???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் 0 இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு 0 ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா?: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் 0 ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி 0 வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் 0 கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 0 சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது 0 இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்! 0 காவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை 0 மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து 0 நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை 0 எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ 0 மயிரிழையில் உயிர் தப்பினேன்: கமல்ஹாசன் 0 20 பேர் உயிரிழந்த திருப்பூர் விபத்து: பிரதமர் இரங்கல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கவினிடம் சாக்‌ஷி அப்பா கூறிய பதில்: ஷாக்கான பார்வையாளர்கள்

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   12 , 2019  01:51:38 IST

பிக்பாஸ் வீட்டின் நேற்றைய எபிசோடில் சாக்‌ஷி வெளியேறினார். வழக்கம் போல் கமல் தனது தனித்துவமான தொகுத்து வழங்கும் பணியை சிறப்பாக செய்தார்.

 

சனிக்கிழமை நிகழ்ச்சியின்போது வீட்டில் இருப்பது காதலா? நட்பா என்ற கேள்வி கேட்டார் கமல். இதில் அபிராமி முகெனிடம் நடந்துகொள்வது சரியில்லை என்றும் முகெனை மற்ற  ஆண் போட்டியாளர்களிடம் பேசவிடாமல் செய்கிறார் என்ற புகார் எழுந்தது. இதனால் மீண்டும் அபிராமி அழுதார்.

 

இதைத்தொடர்ந்து தேவதை- வில்லி என்ற டாஸ்கை கொடுத்தார் கமல். இதில் அதிகமானோர் சாக்‌ஷியை வில்லியாக தேர்வு செய்தனர். ஷெரினை அதிகமானோர் தேவதை என்று கூறினார்.

 

ஞாயிற்றுகிழமையன்று வழக்கம் போல் யார் வெளியேறுவார் என்பதை சொல்லாமல் கமல் இழுத்தடித்தார். அபிராமியா? சாக்‌ஷியா? என்ற நிலை ஏற்பட்டது. இருவர் மேலும் பார்வையாளர்களுக்கு சமமான வெறுப்பு இருந்தது. இறுதியில் சாக்‌ஷி வெளியேற்றப்பட்டார். சாக்‌ஷியின் பிரிவை தாங்க முடியாத ஷெரினும் அபிராமியும் அழுதனர். வெளியேறும் முன்பு தர்ஷனிடம் பேசிய சாக்‌ஷி ‘நான் எப்போதும் ஷெரினை பயன்படுத்தியது கிடையாது. மற்றவர்கள் மீது குறைகூறும்போது யோசித்துவிட்டு பேசுங்கள்’’ என்று கூறினார்.

 

இதைத்தொடர்ந்து சாக்‌ஷி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதைத்தொடர்ந்து சாக்‌ஷி,  அவரின் அப்பா, இருவரும் கமலுடன்  எல்இடி திரையில் தோன்றி போட்டியாளர்களிடம் பேசினர். சாக்‌ஷியிடம் தான் நடந்துகொண்டது தவறுதான் என்றும் தன்னை மன்னித்துவிடும்படி சாஷியின் அப்பாவிடம் கவின் கூறினார். ஆனால் அவர் அப்பாவோ ‘இதில் என்ன இருக்கிறது கவின். போட்டியில் சரியாகத்தான் விளையாடினீர்கள். இதில் மன்னிப்பு கேட்க எதுவும் இல்லை’ என்று கூறினார். மேலும் மற்ற போட்டியாளர்களுக்கு வாழ்த்துகள் கூறினார்.

 

இதைத்தொடர்ந்து வீட்டில் நடைபெறும் உரையாடல்கள் காட்டப்பட்டது. சாக்‌ஷி ஒரு துளி கண்ணீர்கூட சிந்த வில்லை என்று கவின் புறம் பேசினார். இதற்கு சாண்டியும் தர்ஷனும் ஆமாம் சாமி போட்டனர். ஷெரினும் அபிராமியும் சாக்‌ஷியின் வெளியேற்றத்தால் தங்களுக்குள் ஏற்பட்ட வலிகளை பகிர்ந்துகொண்டனர்.

 

சாண்டி மற்றும் கவினிடம் பேசிய சேரன் அவர்கள் இருவரும் லாஸ்லியாவுக்கு பாடிய பாடல்களை குறித்து பேசினார். 

 

தனக்கு வெளியில் நிறைய மரியாதை உள்ளது. அதை கெடுக்கும்வகையில் சாண்டி மற்றும் கவின் நடந்து கொண்டதாக வருத்தம் தெரிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த சாண்டி, ’மனம் புண்படும் வகையில் பாடவில்லை. மகிழ்ச்சிக்காக மட்டும் தான்பாடினேன்’ என்று கூறினார்.

 

 சாக்‌ஷியின் அப்பாவே பிக்பாஸில் நடைபெற்றதை விளையாட்டாக பார்க்கிறார். நாமதான் ரொம்ப சீரியசா பார்கிறோமோ!

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...