???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு 0 தமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் உயிரிழப்பு 0 கல்லூரி செமஸ்டர் தேர்வு பற்றி முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் கைது 0 நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ் சீசன் 3: முட்டிக்கொள்ளும் மதுமிதா- வனிதா: காரணம் என்ன?

Posted : புதன்கிழமை,   ஜுலை   03 , 2019  04:42:30 IST

’’ டார்லிங் டார்லிங் ஓ டார்லிங் டார்லிங் பேபி’’ என்ற பாடலுடன் தொடங்கியது பிக்பாஸின் 9வது நாள். தன்னம்பிக்கை கொடுக்கும் வகையில் மதுமிதா பேச வேண்டும்  என்று பிக்பாஸ் உத்தரவிட்டார்.

 

இதைத்தொடர்ந்து மதுமிதா தன்னை பற்றி பேசத்தொடங்கினார். அப்பா இல்லாமல் வளர்ந்ததால் அதிக கட்டுப்பாடுகளுடன் வளர்ந்தேன். பெண்களுக்குள் கட்டிப்பிடித்துகொள்வதுகூட  எனக்கு வித்தியாசமாக தெரிகிறது என்று  அவர் பேச்சை தொடங்குவதற்குள் வனிதா குறுக்கிட்டு ’’நீ பேச வேண்டியதை விட்டுவிட்டு வேறு எதோ பேசுகிறாய். காலை கடனை முடிக்க வேண்டும். குளிக்க வேண்டும் என்று பேசு,” என்று சொல்கிறார். இதனால் மதுமிதா இதுபோல காமெடியாக பேசிவிடுகிறார்.

 

பிக்பாஸ் எதை எதிர்பார்த்து உன்னிடம் டாஸ்க் கொடுத்திருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு பேசு என்று மதுமிதாவிடம் கூறுகிறார் வனிதா.

 

மேலும் ’’தாலியை கழற்றி வைத்துவிட்டு போட்டிக்கு வருபவர்கள் மற்றவர்களை பற்றி பேசுகிறார்கள்’’ என்று கூறி மதுமிதாவை மேலும் வனிதா காயப்படுத்துகிறார்.

 

இதையடுத்து அபிராமி, ஷெரின், சாக்‌ஷி கூட்டணியை கைவிட்டுவிட்டு லோஸ்லியா பக்கம் தனது கவனத்தை செலுத்தியுள்ளார் கவின். ஆம், அவரைப் பார்த்து சிரிப்பதும், பாட்டு பாடுவதும், ஐ லவ் யூ சொல்வதும் என்று கவனத்தை தன் பக்கம் திருப்புகிறார். இதற்கிடையில், என்னவாக இருக்கும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், சிங்கம், ஓநாய், அன்னப்பறவை, யானை என்று 4 அணிகளாக பிரிந்து போட்டியில் பங்கேற்க வேண்டும்.

 

 இந்தப் போட்டியில் முதலில் சிங்கக் குட்டிகள் டீம் களமிறங்கியது. இப்பவே கண்ண கட்டுதே என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், வனிதாகலந்து கொண்டார். அவர் ஒரு வண்டியில் அமர்ந்திருக்கும் பீம் பாய் கால் கீழே படாத வண்ணம் அந்த வண்டியை தாங்கி பிடிக்க வேண்டும்என்பது தான். இந்தப் போட்டியில் வனிதா வெற்றி பெற்று 1000 மதிப்பெண்கள் பெற்றார். 

 


தொடர்ந்து ஓநாய்கள் அணிக்காக டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்தப் போட்டியில் தர்ஷன் மற்றும் சாக்‌ஷி இருவரும் கலந்து கொண்டனர்.பிக்பாஸ் கமலின் புகைப்படம் கலைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது. அதை சரியாக அடுக்குவதே டாஸ்க். ஆனால் இதில் தர்ஷன் மற்றும் சாக்‌ஷிஇருவரும் தோல்வியுற்றனர்.

 

 இதற்கும் மீரா தான் காரணம் என்று, மற்ற போட்டியாளர்கள் அவரை மோசமாக திட்டினர். இதனால்  மோகன்வைத்யா, கவின் ஆகியோர் மீது வெறுப்பைக் காட்டினார் மீரா. மேலும் முகெனிடம் ‘ நம்மை பிரிக்க இங்கு சிலர் முயற்சி செய்கிறார்கள்’’ என்று மீரா கூற. இதை சாக்‌ஷி  வனிதாவிடம் கூறுகிறார். இதை கேட்கும் அபியும் செமையாக கோபம் கொள்கிறார்.  

 

இனி என்ன நடக்கப்போகிறதோ? இதற்கிடையில் பிக்பாஸ் அரங்கத்துக்கு வெளியே போலீஸ் வனிதாவை இன்று தேடி வந்திருக்கிறது. அதுவும் பிக் பாஸ் ஏற்பாடு செய்த நிகழ்வு என்று நினைக்கவேண்டாம். இது  உண்மையான நிகழ்ச்சி!

 

ஆக மொத்தம் பிக்பாஸ் சூடு பிடித்துள்ளது!

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...