகிறார்.

 

 

இதற்கு இடையில் லாஸ்லியா அழுதுகொண்டே சேரன் மீது சாய்கிறார். மேலும் அவர் எதற்கு அழுகிறார் என்று அனைவரும் கேட்கின்றனர், ஆனால் அவர் பதில் கூறவில்லை.   

 

இதைத்தொடர்ந்து ’டிக் டிக்’ என்ற டாஸ்க் நடைபெறுகிறது. ஒரு அறையில் பல கடிகாரங்கள்  இருக்கும். அதில் இரண்டு கடிகாரங்களில் மட்டும் ’அலாரம்’ ஒலி கேட்கும். அந்த இரு கடிகாரங்களை போட்டியாளர்கள் கண்டுபிடிக்க வேண்டும். 10 விநாடிக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே டாஸ்க். இந்த போட்டியில் முதலில் சாண்டி, மீரா மிதுன் கலந்துகொள்கின்றனர்.

 

18 விநாடிக்குள் இரு கடிகாரங்களையும் கண்டுபிடிக்கின்றனர். 8 விநாடிகள் கூடுதலாக சென்றதற்கு  மீராதான் காரணம் என்று கவின் நக்கல் செய்கிறார். இதனால் கடுப்பாகும் மீரா எல்லா பிரச்சனைகளுக்கும் தன்னைதான்  அனைவரும் குறை சொல்கின்றனர் என்கிறார்.

 

இதைத்தொடர்ந்து இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று நினைக்கும் வீட்டின் கேப்டன் சாக்‌ஷி அனைவரையும் அழைத்து மீட்டிங் போடுகிறார். ஆனால் இந்த  சந்திப்பு பிரச்சனையை குறைக்காமல் மேலும் பிரச்சனையை அதிகப்படுத்துகிறது.

 

இதனால் மேலும் மீரா தனிமைப்படுத்தப்படுகிறார். 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...