???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை 0 அரசியலில் சிறந்த வாய்ப்பினை பா.ஜ.க. எனக்கு ஏற்படுத்தி கொடுத்தது: தமிழிசை 0 மாணவி ஃபாத்திமா மரண வழக்கு: கேரளத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை 0 திருமாவளவனை தரம் தாழ்த்தும் பிற்போக்காளர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது: பா.ரஞ்சித் 0 மாவட்ட ஆட்சியரை விமர்சித்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு! 0 காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திப்பு 0 நித்தியானந்தா மீது கடத்தல், மிரட்டல் பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு! 0 காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பக்கம் முடக்கம்! 0 மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு 0 மாநில தலைமை தகவல் ஆணையர் தேர்வில் வெளிப்படைத்தன்மை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 'தல' அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா?: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 0 கோவை விபத்தில் காலை இழந்தப் பெண்ணுக்கு வேலை கோரி மனு 0 தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம் 0 சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்பப் பெற வேண்டும்: காஷ்மீர் எம்.பிக்கள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சாண்டி நரி , வனிதா கழுதைப் புலி : பிக்பாஸ்

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   07 , 2019  03:01:41 IST

பிக்பாஸின் நேற்றைய எபிசோட்  விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. தர்ஷனுக்கும் ஷெரினுக்கும்  உறவு இருக்கிறது என்று வனிதா கூறியதை நினைத்து ஷெரின் அழுதுகொண்டே இருந்தார்.  

 

மேலும் வீட்டில் இருக்கும் யாரிடமும் அவர் பேசவில்லை. ஷெரினின் இந்த நிலையைக்கண்டு தர்ஷன் கவலையடைந்தார்.  இதைத்தொடர்ந்து ஷெரினிடம் பேசிய தர்ஷன் ‘ நீ என் பின்னால் சுற்றுகிறாய் என்று நான் நினைக்கவில்லை.  உனக்கு என் மீது காதல் இருக்கிறது என்று மற்றவர்கள் கூறியதற்காக ஏன் நீ அழ வேண்டும்.  வெளியே இருக்கும் எனது காதலியின் மீது உங்களைவிட எனக்கு அக்கறை அதிகம்.  வெளியே என்ன நடந்தாலும் அதை சமாளித்துகொள்ள எனக்கு தெரியும்’ என்றார்.

 

இதற்கு ஷெரின் ‘ அவர்கள் உன்னை ஒன்றும் சொல்லவில்லை. என்னிடம்தான் எல்லாவற்றையும் சொல்கிறார்கள். ஒரு முறை சொன்னால் பரவாயில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் அதையே பேசுவது  சரியா?  நான் உன் மீது ஒரு தலைக்காதல் கொண்டிருக்கிறேன் என்று அவர்கள் சொல்லவில்லை நாம் தவறான உறவில் இருக்கிறோம் என்று  கூறுகிறார்கள்’ என்றார்.

 

உடனே தர்ஷன்’ இதை கேட்டு நீ சிரித்திருக்க வேண்டும். நமக்கிடையே நல்ல நட்பு மட்டும்தான் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். மேலும்  உனது செயல்பாடுகள் எதுவும் என்னை பாதிக்கவில்லை. நான் போட்டி மனப்பான்மையை இழக்கும்போதெல்லாம்  உனது ஆறுதலால்தான்  மீண்டும் போட்டி மனப்பான்மையை பெற்றிருக்கிறேன்’ என்றார்.

 

இதைத்தொடர்ந்து ஷெரினும் தர்ஷனும் ஒருவரை  பார்த்து ஒருவர் சிரித்துக்கொண்டனர். ஷெரின் சமாதானமானார். இதைத்தொடர்ந்து இந்த வாரம் லக்‌ஷுரி பட்ஜெட்  மதிப்பெண் முழுவதுமாக வழங்கப்பட்டது.

 

இந்த வாரத்திற்கான டாஸ்கை சிறப்பாக செய்தவர்களாக தர்ஷன் , சேரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த வாரம் முழுவதும் சிறப்பாக விளையாடிய போட்டியாளராக லாஸ்லியா தேர்வு செய்யப்பட்டார்.  சரியாக விளையாடாத போட்டியாளர் கவின்.  

 

தொடர்ந்து  விருது வழங்கும் விழா நடைபெற்றது. விருந்தினராக வந்திருக்கும் சாக்‌ஷி, மோகன் வைத்யா, அபிராமி ஆகியோர் போட்டியாளர்களுக்கு விருது வழங்கினர்.

 

லாஸ்லியாவுக்கு பச்சோந்தி விருது வழங்கப்பட்டது. இதை என்னால் ஏற்க முடியாது என்று மேடையிலே அதை தூக்கி எறிந்தார் லாஸ்லியா. லாஸ்லியாவின் இந்த செயலால் கோபமடைந்த  மோகன் வைத்யா மரியாதையுடன் நடந்துகொள்ளுமாறு கூறினார்.

 

மேலும் சாக்‌ஷி ‘விருந்தினருக்கும் மரியாதை இல்லை என்பதால். நான் விருது வழங்கப்போவதில்லை’ என்றார்.  பிறகு லாஸ்லியாவும் சாக்‌ஷியும் சண்டையிட்டனர்.  இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் வாயை மூடு என்று கூறினர்.

இந்த பிரச்சனையின்போது கவின் தலையிடவே இல்லை. அமைதியாகவே இருந்தார்.

 

லாஸ்லியாவுக்கு பச்சோந்தி விருது கொடுத்தது தவறு என்று சேரனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

தொடர்ந்து முகெனுக்கு கிளி , தர்ஷனுக்கு கழுகு,  சாண்டிக்கு நாய் ,  கவினுக்கு தவளை , வனிதாவுக்கு கொசு, பசு, கழுதைப் புலி என்ற மூன்று விருதுகளும்,  சேரனுக்கு யானையும்  ஷெரினுக்கு மின்மினி பூச்சி விருதும் வழங்கப்பட்டன. மேலும் லாஸ்லியாவுக்கு நாய் விருதும் வழங்கப்பட்டது. இதை அவர் பெற்றுக்கொண்டார். click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...