???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாசத்தைக்காட்ட இது என்ன ’கிழக்கு சீமையிலே’ படமா ? போட்டியாளர்களை வறுத்தெடுத்த வனிதா

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   13 , 2019  02:12:47 IST

பிக்பாஸ் வீட்டின் 50-வது நாளான நேற்று எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று போட்டியாளர்களுக்கு காத்திருந்தது.

 

காலையில் சாண்டி, கவின், தர்ஷன், முகென் ஆகியோர் அரசர் மற்றும் அமைச்சர்கள் போல் நடித்து கூட்டம் போட்டார்கள். சாண்டிதான் வீட்டின் கேப்டன் என்பதால் அவர் மன்னராக நடித்தார். அவர் தலைமையில் பிக்பாஸ் வீடு எப்படி இயங்கியது என்று நகைச்சுவையாக மற்ற போட்டியாளர்களிடம் கேட்டார்.  கஸ்தூரியும் மதுமிதாவும் மன்னரே சரியாக வேலை செய்யவில்லை என்றும் வீட்டை சரியாக சுத்தப்படுத்தவில்லை என்று கூறினார்கள். இந்த உரையாடலை நகைச்சுவையாக சாண்டி கையாண்டதால் பெரிதாக எந்த வாக்குவாதமும் ஏற்படவில்லை.

 

இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்து வெளியேற்ற விரும்பும் நபர்களை போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் கூறினார். 'கன்பஷன்' அறைக்கு சென்ற அபிராமி ’இந்த வீட்டில் இருக்கும் யாருக்கும் தன்னை பிடிக்கவில்லை. அதனால் தான் யாரையும் வெளியேற்ற விரும்பவில்லை’ என்றார். இதைத்தொடர்ந்து  வீட்டை விட்டு நான் போக வேண்டும் என்று அழுதார். இதற்கு பதில் கூறிய பிக்பாஸ் ‘வெளியேற்ற விரும்பும் போட்டியாளர்களின் பெயர்களை கூறினால்தான் நீங்கள் இந்த அறையைவிட்டு வெளியே செல்ல முடியும் என்றும் மக்கள் நினைத்தால்தான் நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியும் என்று கூறினார்.

 

இதைத்தொடர்ந்து அவர் வெளியேற்ற விரும்பும் பெயர்களை சொன்னார். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்படும் போட்டியாளர்களின் பட்டியலில் அபிராமி, முகென், மதுமிதா, லாஸ்லியா, கவின் இடம் பிடித்தனர்.

 

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீடு இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் ஹோட்டலாக மாறுகிறது என்று பிக்பாஸ் அறிவித்தார். வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் ஹோட்டல் ஊழியர்களாக மாற வேண்டும் என்று பிக்பாஸ் அறிவித்தார். இந்த டாஸ்கில் எப்படி போட்டியாளர்கள் செயல்படுகிறார்களோ அதைப் பொருத்து இந்த வாரம் லெக்‌ஷுரி பட்ஜெட் மதிப்பெண் வழங்கப்படும்.

 

இதற்கிடையில் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் இல்லத்துக்குள் நுழைந்தார் ஏற்கெனவே வெளியேற்றப்பட்ட வனிதா!  இவரைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைந்தாலும் அவருக்கு அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து ஸ்பா மற்றும் அழகுப்படுத்துதல் பணிகள் ஷெரினுக்கு ஒதுக்கப்பட்டன. ஷெரினை தனியாக அழைத்து செல்லும் வனிதா ‘ அனைவரும் ஒருவரை நல்லவர் என்று கொண்டாடினால் அதற்கு பின்பு ஏதோ ஒரு சதி இருக்கிறது என்று அர்த்தம். நம்மை குறை சொல்லும்வரை நமக்கு ஆபத்து இல்லை ஆனால் நம்மை கொண்டாடினால் எதோ சரியில்லை என்று அர்த்தம்’ என்று கூறுகிறார். இதற்கு ஆமாம் சாமி போட்ட ஷெரின் ’இந்த வாரம் நாமினேஷனில் ( போட்டியாளர்களை வெளியேற்றும் முறை) தனது பெயர் வரும் என்று நினைத்தேன் ஆனால் வரவில்லை,’என்றார்.

 

இதைத்தொடர்ந்து எல்லா போட்டியாளர்களிடம் பேசிய வனிதா சரமாரியாக விமர்சனம் செய்தார். முக்கியமாக அபிராமிக்கு பல அறிவுரைகளை வழங்கினார். காதல் என்ற பெயரில் தனது தனித்துவத்தை அபிராமி இழந்தார் என்று கூறினார். நேர்கொண்ட பார்வை படத்தை நீ கதை கேட்டுத்தான் நடித்தாயா? என்று கேட்ட வனிதா ‘நோ என்றால் நோதான் என்ற வாசகம் நினைவு இருக்கிறதா?’ என்று கேட்டார். ’இப்படி நல்ல படம் நடித்துவிட்டு ஏன் இப்படி அழுதுகொண்டே இருக்கிறாய்’ என்று கேட்டார்.

 

’பாசத்தை காட்ட இது ஒன்றும் கிழக்கு சீமை படம் அல்ல. இது விளையாட்டு நிகழ்ச்சி. தர்ஷனுக்கு அனைவரும் பிக்பாஸ் டைட்டிலை விட்டுகொடுக்க வேண்டாம். அது பிச்சைபோடுவதுபோல் இருக்கிறது. தர்ஷன் போராடி வெற்றிப்பெற வேண்டும். இதைத்தான் தர்ஷனும் விரும்புவார் ‘என்று கூறினார்.

 

மேலும் பெண் போட்டியாளர்களை பயன்படுத்தி ஆண் போட்டியாளர்கள் வெற்றிபெற நினைக்கிறார்கள் என்றும் பெண்களுக்கு என்று எந்த தனித்துவமும் வெளிப்படாததற்கு ஆண்கள்தான் காரணம் என்றும் கூறினார்.

 

வனிதா வந்தாச்சு.. இருக்கு... இனிமே நல்ல சம்பவம் இருக்கு...

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...