???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி! 0 ஜூன் 1 முதல் கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி 0 தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு 0 ஆறுமுகம் தொண்டைமான் மரணம்! 0 முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை 0 விமானம், ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி 0 5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்! 0 இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை 0 நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு: வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா ஆலோசனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தளபதி மம்மூட்டி - ரஜினி நட்பை தோற்கடித்த கவின்-பீட்டர் நட்பு!

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   14 , 2019  03:37:12 IST

பிக்பாஸ் வீட்டின் நேற்றைய எபிசோடில் கவின் நண்பர் கொடுத்த ’ப்ளார்’தான் பரவலாக பேசப்பட்டது.

 

விஜய் திரைப்பட பாடலுடன் தொடங்கிய நேற்றைய நாளில் கவினை பார்ப்பதற்கு அவரது நண்பர் ஆன்டனி பிரதீப் வந்திருந்தார். இவரை ஆண்டனி பிரதீப் என்று சொல்வதைவிட அருவி திரைப்படத்தில் வரும் பீட்டர் என்று சொன்னால்தான் எல்லாருக்கும் தெரியும்.

 

’ஃபிரண்ட போல யாரு மச்சான்... ‘ என்ற பாடல் ஒலிபரப்ப பிக்பாஸ் வீட்டுக்குள்  நுழைந்த ஆண்டனி பிரதீப் ஒரு நல்ல நண்பன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நடந்துகொண்டார்.

 

வீட்டினுள் நுழைந்ததும் கவினிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறினார் பிரதீப். அவர் பேசுவதற்கு முன்னால் கவின் ‘நீ என்ன பேசப்போகிறாய் என்று தெரியும் மச்சான்’..என்று ஆரம்பித்தார். ஆனால் பிரதீபோ ‘ நீ நினைப்பதை நான்  பேசப்போவதில்லை. நீ யாருக்கும் விளையாட்டை விட்டுத்தர வேண்டாம். அவரவர் விளையாட்டை அவரவர் பார்த்துகொள்வார்கள். உன்னையே நம்பி இருக்கும் உனது குடும்பத்தையும் உனக்காக உதவிய நண்பர்களையும் ஏன் மறந்தாய் ?. உனது சுயநலத்தை மட்டுமே ஏன் பெரிதாக பார்க்கிறாய்?’ என்றார். இதற்கு பதிலளித்த கவின் ‘இந்த போட்டிக்கு வந்தபோது ஒரு உதவேகத்துடன்தான் இருந்தேன் என்பது உனக்கும் தெரியும். ஆனால் இங்கே சிலர் எனக்கு நண்பர்களாகிவிட்டார்கள். அவர்களுக்காக நான் யோசிக்க வேண்டும்’ என்றார்.

 

தொடர்ந்து பேசிய பிரதீப் ’உன்னை மற்ற போட்டியாளர்கள் காப்பாற்றி வருகிறார்கள். நீ தனியாகத்தான் இந்த போட்டியில் போராட வேண்டும். சாதகமான சூழ்நிலையிலே இருந்துவிட நீ நினைப்பது சரியான விஷயம் இல்லை’ என்றார்.

 

உடனே கவின் ‘ நீ லாஸ்லியாவிடம் ஏதும் பேசாதே’ என்று சிரித்துகொண்டே சொனார். இதன்பிறகு மற்ற போட்டியாளர்களுடன் அமர்ந்து கொண்டு கவினும் பிரதீப்பும் பேசினர். ’இந்த போட்டியில் உங்களை சந்தித்ததால்தான் கவின் உங்களிடம் மரியாதை குறைவாக நடந்துகொண்டார். அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்’ என்று சேரனிடம் பிரதீப்  கூறினார். தொடர்ந்து பேசிய அவர் ‘ கவின் தன்னை புத்திசாலியாக நினைத்துகொண்டு செய்யும் விஷயங்கள் தவறாக போய் முடிகிறது. தனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் ஒருவனுக்கு வரக்கூடாது. அது ஒருவரை அழித்துவிடும்’ என்றார். மேலும் பேசிய அவர்’ வனிதாவும் ஷெரினும் விளையாட்டை நன்றாக விளையாடுகிறார்கள். வனிதாவுக்கு வயது குறைவாக இருந்திருந்தால் அவரே நான் திருமணம் செய்துகொள்வேன். தாய் சிங்கம்போல் தனது குழந்தைகளை பார்த்துகொள்கிறார். மற்றவர்களை பார்த்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை. எதிர்மறையான விமர்சனம் அவருக்கு வந்திருந்தாலும் துணிவுடன் போராடுகிறார்’ என்றார்.

 

உடவே ஷெரின் குறுக்கிட்டு ‘ அவர் தனியாகத்தான் இருக்கிறார்’ என்று நக்கலாக பேசினார். தொடர்ந்து பேசிய பிரதீப் ‘ நான் மட்டும் வீட்டுக்குள் இருந்தால் முதலில் கவினையும் பிறகு சாண்டி, தர்ஷன், முகென், ஆகியோரை வெளியே அனுப்பி இருப்பேன். அதன்பிறகு வனிதா, ஷெரின், சேரனுடன் போட்டிபோட்டு  விளையாடியிருப்பேன்’ என்றார்.

 

’இந்த போட்டியில் கவின் வெல்ல வேண்டும் என்று நினைத்தால் யாரும் அவருக்கு உதவாதீர்கள். ஆனால் அவருக்கு உதவுவதுதான் உங்களின் போட்டி தந்திரம் என்றால் அதை தொடர்சியாக செய்யுங்கள். குறிப்பாக சாண்டிக்கும் லாஸ்லியாவுக்கும் இதை சொல்கிறேன்’ என்றார் பிரதீப்.

 

தொடர்ந்து கவினை ஃபிரீஸ் என்று பிக்பாஸ் சொன்னார். கவினின் கண்ணாடியை கழற்றிய பிரதீப் ‘ நான் உன்னை அறையப்போகிறேன். நீ பிக்பாஸ் போட்டியில் வெற்றிபெற்று. பெரிய ஆளாக மாறினால், மேடையில் அழைத்து என்னை திருப்பி அடித்துக்கொள்’ என்று கூறிவிட்டு பலமாக அறைந்தார். கவினின் கன்னம் சிவந்தது. இதைக் கண்ட மற்றபோட்டியாளர்கள் வாயடைத்துப்போனார்கள். சாண்டி மட்டும் ‘ஏன் இப்படி செய்தீர்கள்’ என்றார். உடனே கவின் ‘ இதை என்னால் மட்டும் புரிந்துகொள்ள முடியும்’ என்றார்.

 

வீட்டிலிருந்து பிரதீப்  சென்றபோதிலும் போட்டியாளர்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. ‘ கவினுக்கு இந்த அறை தேவைதான். ஆனால் மற்றவர்கள் முன்பு இதை செய்திருக்க வேண்டாம். இப்படி நடந்தது சரியா? இல்லையா? என்றே புரியவில்லை’ என்று சேரனிடம் ஷெரின் சொன்னார். இதற்கு சேரன் ‘ என்னையே அடித்ததுபோல் இருந்தது’ என்றார்.

 

இதைத்தொடர்ந்து ஷெரினின் தோழியும் அம்மாவும் வந்தார்கள் ஷெரின் அம்மா நகைச்சுவையாக பேசினார். சாண்டியுடன் டூயட் நடனம் ஆடினார். தர்ஷனைப் பார்த்து ‘ ஹாய் ஹேண்ட்சம்’ என்றார். மேலும் வனிதாவிடம்’ நீ மற்ற பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறாய்’ என்றார்.

 

ஷெரினின் தோழி  அவருக்கு அறிவுரை வழங்கினார். ‘ வனிதாவை நம்ப வேண்டாம். அவரை எனக்கு பிடிக்கவில்லை. அந்த பிரச்சனையின்போது தர்ஷன் உனது பக்கத்தின் நியாயத்தை எடுத்துக் கூறினார்’ என்றார்.

 

அம்மாவிடம் தனியாக பேசிய ஷெரின் ‘ இதை நான் யாரிடமும் சொல்லவில்லை. சேரன் சாரைப் பார்த்ததும்தான் அப்பாவின் அன்பு எப்படி இருக்கும் என்ற புரிந்தது. அவர் எனக்கு பல நேரங்களில் ஆறுதலாக இருந்திருக்கிறார்’ என்றார்.

 

இதற்கு ஷெரின் அம்மா ‘ நீ இதை முன்பே கூறியிருந்தால். அப்பாவையும் கூப்பிட்டிருப்பேன். நீதான் அவரை பிடிக்கவில்லை. பார்க்க விரும்பவில்லை என்றாய்’ என்றார்.

 

இதற்கு ஷெரின் ‘ அம்மா எனக்கு அப்போது தெரியவில்லை. சேரன் சாரை பார்த்ததும்தான் புரிந்தது’ என்றார்.

 

 

 

இதைத்தொடர்ந்து ஷெரினின் தாய் மற்றும் தோழி வெளியேறினர். சாண்டி தனது மகள் ’லாலா-வை பார்ப்பதற்காக நெடு நேரம் காத்திருந்தார். அவர் நடனம் ஆடிக்கொண்டும் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தாலும் அவரின் ஏக்கம் கண்களில் தெரிந்தது. சிறிதுநேரம் கழித்து சாண்டியின் மகளும் மனைவியும் வீட்டுக்குள் வந்தனர். லாலாவைப் பார்த்ததும் சாண்டி அழத்தொடங்கினார். லாலாவை தன்னிடம் ‘வா வா’ என்று அழைத்து மீண்டும் மீண்டும் அழுதார். ’குழந்தை முன்புமாதிரி என்னிடம் விளையாடவில்லை. என்னை மறந்துவிட்டாள்’ என்று அழுதார். சாண்டியின் மனைவி ‘ அப்படியெல்லாம் இல்லை. நீங்கள் வெளியே வந்து நான்கு நாட்கள் பழகினால்போதும் சரியாகிவிடும் ‘ என்றார். 

 

 

ஆனால் சாண்டி மீண்டும் மீண்டும் இதையே சொன்னார்.  லாலாவிடம் மற்றபோட்டியாளர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.

 

சாண்டியும் மனைவியும் தனியாகப் பேசிக்கொண்டனர்.’ இன்னும் 25 நாட்கள்தான் இருக்கிறது. நீங்கள் எப்படியாவது சமளிக்க வேண்டும் என்பதால்தான் லாலாவை இங்கே கொண்டு வந்தேன்’ என்றார்.

 

ஆனால் சாண்டியோ ‘ எப்படி இருக்க போகிறேன். இப்போதே அவளுக்கு என்னை நினைவில் இல்லை’ என்றார்.

 

வீட்டின் வெளியில் மழை பெய்துகொண்டிருந்தது. குடையுடன் சாண்டியும் குழந்தையும், அவரது மனைவியும் பேசிக்கொண்டிருந்தனர்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...