???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை 0 கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது! 0 சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் 0 மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது! 0 வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் 0 குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு 0 வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 0 தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் 0 நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ் சீசன் 3: நாள் மூன்று- நடந்து என்ன ?

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   27 , 2019  04:45:36 IST

மெர்சல் படத்தில் உள்ள ‘ அடிச்சு காலி பண்ணும் தில்லு’ பாடல் ஒளிபரப்ப, பிக்பாஸ் சீசன் 3 யின் 3 வது நாள் தொடங்கியது. இந்த பாடலுக்கு அனைவரும் உற்சாகமாக நடனமாடினர்.

 

இதையடுத்து வீட்டின் வெளியில் உள்ள தபால் பெட்டியின் மணி ஒலித்தது. அதில் மோகன் வைத்யா வீட்டில் உள்ள அனைவருக்கும் குத்து டான்ஸ் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று குறிப்பு இருக்கிறது. இதன்படி அனைவருக்கும் அவர் குத்து டான்ஸ் கற்றுக்கொடுக்கிறார்.  இதனை பின்பு சமையலறையில் உள்ள கீரை கப்பை எடுத்து வைக்கவில்லை என்று அபிராமி வீட்டில் உள்ளவர்களிடம் கோபித்துக் கொள்கிறார். அப்போது மீராவிற்கும் அபிராமிக்கும் சண்டை வருகிறது. இதைத்தொடர்ந்து மீராவிடம் அபிராமி என்னிடம் பேச வேண்டாம் என்று கூறிவிட்டு செல்கிறார்.

 

இந்த வார்த்தை போர் சிறிது நேரம் நீண்டு செல்ல, பின்னர் கலைந்து செல்கின்றனர். இந்த விவகாரத்தில் அபிராமி மற்றும் மீரா மிதுன் மனமுடைந்து அழத் தொடங்குகின்றனர். மீராவை பாத்திமா பாபுவும், அபிராமியை வனிதாவும் சமாதானம் செய்கின்றனர். இந்தப் பிரச்சனை அடுத்த சில நிமிடங்களுக்கு நீள்கிறது.

இதைத்தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களும் தங்கள் வாழ்வில் நடந்த சோகத்தை பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும். மோகன் வைத்யா இதைத்தொடங்கினார். காது கேளாத வாய் பேசாத மகன் எனக்கு இருக்கிறான். மனைவியோ இளம் வயதில்  3 மாத கர்பிணியாக இருந்தபோது  விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கலைக்காக வாழும் எனக்கு கலையை வெளிப்படுத்த ஒரு வாரிசு இல்லாமல் போனது என்று கதறி அழுதார். எப்போதும் சோகம் நிறைந்து இருக்கும் எனது வாழ்க்கையில் என்னை சிரிக்க வைத்த சாண்டிக்கு நன்று என்று சக போட்டியாளருக்கு நன்றி தெரிவித்தார். இதைக் கேட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்  சோகத்தில் மூழ்கினர். மேலும் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

 

இதைத்தொடர்ந்து பேசிய ரேஷ்மாவின் கதை மேலும் சோகத்தை அதிகப்படுத்தியது. ரேஷ்மாவின் இரண்டாவது குழந்தை பிறக்கும்போதே இறந்தே பிறந்தது. அந்த குழந்தைக்கு அவர் சரோன் என்று  ஆசையாக பெயர் வைத்துள்ளார்.  

 

இதைத்தொடர்ந்து மூன்றவது முறையாக கர்ப்பமாகி உள்ளார்.  5 வது மாதத்தில் அவர் கணவர் கோவத்தில் அவரை தாக்கியதால் , காயமடைந்த அவர் ரத்தம் வழிய மருத்துமனைக்கு காரை ஓட்டிச் சென்றுள்ளார்.  பாதி வழியில் குழந்தை வெளியில் வந்துவிட, பதரிப்போன அவர் மருத்துமனைக்கு விரைந்து சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

 

குழந்தை வெட்டிலேட்டரில் வைக்கப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டாலும் கூட குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தனது இரண்டு குழந்தைகளையும் தனியாகவே வளர்த்து வருகிறார்.  உறவினர்களும், கணவரும் இருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவரது கதையை கேட்ட அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர். சரவணன், சேரன், பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மதுமிதா ஆகியோர் சத்தமாகவே அழுது ஆறுதல் கூறினர்.

 

 


English Summary
பிக்பாஸ் சீசன் 3: நாள் மூன்று- நடந்து என்ன ?

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...