???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்!- தொல்.திருமாவளவன் 0 தமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு 0 குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி 0 அதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா?: அமைச்சர் ஜெயக்குமார் 0 எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா 0 கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி! 0 திருமாவளன் சகோதரி கொரோனாவால் மரணம் 0 கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்! 0 நாடக இயக்குநர் அல்காசி மரணம்! 0 5,8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் 0 தமிழகத்தில் ஒரே நாளில் 109 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு 0 தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு 0 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார் 0 ஆளுநர் மாளிகை சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ரத்து
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சாக்ஷியின் வருகையால் ஷாக்கான கவின்!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   04 , 2019  02:43:30 IST

பிக்பாஸ் வீட்டின் நேற்றைய எபிசோட் ’ரங்கு ரங்கம்மா ரத்தம் ஊறும் தங்கம்மா’ என்ற பாடலுடன் தொடங்கியது. கடுமையான டாஸ்க் கொடுக்கவில்லையே என்று நெட்டீசன்களும் பார்வையாளர்களும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதை உணர்ந்துகொண்ட பிக்பாஸ் தலையணை செய்யும் தொழிற்சாலையாக வீட்டை மாற்றியது. இதற்கு முன்பாக நேற்றைய சண்டையின் மிச்சம் இன்றும் தொடர்ந்தது, ’வைல்டு கார்டில்’ உள்ளே வந்ததால் வனிதா வெற்றியடைவது ஏற்றதாக இருக்காது என்று கவிக்கு ஆதரவாக இருப்பவர்கள் நினைக்கிறார்கள் என்பதால் இதை தெளிவுப்படுத்தும் வரை நான் விளையாட மாட்டேன் என்று மைக்கை அகற்றினார் வனிதா.

 

வெகு நேரமாகியும் வனிதா மைக்கை அணியவில்லை. இதனால் பிக்பாஸ் வனிதாவை கன்பஷன் அறைக்கு அழைத்தார். உள்ளே சென்ற வனிதா ‘ மக்கள் விரும்பியதால்தான் நான் உள்ளே வந்தேன். ஆனால் இங்கே இருப்பவர்கள் அதை காரணமாக சொல்லி நான் வெற்றியடையக்கூடாது என்று நினைக்கிறார்கள்’ என்றார். இதற்கு பிக்பாஸ் ‘இதை எல்லாம் மக்களும் பார்த்துகொண்டிருக்கிறார்கள். அவர்களிடம்தான் இறுதி முடிவு இருக்கிறது. எனவே போட்டியை தொடர்ந்து விளையாடுங்கள்’ என்றார்.

 

இதைத்தொடர்ந்து டாஸ்க் தொடங்கியது. வனிதா, சேரன், தர்ஷன், ஷெரின் ஒரு அணியாகவும் லாஸ்லியா, கவின், சாண்டி, முகென் ஒரு அணியாகவும் தலையணை செய்தனர். இரு அணிகளும் போட்டி மனப்பான்மையுடன் விளையாடினர். இறுதியாக தலையணையின் தரத்தை சோதித்து அதில் எத்தனை தலையணைகள் தரமானது என்று பிக்பாஸிடம் சொல்ல வேண்டும்.

 

வனிதா அணி செய்த தலையணைகளை லாஸ்லியா சோதித்தார். கவின் அணியின் தலையணைகளை வனிதா சோதித்தார். லாஸ்லியா வனிதா அணியின் தலையணைகளை தையல் சரியில்லை, பஞ்சு இல்லை என்று நிராகரித்துக்கொண்டே சென்றார். 21 தலையணைகளில் 7 மட்டுமே தேர்வு செய்ததால் வனிதா கோபம் கொண்டார். நியாயமான முறையில் சோதிக்க வேண்டும் என்று சண்டை எழுந்தது. இதற்கு பழிவாங்க வேண்டும் என்று கவின் அணியின் தேர்வு செய்யப்பட்ட தலையணைகள் எல்லாம் மோசமானது என்று நிராகரித்தார். ஷெரின் குறுக்கிட்டு ‘ அவர்கள்தான் தவறாக விளையாடுகிறார்கள் என்றால் நாமும் அப்படி செய்ய வேண்டாம்’ என்று வனிதாவிடம் கூறினார்.

 

லாஸ்லியாவோ ‘நீங்கள் பாவம் பார்த்து தலையணைகளை தேர்வு செய்ய வேண்டாம். எது நியாயமோ அதை செய்யுங்கள்’ என்று கூறினார்.

 

பிறகு கவினும் தர்ஷனும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். உடனே வனிதா குறுக்கிட்டு ‘தர்ஷன், கவின்தான் தரத்தை பரிசோதனை செய்யும் துணை அதிகாரி. லாஸ்லியா ஒன்று சொன்னால் அதற்கு அவர்தான் முதலில் ஆதரவு தருவார். அதனால் நீ எதுவும் கவினிடம் பேச வேண்டாம் ‘ என்றார்.

 

 

இதனால் கோபமடைந்த கவின் ‘எது சரியோ அதை பேசுங்கள். எல்லாவற்றுக்கும் தனிப்பட்ட விஷயங்களை வைத்து விமர்சனம் செய்ய வேண்டாம்’ என்று கூறினார்.

 

ஆனால் வனிதா மீண்டும் மீண்டும் அதையே பேசி கவினை வசைபாடினர். இதைத்தொடர்ந்து மோகன் வைத்யா, சாக்‌ஷி, அபிராமி ஆகியோர் மீண்டும் வீட்டுக்கு வந்தனர். சாக்‌ஷியை பார்த்ததும் கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் என்ன செய்வது என்று தோன்றவில்லை. சாக்‌ஷியின் வருகையால் ஷெரின் மகிழ்ச்சியடைந்தார்.

 

வனிதா, சாக்‌ஷி, ஷெரின் ஆகியோர் தனியாக பேசிக்கொண்டனர். போட்டியை ஷெரின்தான் வெல்ல வேண்டும் என்று சாக்‌ஷி கூறினார்.

 

இதைத்தொடர்ந்து லாஸ்லியாவிடம் தனியாக பேசிய அபிராமி ‘ என்னைப்போல் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் போட்டியை நீ வெல்ல வேண்டும். அப்போதுதான் எனக்கும் ஆறுதலாக இருக்கும்’ என்றார்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...