???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு 0 அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது 0 ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் 0 நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! 0 கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 0 தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் 0 கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் 0 சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 0 இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் 0 குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 0 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து! 0 பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் 0 தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: கதறி அழும் சாண்டி, கவின் - ஏன்?

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   07 , 2019  01:43:29 IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோட் முழுவதும் அழுகையாகவே இருந்தது. எபிசோட் தொடங்கியதும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

 

பிக்பாஸ் வீட்டின் வெளியிலிருந்து கருப்பு முகமூடி அணிந்த இரு நபர்கள் தட்டுபோல ஒன்றை வீசுவார்கள். அதை போட்டியாளர்கள் பிடிக்க வேண்டும். தட்டில் புள்ளிகள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதிக புள்ளிகள் பெறுகிறவர் வெற்றியாளர். இந்த போட்டியில் சாண்டி முதல் இடம் பிடித்தார். இதைத்தொடர்ந்து தனியறைக்கு (கன்பஷன் ரூம்) சென்ற சரவணன் ஏன் இன்னும் திரும்பி வரவில்லை என்று சாண்டி, கவின் மற்றவர்களிடம் கேட்டார்கள். இதைத்தொடர்ந்து ‘சரவணன் இனி போட்டியில் தொடரமாட்டார்’ என்று பிக்பாஸ் கூறினார்.

 

இதை கேட்ட சாண்டியும், கவினும் தேம்பித் தேம்பி அழுதனர். மேலும் சாண்டி கோபத்தில் தலையணையை தூக்கி எரிந்தார். சேரனும் தர்ஷனும் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தனர். இதைத்தொடர்ந்து மதுமிதாவும் அழுதார். சரவணன் குடும்பத்தில் யாருக்காவது அசம்பாவிதம் நடந்து விட்டதோ அதனால்தான் அவர் வெளியேறிவிட்டாரோ என்று பதறிய போட்டியாளர்கள் மேலும் அழுதனர்.

 

சரவணன் ஏன் வெளியேறினார் என்பதற்கு காரணம் சொல்லுங்கள் பிக்பாஸ் என்று மதுமிதா கதறி அழுதார்.  இதைத்தொடர்ந்து சரவணனின் குடும்பத்தினர் நன்றாகத்தான் இருக்கிறார்கள் என்றும் அவர் ஏன் நீக்கப்பட்டார் என்பது சனிக்கிழமையன்று உங்களுக்குத் தெரியவரும் என்று பிக்பாஸ் கூறினார்.

 

இதைத்தொடர்ந்து போட்டியாளர்கள் அவர்கள் வாழ்க்கையில் கடினமான காலத்தில் உதவிய நண்பர்கள் பற்றியோ அல்லது அவர்களுக்கு பிடித்த நண்பர்கள் பற்றியோ கூற வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் சாண்டியும்  கவினும் சரவணன் பற்றி பேசினர். அபிராமி, ஷெரின் இருவரும் தங்களின் தாயைத்தான் நெருங்கிய நண்பராக நினைப்பதாகக் கூறினார். இதைத்தொடர்ந்து மதுமிதா தனது திருமணத்தை எந்த சிக்கலும் இல்லாமல் நடத்தி வைத்தவர் நடிகை நளினி என்று கூறி அவருக்கு நன்றியைத் தெரிவித்தார். 

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...