???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு 0 சுவரேறிக் குதித்து சிதம்பரத்தைக் கைது செய்த சிபிஐ! 0 கர்நாடகாவில் போர்க்கொடி தூக்கும் அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏக்கள்! 0 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த 3 மாதம் கெடு: அமைச்சர் எச்சரிக்கை 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! 0 முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி டெல்லி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள்! 0 யோகி பாபு நடிக்கும் “பப்பி” படத்திற்கு சிவசேனா எதிர்ப்பு! 0 பாலுக்கு பதிலாக மதுபான விலையை தமிழக அரசு உயர்த்தலாம்: கி.வீரமணி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: நாள் 19: முட்டிக்கொள்ளும் தர்ஷன் - வனிதா!

Posted : சனிக்கிழமை,   ஜுலை   13 , 2019  01:52:28 IST


Andhimazhai Image

’’வாட்ட கருவாட் வாட்ட கருவாட்...’’ என்ற பாடலுடன் பிக்பாஸின் 19வது நாள் தொடங்கியது. ’கொலைகாரி’ டாஸ்கில் சரியாக விளையாடாத  இருவரை தேர்வு செய்வதில் சிக்கல் எழுந்தது.

 

சரவணன், சேரன்தான் ஜெயிலுக்குள்  செல்ல வேண்டும் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் சரவணன், தன்னை தேர்வு செய்தது சரியில்லை என்று வாக்குவாதம் செய்தார். வழக்கம் போல் வீட்டின் நாட்டாமையான வனிதா இந்த விவகாரத்திலும் தலையிட்டார். கவின்தான் டாஸ்க்கை சரியாக விளையாடவில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

 

சேரனும் , கவினும் ஜெயிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் சாக்‌ஷி, லாஸ்லியா கவினுக்கு பதிலாக தாங்கள் ஜெயிலுக்கு செல்வதாக கூறினர். இதைத்தொடர்ந்து வனிதா விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் .. யாரும் யாருக்காகவும் தியாகம் செய்ய வேண்டாம் என்று கூறினார்.

 

இதைத்தொடர்ந்து கவின் மற்றும் சேரன் ஜெயிலுக்கு சென்றனர். கவின் ஜெயிலுக்கு சென்றதில் இருந்து கவின்மீதான அன்பு லாஸ்லியாவுக்கு அதிகமாகி உள்ளது. ஜெயிலின் கம்பிகளை பிடித்துக்கொண்டு லாஸ்லியா கவினையே பார்த்துக்கொண்டிருந்தார். ’’நான் உன்னை எந்த விஷயத்தில் காயப்படுத்தியிருக்கிறேன் என்று எனக்கு தெரியும்.  நான் விளையாட்டாக தொடங்கியது இப்போது வேறுவிதமாக சென்றுகொண்டிருக்கிறது என்று கவின் லாஸ்லியாவிடம் கூறுகிறார். உடனே லாஸ்லியா, ’’நான் பேசுவதையெல்லாம் விளையாட்டாக நீதான் எடுத்துகொள்கிறாய். ஆனால் நான் சீரியஸாகத்தான் பேசுகிறேன்’’ என்கிறார்.

 

இதைத்தொடர்ந்து லாஸ்லியா மற்ற போட்டியாளர்களுக்கு ’பட்டாம் பூச்சியை எப்படி பிடிப்பது’ என்று கற்றுக்கொண்டுக்கிறார். அவரைப்போல் மற்ற போட்டியாளர்களும் செய்து காட்டுகின்றனர்.

 

இதைத்தொடர்ந்து அடுத்த வாரத்திற்கான தலைவர் போட்டி நடத்தப்படுகிறது. எலும்புக்கூடு படம் பொரித்த ஸ்டிக்கர் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும். ஒருவர் மற்றவர் மீது ஓடிப்பிடித்து ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும்.

 

போட்டியின் இறுதியில் அந்த ஸ்டிக்கர் யார் மேல் ஒட்டப்பட்டிருக்கிறதோ அவர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். இந்த போட்டியில் வனிதா, மோகன் வைத்யா, சாக்‌ஷி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். முதலில் மோகன் வைத்யா தன்னால் ஓட முடியவில்லை என்று கூறிவிட்டு போட்டியிலிருந்து வெளியேறுகிறார். இதைத்தொடர்ந்து சாக்‌ஷி, வனிதா போட்டியை தொடர்கின்றனர்.

 

வனிதாவால் சாக்‌ஷியை ஓடி பிடித்து, ஸ்டிக்கரை ஒட்ட முடியவில்லை. இந்த விரக்தியால் போட்டியின் விதிமுறை சரியில்லை  விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்று முறையிடுகிறார். ஆனால் தர்ஷன் குறிக்கிட்டு இதை நீங்கள் முதலில் சொல்ல வேண்டும்..போட்டி முடிந்தவுடன் பேசக்கூடாது என்கிறார்..உடனே சீற்றம் கொள்ளும் வனிதா.. நீ இந்த போட்டியிலே இல்லை. உனக்கு பேசுவதற்கு உரிமையில்லை என்கிறார். மேலும் தர்ஷனும் இந்த வாக்குவாதத்தை வளர்க்கிறார்.

 

இதுவரை பெரிதாக எதற்கும் எதிர்த்து பேசாத தர்ஷன், இன்றுதான் முதல் முறையாக உணர்ச்சிவசப்பட்டுள்ளார். தனது கருத்தை துணிச்சலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

இதைத்தொடர்ந்து மைக்கை தூக்கி எறியும் வனிதா பிக்பாஸ் தன்னை அழைத்து கருத்து கேட்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார். ஆனால் பிக்பாஸோ சாக்‌ஷிதான் வெற்றியாளர் என்று அறிவிக்கிறார். இதைத்தொடர்ந்து வனிதா தானாகவே சமாதானம் அடைகிறார்.

 

அடுத்த வாரத்தின் தலைவராக சாக்‌ஷி தேர்வு செய்யப்பட்டது மேலும் திருப்பமாக அமையும். கவின், சாக்‌ஷி, லாஸ்லியா இவர்களுக்கு நடுவில் உள்ள உறவுச் சிக்கல், இனிவரும் வாரங்களில் பெரிதாக வெடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதில் சாக்‌ஷி வேறு வீட்டின் தலைவர் என்பதால்,அதிகாரத்தை எப்படி பயன்படுத்துவார் என்பது பொறுத்து மேலும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...