???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: சாண்டி மாஸ்டர் அழுகையால் கண்கலங்கிய பார்வையாளர்கள்: அப்படி என்னதான் நடந்தது?

Posted : சனிக்கிழமை,   ஜுலை   06 , 2019  03:18:15 IST

பிக்பாஸின் 12 வது நாள் பழைய சோற்றுக்காக சண்டையுடன் தொடங்கியது.  காலை உணவாக ’மசாலா ஓட்ஸ்’  செய்யும் ரேஷ்மாவிடம் ‘பழைய சோறு’ இல்லையா என்று மது கேட்கிறார்.

 

 

ஏன் உங்களுக்கு இது பிடிக்கவில்லையா என்று பதிலுக்கு கேட்கிறார் ரேஷ்மா. ஆம் என்று கூறும் மது இரவில்  அதிகமாக சாதம் வடித்து காலையில் வையுங்கள் என்று கேட்கிறார்.  நேற்று இரவு சாதம் மிஞ்சவில்லை என்று கூறுகிறார் ரேஷ்மா.  இதற்கிடையில் அருகில் நின்று உதவிகள் செய்யும் அபி, எனக்கு காலையில் சாதம் சாப்பிடுவது பிடிக்காது ஓட்ஸ்தான் நல்லது என்று சொல்கிறார்.

 

 

சாப்பிட்டுவிட்டு வெளியில் செல்லும் மதுமிதா  கேப்டன் மோகன் வைத்தியாவிடம் பழைய  சோறு பஞ்சாயத்தை பற்றி சொல்லிவிட்டு தனக்கு காலையில் சோறு வேண்டும் என்கிறார்.இதைப்பற்றி சமையல் செய்யும் அணியிடம் சொல்கிறேன் என்று கூறுகிறார் மோகன் வைதியா.  இதைப்பற்றி ரேஷ்மா மற்றும் வனிதாவிடம் பேசுகிறார் மோகன் வைத்தியா. ‘ இதேல்லாம் ஓவராக இருக்கிறது. அனைவருக்கும் சேர்த்துதான் சமைக்க முடியும். அவர்களுக்கு சோறு வேண்டும் என்றால் அவர்களையே சமைக்க சொல்லுங்கள்’’ என்று ரேஷ்மா கூறுகிறார்.

 

இதைத்தொடர்ந்து ’கோழி பிடிப்பது எப்படி’ என்று  சரவணன் அனைவருக்கும் நடித்துக் காட்டுகிறார். அதேபோல் மற்ற போட்டியாளர்கள் செய்கிறார்கள். இதைத்தொடர்ந்து யானை அணிக்கு ’சாப்பாடு ராமன்’ போட்டி நடக்கிறது . முகென் ,ரேஷ்மா, பாத்திமா பாபு இந்த போட்டியில் கலந்துகொண்டு, கொடுக்கப்பட்ட  உணவு பொருட்களை முழுவதுமாக சாப்பிட வேண்டும்.  மூவரும் முடிந்த வரை சாப்பிட்டு 280 மதிப்பெண்களை பெறுகிறார்கள்.

 

இவர்கள் சாப்பிட்டு முடிந்ததும் ,  மற்ற உணவை ஆசையாக சாப்பிடச் செல்லும் போட்டியாளர்களிடம் பிக்பாஸ் ’அதை சாப்பிடக் கூடாது’ என்று சொல்லிவிடுகிறார்.

 

இதைத்தொடர்ந்து வீட்டில் உள்ள ஒரு போட்டியாளரை அனைவரும் வெளியேற்ற  வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார். மேலும் இது உண்மையல்ல வெறும் விளையாட்டுக்காக செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் சொல்கிறார். மீராவை அனைவரும் வெளியேற்றுவதுபோல் நடிக்க வேண்டும் என்று பிக்பாஸ் சொல்கிறார்.

 

அனைத்து போட்டியாளர்களும் மீராவை வெளியேற்ற நினைக்கிறோம் என்றும் அதற்கான காரணத்தையும் சொல்கின்றனர். இறுதியில் மீரா அழுது விடுகிறார். எல்லாம் விளையாட்டுகாக என்று கூறப்படுகிறது.

 

மதுமிதாவுக்கு பேச ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அப்போது அவர் கவினை வெளியேற்ற வேண்டும் என்று கூறிகிறார். உடனே சாக்‌ஷி, அபி, ஷெரின் கூட்டணி மதுமிதாவின் மீது கோபம்கொள்கின்றனர்.

 

இதைத்தொடர்ந்து சாண்டியின் பிறந்தநாளுக்காக இரவில் ஒரு பாட்டு கேட்கிறது. குழந்தையின் அழு குரல் மற்றும் மியூசிக்கும் சேர்ந்து கேட்கிறது. உடனே அழத்தொடங்குகிறார் சாண்டி. அனைவரும் அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர்.  கேக்  வெட்டப்படுகிறது. சாண்டியின் அழுகை நிற்கவில்லை.  பிக்பாஸ் வீட்டில் இருக்கும் டிவியில் சாண்டியின் குழந்தை தோன்றும் காட்சிகள் ஒளிபரப்ப படுகிறது. 

 

சாண்டியின் புகைப்படத்தை அவரது மனைவி குழந்தையிடம் காட்டுகிறார். அதை பார்க்கும் குழந்தை அதை அவர் கையிலிருந்து இழுக்கிறது, ஏக்கத்துடன் முத்தமிடுகிறது. இதை பார்க்கும் சாண்டி அழுதுகொண்டே  டிவியின் ஸ்கிரீனை தொட்டு முத்தமிடுகிறார்.

 

குழந்தையை பிரிந்து வாழும் எல்லா பெற்றோரும் இதை பார்த்து கண்டிப்பாக அழுதிருப்பார்கள்.

 

பழைய சோறுக்கு சண்டை,  கோழி பிடிப்பது எப்படி, மகளை பிரிந்த அப்பாவின் வலி என்று சுவாரஸ்யமாக சென்றது இன்றைய நாள்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...