???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு 0 அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது 0 ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் 0 நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! 0 கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 0 தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் 0 கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் 0 சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 0 இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் 0 குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 0 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து! 0 பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் 0 தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: கஸ்தூரியின் ஆட்டம் ஆரம்பம்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   09 , 2019  04:07:40 IST

பிக்பாஸின் நேற்றைய எபிசோட் ‘புலி உறுமுது புலி உறுமுது ’ என்ற பாடலுடன் தொடங்கியது. நேற்று நடைபெற்ற டாஸ்கில் தன்னையும் சாண்டியையும் மற்ற போட்டியாளர்கள் குறிவைத்து தோல்வியடைய வைத்தது வருத்தமாக இருக்கிறது என்று சாக்‌ஷியிடமும் ஷெரினிடமும் தர்ஷன் கூறினார். வெளியேற்ற விரும்பும் போட்டியாளர்களை தேர்வு செய்யும்போது தன்  பெயரை முகென் தேர்வு செய்துள்ளார் என்றும் அதை தன்னிடமே வந்த சொன்னது கஷ்டமாக இருந்தது என்றும் தர்ஷன் கூறினார்.

 

இதைத்தொடர்ந்து போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் வரிசையாக நின்றுகொண்டு, பேப்பர் பந்துகளை அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அட்டையால் அடித்து கடைசியில் வைக்கப்பட்ட கூடைக்குள் போட வேண்டும். 3 பந்துகள் கூடைக்குள் விழுந்தால் போட்டியாளர்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது என்று பிக்பாஸ் கூறினார். இந்த டாஸ்கை போட்டியாளர்கள் முடித்தவுடன், பிக்பாஸ் வீட்டுக்குள் பெரிய பரிசுப்பெட்டி இருந்தது. இதை முதலில் லாஸ்லியா பார்த்தார்.  அந்த பெட்டிலிருந்து வெளியே வந்தவர் நடிகை கஸ்தூரி!  இதை போட்டியாளர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நமக்குத்தான் முன்பே தெரியுமே கஸ்தூரி உள்ளே போகப்போகிறார் என்று!

 

வீட்டில் நுழைந்ததுமே  கவின், லாஸ்லியா, சாக்‌ஷி ஆகியோரை கேலி செய்யும் தொனியில் மக்களின் மனதில் இருக்கும் விஷயங்களை கேட்டார் கஸ்தூரி. இந்த வாரம் ஜெயில் தண்டனை இல்லை என்று கஸ்தூரி அறிவித்தார். மேலும் புதிய போட்டியாளரான கஸ்தூரிக்கு 5 சிறப்பு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன. இதைப்பயன்படுத்தி கவினை மூக்கால் மன்னித்துவிடு என்று எழுதவைத்தார். கஸ்தூரி எங்கே தோப்புக்கரணம் போட சொல்கிறாரோ அங்கு ஷெரின் தோப்புக்கரணம் போட வேண்டும். யார் கழிப்பறைக்கு சென்றாலும் அவர்கள் கழிப்பறையை விட்டு வெளியில் வரும்வரை அபிராமி பாட வேண்டும். சாக்‌ஷி தலைகீழாக நிற்க வேண்டும்.

 

 

மேலும் மதுமிதா தர்ஷனுக்கு எப்போதும் குடைபிடிக்க வேண்டும். இப்படி பல தண்டனைகளை கஸ்தூரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து கவின் சாண்டியிடம் ’கஸ்தூரியின் நடவடிக்கையை அமைதியாக கண்காணிக்க வேண்டும்’ என்று கூறுகிறார்.

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...