???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்! 0 நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு! 0 கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி 0 வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை! 0 பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 0 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் 0 நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை 0 சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் 0 கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு 0 தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் 0 பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ் : கஸ்தூரிக்கு இப்படி ஒரு சோகமா ?

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   22 , 2019  02:00:52 IST

பிக்பாஸ் நேற்றைய எபிசோடில் பள்ளி மாணவர்கள் டாஸ்க் தொடர்ந்து நடைபெற்றது.

 

தலைமை ஆசிரியரான சேரன் போட்டியாளர்களுக்கு தமிழ் பாடம் நடத்தினார். ஆத்திச்சூடி பற்றி பாடம் எடுத்தார். இதைத்தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களும் தமிழ் செய்யுளில் உள்ள பாடல்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தனர். இதில் லாஸ்லியா, தர்ஷன், கவின் ஆகியோர் ஒப்பித்த விதம் ரசிக்கும்படியாக இருந்தது.

 

இதைத்தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் இந்த டாஸ்க் குறித்து பாடலை எழுதி பாட வேண்டும் என்று பிக்பாஸ் கூறினார். இதைத்தொடர்ந்து ஆண் போட்டியாளர்கள் பாடல் பாட பெண் போட்டியாளர்கள் ஆடினர்.

 

பிக்பாஸ் வீட்டிற்கு வெளியில் உள்ள புல் தரையில் அமர்ந்து எல்லா மாணவர்களும் ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இத்துடன் இந்த டாஸ்க் முடிந்தது. இதைத்தொடர்ந்து போட்டியாளர்கள் தங்கள் வாழ்வின் பயணத்தை மாற்றிய ஆசிரியர்கள் பற்றி பேசினர். அப்போது கஸ்தூரி’ புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து போராடி வெற்றிபெற்ற என் மகள்தான் எனது ஆசான்’ என்று கூறினார். இதை கேட்ட போட்டியாளர்கள் கண்கலங்கினர். இதைப்பற்றி பேசும்போதே கஸ்தூரி மனம் உடைந்தார். அவரை மற்ற போட்டியாளர்கள் தேற்றினர்.

 

இதைத்தொடர்ந்து பேசிய ஷெரின் அவர் நடித்த துள்ளுவதோ இளமை படத்தின் இயக்குநர் செல்வராகவனுக்கு நன்றி தெரிவித்தார். சேரன் தனது கல்லூரி பேராசிரியருக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து இயக்குநர் ரவி குமாருக்கும் நன்றி தெரிவித்தார்.

 

இதைத்தொடர்ந்து தர்ஷனிடம் தனியாக பேசிய சேரன் ‘லாஸ்லியாவை கவினிடம் அதிகம் பேச வேண்டாம் என்று கூற வேண்டும்’ என்றார். ஆனால் தர்ஷனோ ’இது அவர்கள் தனிப்பட்ட விஷயம் அதில் நாம் தலையிடக்கூடாது’ என்றார். நாளுக்கு நாள் கவின் - லாஸ்லியாவின் நெருக்கம் அதிகமாகிக்கொண்டே போகிறது.  

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...