???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்கும் 21-வயது இளைஞர்! 0 தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி 0 அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை 0 தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து 0 ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு 0 நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் 0 மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சூழ்ச்சியின் கதாநாயகி வனிதா!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   05 , 2019  02:05:31 IST

பிக்பாஸின் நேற்றைய எபிசோட் முழுவதும் காதல் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தாளிகளாக சாக்‌ஷி, அபிராமி, மோகன் வைத்யா வந்தது சாண்டி, கவின், தர்ஷன் ஆகியோருக்கு பிடிக்கவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்தது. வழக்கம்போல் காலை பாடல் ஒலித்தபோது சாக்‌ஷியும் முகெனும் உற்சாகமாக ஆடினர்.

 

இதைத்தொடர்ந்து போட்டியாளர்கள் தனிக் குழுக்களாக பிரிந்து விவாதிக்கத்தொடங்கினர். வனிதா சாக்‌ஷியுடன் சேர்ந்துகொண்டு கவின் - லாஸ்லியா விவகாரத்தை மீண்டும் எடுத்துப் பேசினார். ’காதலால் இங்கு அதிகம் பேருக்கு பிரச்சனை இருக்கிறது’ என்றார் வனிதா.

 

இதற்கு இடையில் ஷெரின் பற்றி பேச்சு திரும்பியது. ’ஷெரின் போட்டியில் கவனம் செலுத்தாமல் தர்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்’ என்று வனிதா கூறினார்.  இதற்கு ஷெரின் ’எனக்கு தடுமாற்றம் ஏற்பட்டது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால் தர்ஷனுக்கும் எனக்கும் இடையில் நட்போ காதலோ இல்லை. இதை மீண்டும் மீண்டும் பேசி பெரிதுப்படுத்த வேண்டாம்’ என்று கூறினார்.

 

உடனே வனிதா ‘நீதான் என்னிடம் வந்து அழுதாய். நான் ஏன் உன்னைப் பற்றி தேவையில்லாமல் பேசப்போகிறேன்’. என்றார்.  இதற்கு ஷெரின் ‘ நீங்கள்தான் இதை தொடங்கி வைத்தீர்கள். மீண்டும் மீண்டும் இதை ஏன் பேச வேண்டும். இனி இதைப் பற்றி பேச வேண்டாம்’ என்று கூறினார்.

 

தொடர்ந்து அபிராமியிடம் பேசிய சாண்டி ‘ நீ மட்டும்தான் எப்படி போனாயோ அப்படியே திரும்பி வந்திருக்கிறாய். ஆனால் அந்த இரண்டு பேர் பழி வாங்க வேண்டும் என்றே வந்திருக்கிறார்கள்’ என்றார்.

 

இதற்கு அபிராமி ‘ நான் உங்களோடு சந்தோஷமாக இருக்கத்தான் வந்திருக்கிறேன். அவர்கள் ஒரு திட்டத்துடன்தான் இங்கே வந்திருக்கிறார்கள்’ என்றார்.

 

பிறகு போட்டியாளர்களுக்குள் விவாதம் நடைபெற்றது. அபிராமி, மோகன் வைத்யா, சாக்‌ஷி இந்த விவாதத்தின் நடுவர்கள். ஷெரின், வனிதா, சேரன், தர்ஷன் ஒரு அணியாகவும் லாஸ்லியா, கவின் , சாண்டி, முகென் ஒரு அணியாக  விவாதத்தில் கலந்துகொண்டனர். லாஸ்லியா மரியாதை குறைவாக நடந்துகொள்கிறார் என்று வனிதா,  ஷெரின் குறை கூறினர். இதற்கு லாஸ்லியா முதலில் மன்னிப்பு கேட்டார்.

 

இதைத்தொடர்ந்து மன்னிப்பு என்ற சொல்லுக்கும் வீட்டில் மதிப்பு இருக்கிறதா? இல்லையா ? என்ற விவாதம் எழுந்தது, அப்போது பேசிய லாஸ்லியா மன்னிப்பு கேட்பதால் இங்கே யாரும் நல்லவர்களாக மாறப்போவதில்லை என்று கூறினார்.

 

இந்த விவாதத்திலும் கவின் - லாஸ்லியா காதல் பற்றிய சர்ச்சை மீண்டும் எழுந்தது.

 

விவாதத்தின் முடிவில் வனிதாவின் அணி வெற்றியடைந்தது என்று நடுவர்கள் அறிவித்தனர்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...