???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

’ஷெரின் நீங்க ரொம்ப அழகு’: வாரணமாயிரம் சூர்யாவாக மாறிய பிக்பாஸ்

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   20 , 2019  02:53:33 IST

பிக்பாஸ் வீட்டின் நேற்றைய  எபிசோட் தங்க முட்டையை பாதுகாப்பதிலிருந்து தொடங்கியது. போட்டியாளர்கள் காலைவரை தூங்காமல் தங்களது தங்க முட்டைகளை பாதுகாத்தனர். அசதியில் ஷெரின் தூங்கிவிட்டார்.

 

அப்போது அவர் முட்டையை சேரன் மறைத்து வைத்தார். தொடர்ந்து ஷெரினின் முட்டையை கவின் உடைத்தார். சாண்டியே போட்டியை விட்டு விலகுகிறேன் என்று கூறியதால் முகென் அவரின்  தங்க முட்டையை உடைத்தார். டாஸ்க் சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.

 

இதற்கு இடையில் சாண்டி மீண்டும் தனது கதை சொல்லும் படலத்தை தொடங்கினார். இரவு முழுக்க தூங்காமல் இருந்ததால் சேரனுக்கு இடுப்பு பிடித்துக்கொண்டது. அவரால் நடக்கக்கூட முடியவில்லை. சேரனுக்கு பெரிதாக யாரும் உதவி செய்ததுபோல் தெரியவில்லை. முகெனும் தர்ஷனும் சாண்டியும் அவருக்கு பெல்ட்டு அணிவித்து உதவினர்.

 

தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்களை தனியாக அழைத்து டுக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பிக்பாஸ் கேட்டார். அப்போது ஷெரின் குடும்பத்தினரை பார்க்காமல் இருப்பது கடினமாக இருக்கிறது என்று பேசத்தொடங்கினார். ஆனால் பிக்பாஸ் என்ன கேள்வி கேட்டர் என்பதை மறந்துவிட்டு மனதில் இருப்பதை வெளிப்படுத்தியதால். கேள்வியை மீண்டும் கேளுங்கள் என்று பிக்பாஸிடம் சொன்னார். ஆனால் பிக்பாஸோ ‘ஷெரின் நீங்க ரொம்ப அழகாய் இருக்கீங்க’ என்றார்.

 

சில நாட்களுக்கு முன்பு தான்  அழகாய் இருப்பதாய் பிக்பாஸ் கூற வேண்டும் என்று ஷெரின் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிக்பாஸ் ’தன்னை அழகாய் இருக்கிறாய்’ என்று சொல்லிவிட்டார் என்று ஷெரின் போட்டியாளர்கள் அனைவரிடத்திலும் கூறினார்.

 

தொடர்ந்து ஷெரின் தனியாக பேசிக்கொண்டிருந்தார். ’ பிக்கி பேபி உங்களை மிஸ் பண்ணுவேன். நான் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் அழுதுவிடுவேன் என்று எனது நண்பர்களுக்கு தெரியாது. இதை பார்த்து அவர்கள் தெரிந்திருப்பார்கள். நான் இங்கேயே தங்கி விடுகிறேன். நீங்களும் என்னோடு இப்படியே பேசுங்கள். ஆனால் அப்படி செய்ய முடியாது. உங்களுக்கு நிறைய வேலை இருக்கும் அப்படிதானே?..’ என்றார்.

 

 ஷெரின் பிக்பாஸை ’பிக்கி பேபி’ என்று அழைப்பதே தனியழகுதான்!

 

தொடர்ந்து டிக்கெட் டூ ஃபினாலேவின்  8 வது டாஸ்க் நடைபெற்றது. போட்டியாளர்களுக்கு தனித்தனியாக கூடை வைக்கப்பட்டிருக்கும். இந்த கூட்டையில் வெள்ளை பந்துகள் இருக்கும். நடுவில் ஒரு கூடையில் மஞ்சள், சிவப்பு பந்துகள் இருக்கு. டாஸ்க் பசர் அடித்ததும் போட்டியாளர்கள் மற்றவர்கள் கூடையில் சிவப்பு பந்துகளை போட வேண்டும்.  சிவப்பு பந்துகள் கூடையில் விழுந்தால் 2 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

 

இந்த போட்டியில் லாஸ்லியாவை சிவப்பு பந்தை போடவிடாமல் சாண்டி தடுக்கும்போது அவர் கீழே விழுந்துவிட்டார். அப்போது கவின் அவருக்கு உதவ சென்றதால் டாஸ்க் தடைபட்டது. இதனால் கடுப்பான ஷெரின் கவினின் எல்லா பந்துகளை தனதுகூடையில் போட்டுவிட்டார். தொடர்ந்து  ஷெரின் ‘ விளையாட்டுக்கு வரவில்லை என்றால் வர வேண்டாம் என்றார்’. இதற்கு பதிலளித்த கவின் ‘நீங்கள் எல்லாம் என்ன நியாயமாகவா விளையாடுகிறீர்கள்?’ என்றார்.

 

 

இதனால் கோபமடைந்த ஷெரின் தனது கூடையை காலால் உதைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றார். தர்ஷன் போய் அவரை சமாதானப்படுத்தினார்.

 

முதுகு வலியில் பாதிக்கப்பட்ட சேரனே போட்டியை சரியாக விளையாடிய போது லாஸ்லியா விழுந்தது என்பது அவ்வளவு முக்கியமான விஷயமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

தொடர்ந்து டாஸ்க் நடைபெற்றது. இறுதியாக முகென் 36 புள்ளிகளுடனும் சாண்டி 32 புள்ளிகளுடனும் ஷெரின் மற்றும் தர்ஷன் 30 புள்ளிகளுடனும் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளனர். சேரன் 27 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் லாஸ்லியா  23 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திலும் கவின் 18 புள்ளிகளுடன் ஏழாம் இடத்திலும் இருக்கின்றனர்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...