???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சரோஜ்கான் - நடன ராணி! 0 தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 0 இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை 0 உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் 0 வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி 0 மேலும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று! 0 கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாப மரணம்! 0 என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்டு 16-ந்தேதி தொடங்கலாம்: ஏ.ஐ.சி.டி.இ. 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது! 0 பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது! 0 அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி 0 தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு 0 தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது 0 சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ் : கஸ்தூரி செய்த வேகாத சர்க்கரைப்பொங்கல்!

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   10 , 2019  01:23:25 IST

’சென்னை சிட்டி கேங்ஸ்டர்’ என்ற பாடலுடன் பிக்பாஸின் நேற்றைய நாள் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கஸ்தூரி மற்ற  போட்டியாளர்களுடன் இணைந்து ’வில்லுப் பாட்டு’ பாடினார். 47 நாட்கள் வரை பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி சென்றது என்றும், போட்டியாளர்கள் சந்தித்த சோதனைகளைப் பற்றி பாடினார்.

 

வில்லுப்பாட்டு பாடிய கஸ்தூரி கவினை பற்றிப் பாடும்போது ‘ அவர் பெயரில் ’வின்’ இருந்தாலும் அவர் மனது ’லாஸ்’-ஐத்தான் விரும்புகிறது என்று கூறினார். மேலும் அபிராமி எப்போதும் அழுதுகொண்டே இருக்கிறார் என்று விமர்சித்தார்.

 

இதைத்தொடர்ந்து சேரன், மதுமிதா, கஸ்தூரி , கவின் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தபோது ‘4 பெண்களை காதலிப்பது என்ற எண்ணம் எப்படி நகைச்சுவையாகும் என்று நினைத்தீர்கள் என்றும் இதுவே ஒரு பெண் இதை செய்திருந்தால் அதையும் காமெடியாகவே எடுத்துகொள்வீர்களா?’’ என்று கேட்டார்.

 

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கவின் தவித்தார். இதைத்தொடர்ந்து இந்த வாரம் வீட்டின் தலைவரை தேர்வு செய்யும் டாஸ்க் நடைபெற்றது.  இதில் சேரன், லாஸ்லியா, சாண்டி கலந்துகொண்டனர்.  கேன்வாஸ் போர்டு கொடுக்கப்பட்டிருக்கும் அதில் போட்டியாளர்கள் வர்ணங்களை தீட்ட வேண்டும். யார் அதிக இடங்களில் வர்ணம் தீட்டுகிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்.

 

லாஸ்லியாவுக்கு நீல நிற பெயிண்டும் சாண்டிக்கு பச்சையும் சேரனுக்கு சிவப்பும் கொடுக்கப்பட்டது. சேரன் சிறப்பாக விளையாடினாலும் சாண்டியின் நிறம் அவரைவிட வெளிப்படையாக தெரிந்ததால் அவரை வெற்றியாளர் என்று கஸ்தூரி தேர்வு செய்தார். இதனால் சேரன் ஏமாற்றமடைந்தார்.

 

சிறிது நேரம் அந்த கேன்வாஸ் போர்டை பார்த்துக்கொண்டிருந்தார் சேரன். இதைத்தொடர்ந்து ஆர்.கே. ஜி நெய் வழங்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து சர்க்கரைப் பொங்கல் செய்ய வேண்டும். இதற்கு நடுவர் மதுமிதா. தர்ஷன் - ஷெரின் ஒரு அணியாகவும் கஸ்தூரி-சாக்‌ஷி ஒரு அணியாகவும் பிரிந்து போட்டியிட்டனர்.  கஸ்தூரி செய்த பொங்கல் வேகாமல் இருந்தது. ஆனால் தர்ஷன் அணி செய்த பொங்கல் நன்றாக வெந்திருந்தது.

 

இறுதியில் தர்ஷன் அணி வெற்றிபெற்றது என்று அறிவிக்கப்பட்டது.

 

இதைத்தொடர்ந்து ’ரோல் தி பாட்டில்’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஒரு பாட்டிலை சுற்றவிட்டு அதன் வாய் யார் பக்கம் நிற்கிறதோ அவர்களிடம் மற்ற போட்டியாளர்கள் கேள்வி கேட்பார்கள். இதில் அபிராமியிடம் ‘நீங்கள் இந்த வாரம் வெளியேறும் சந்தர்ப்பம் வந்தால் முகெனிடம் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்’ என்று தர்ஷன் கேட்டார். ‘நாம் ஒன்றாகத்தான் இந்த வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. ஆனால் நீ போட்டியில் வெற்றிபெற வேண்டும். இந்த வீட்டை விட்டு வெளியே சென்றால் உன்மேல் உள்ள காதல் போய்விடும் என்று நீ நினைக்கலாம். ஆனால் கண்டிப்பாக அப்படி நடைபெறாது’’ என்று கூறினார்.

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...