???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது! 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: யார் யாரை பயன்படுத்துகிறார்கள்?

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   16 , 2019  01:52:02 IST

வனிதாவின் வருகையால் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து சண்டைகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்த வாரம் டாஸ்கை சரியாக செய்யாத நபர்களை தேர்வு செய்யும்போது போட்டியாளர்களுக்குள் கலகம் வெடித்தது. அபிராமியை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆண் போட்டியாளர்கள் சொல்ல, மதுமிதா மற்றும் பெண் போட்டியாளர்கள் அபிராமியின் மனநிலை சரியில்லை என்பதால் அவரை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டாம் என்று கூறினர். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட விவாதத்தில் பெண்களை ஆண்கள் அடிமைப்படுத்துகிறார்கள் என்றும் பெண்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று மதுமிதா கூறினார். இதைத்தொடர்ந்து சாண்டி, தர்ஷன் , முகென் , கவின் ஆகியோர் ஒன்றாக இணைந்து மதுமிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

இதைத்தொடர்ந்து பெண்கள்தான் தொடர்ந்து ஜெயிலுக்கு செல்கிறார்கள் என்றும் ஆண்கள் ஏன் செல்லவில்லை என்றும் வனிதா, ஷெரின் கேட்டனர். இறுதியாக கஸ்தூரி, அபிராமி ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர். எல்லா பெண்களும் ஒரே அணியாக நிற்க, லாஸ்லியா மட்டும் ஆண்களின் அணிக்கு ஆதரவாக பேசினார்.

 

இதைத்தொடர்ந்து பெண்களை நாங்கள் எப்போதும் பயன்படுத்த நினைக்கவில்லை என்று கஸ்தூரி, அபிராமி இருவரிடமும் சாண்டி கூறினார். இந்த பிரச்சனை புதன் கிழமையோடு முடிந்துவிடும் என்று நினைத்தால் நேற்றும் இது தொடர்ந்தது. ஆண்- பெண் என்ற சச்சரவை பிக்பாஸும் தூபம்போட்டி வளர்த்தார். இதற்கு ஏற்றவாறு ஆண்கள் சிறந்தவர்களா பெண்கள் சிறந்தவர்களா? என்ற டாஸ்க் வழங்கப்பட்டது.

 

ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் மேடைக்கு வந்து ஒரு சீட்டு எடுக்க வேண்டும். அதில் கொடுக்கப்பட்ட தலைப்பை வைத்து பெண்கள் சிறந்தவர்கள் என்று பெண்கள் அணியும் ஆண்கள் சிறந்தவர்கள் என்று ஆண்கள் அணியும் பேச வேண்டும். சமையல் விஷயத்தில் கஸ்தூரியை குறிவைத்து ஆண்கள் அணி பேசியது. ஆனால் இறுதியில் பெண்கள்தான் சிறந்தவர்கள் என்று முடிவாகியது. தைரியமாக கருத்துக்கள் பேசுவதில் பெண்கள் சிறந்தவர்கள் என்று வனிதா மற்றும் மதுமிதா பேசினர்.

 

மேலும் பெண்கள் வெளிப்படையாக மனதில் இருப்பதை சொல்கிறார்கள் என்று கூறினர். இதைத்தொடர்ந்து நட்பில் யார் சிறந்தவர்கள் என்று ஆண்கள் பேசும்போது பெண்கள் நட்பு வெளிப்படையாக தெரிந்தாலும் காதல் வந்தால் அவர்களுக்குள் இருக்கும் நட்பு  மறைந்துவிடுகிறது என்றார். இதைத்தொடர்ந்து பேசிய அபிராமி அனைவரின் முன்பு முகென் தன்னை விட்டுகொடுத்தார் என்று பழைய பிரச்சனையை பேசினார். இதைத்தொடர்ந்து முகென் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் தான் விவாதத்திற்காக பேசினேன் என்று கூறியதால் அத்துடன் இந்த வாக்குவாதம் முடிந்தது.

 

இதைத்தொடர்ந்து அபிராமியிடம் தனியாக பேசிய முகென் ‘நான் உன்னை பயன்படுத்திக்கொள்ள நினைத்ததே இல்லை. மதுமிதா பேசுவது சரியில்லை’ என்று அழுதார். கமல் சார் கேட்கும்போது என்ன பேசுவது என்று தெரியாததால் அமைதியாக இருந்தேன் என்று கூறினார்.

 

இதைத்தொடர்ந்து பெண்களை ஆண்கள் பயன்படுத்த நினைக்கவில்லை என்பதை சாண்டி, முகென், கவின் , லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர் பாடல் பாடி வெளிப்படுத்தினர்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...