???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எனக்கே புத்திமதி சொல்லும் மகள் இப்படி செய்யலாமா? உணர்ச்சிவசப்பட்ட லாஸ்லியாவின் தந்தை

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   12 , 2019  03:34:57 IST

பிக்பாஸ் வீட்டின் நேற்றைய எபிசோடின் சேரன் திரும்பவும் உள்ளே வந்தது ஒரு உணர்ச்சிமயமான நிகழ்வாக இருந்தது. அதைவிட லாஸ்லியாவின் அப்பா உள்ளே வந்தபோது ஆனந்த யாழை  மீட்டுகிறாய்.. பாடல் ஒலிக்க, லாஸ்லியா நவரசங்களையும் காட்டி அழுதது மிகப்பெரிய அழுகாச்சி காவியம்... லாஸ்லியா அந்த சில நிமிடங்களில் தன் முழு  உணர்ச்சியையும் கொட்டிவிட்டார். உறவுகளுடன் விளையாடுவதில் பிக்பாஸ் பிஎச்டி பண்ணியிருப்பார் போலிருக்கிறது..

 

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சாண்டி எப்படி கால்பந்து விளையாடிக்கொண்டே நடனம் ஆடுவது என்பதை சொல்லிக்கொடுத்தார். இந்த பயிற்சியை லாஸ்லியா, கவின், தர்ஷன், முகன், ஷெரின் ஆகியோர் ஆர்வமாக செய்தனர். இதில் வனிதா கலந்துகொள்ளவில்லை. சேரன் வெளியேறியதில் இருந்து வனிதா டாஸ்கை தவிர எதிலும் கலந்துகொள்ளவில்லை. ’சேரன் அப்பா ரகசிய அறையில் இருப்பாரோ’ என்று வனிதாவிடம் லாஸ்லியா கேட்டார். இதற்கு வனிதா ‘ தெரியவில்லை. ஏன் அப்படி கேட்கிறாய்’ என்றார்.

 

இதற்கு லாஸ்லியா ‘நானும் கவினும் பேசியதை எப்படி அவர் பார்த்திருப்பார் ? மேலும் கவின் என்னை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தவில்லை. சேரன் அப்பாவைப்பற்றி பேசினால் கவினுக்கு பிடிக்காது. அதனால் அவனிடம் அவரைப்பற்றி பேசுவதில்லை. கவினைப்பற்றி எனக்கு அதிகம் தெரியும். அவன் என்மீது வைத்திருக்கும் பாசம் பற்றி எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.

 

தொடர்ந்து பேசிய வனிதா ‘இந்த விஷயத்தில் சேரன் அண்ணாவும் உன்னை புரிந்துகொள்ள வேண்டும். அவர் மனதில் இருக்கும் விஷயத்தை கேட்டிருக்கிறார்....அவ்வளவுதான். இதைப்பற்றி இனி பேச வேண்டாம்’ என்றார்.

 

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் ஃபிரீஸ் என்று சொன்னார். இதனால் எல்லாப் போட்டியாளர்களும் அசையாமல் நின்றனர். சேரன் வீட்டுக்குள் வந்தார்.  சேரனின் வருகையால் தர்ஷன், வனிதா ,ஷெரின் ஆகியோர் மகிழ்ச்சியடைந்தனர். எல்லாவற்றையும் ஒட்டுக்கேட்டீர்களா? என்று தர்ஷனும் சாண்டியும் கேட்டனர்.

 

எல்லாரும் விளையாட்டை சரியாக கொண்டு செல்கின்றீர்கள். நானும் விளையாட்டுக்காகத்தான் கேள்விகள் கேட்டேன் என்றார். இதைத்தொடர்ந்து ஷெரின், சேரன், வனிதா ஆகியோர் தனியாகப் பேசிக்கொண்டனர். அப்போது பேசிய சேரன் ‘ நாம் மூவரும்தான் விளையாட்டை எப்படி விளையாடுவது என்று தெரியாமல் விளையாடுகிறோம். மற்றவர்கள் ஒரு இலக்குடன் விளையாடுகிறார்கள். கவின்,  லாஸ்லியாவின் உறவை ஒரு காதல் திரைப்படம் போல காட்டுகிறார்கள். லாஸ்லியாவை கவின் மூளைச்சலவை செய்கிறார். அவர் செய்யும் வேலையால் லாஸ்லியாவால் விளையாட்டை சரியாக விளையாட முடியவில்லை. நிகழ்ச்சி தொடங்கி இரண்டாம் வாரத்திலிருந்து லாஸ்லியா கவினை பின்தொடர்ந்து வருகிறார் என்பதை அவரே ஒப்புக்கொண்டார்’ என்றார் சேரன்.

 

தொடர்ந்து லாஸ்லியாவின் அம்மாவும் இரண்டு தங்கைகளும் வீட்டுக்கு வந்தனர். லாஸ்லியாவின் அம்மா லாஸ்லியாவிடம் பழைய லாஸ்லியாவாக மாற வேண்டும் என்றார். ‘ தனியாக நீ இந்த போட்டியை எதிர்கொள்ள வேண்டும். உன்னை நம்பித்தான் இந்த போட்டிக்கு அனுப்பினோம். இந்த மாயவலையிலிருந்து நீ வெளியே வர வேண்டும் என்று அவர் அழுதார். லாஸ்லியாவும் அழுதுகொண்டே ‘ நான் அப்படி இருக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன் ஆனால் அதை இங்கே செய்ய முடியவில்லை’ என்றார்.

 

மேலும் லாஸ்லியாவின் தங்கை கூறுகையில் ‘இங்கே எல்லாரும் உனக்கு விட்டுத் தருகிறேன் என்று கூறி தங்களை காப்பாற்றிக்கொள்கின்றனர். இங்கே இருப்பவர்கள் உன் வாழ்நாள் முழுவதும் உன்னோடு வரமாட்டார்கள். நீ எல்லாவற்றையும் மறந்துவிட்டு விளையாட்டைப் ஒழுங்காக விளையாடு’ என்றார்.

 

மேலும் ‘ குடும்பம் ஒன்று இருப்பதையே மறந்துவிட்டாயா?’ என்று லாஸ்லியாவிடம் கேட்ட அவரின் தாய் அழத்தொடங்கினார். இதன்பிறகு ’ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடல் ஒளிபரப்பானது. திடீரென பிக்பாஸ் வீட்டுக்குள்   லாஸ்லியாவின் அப்பா நுழைந்தார். அப்போதே மிகவும் கோபமாக இருந்தார். லாஸ்லியாயைப் பார்த்தவுடன்

 ‘ பெயரை கெடுப்பதற்காகத்தான் இங்கே வந்தாயா? என்ன சொல்லிவிட்டு இந்த போட்டிக்கு வந்தாய்? உன்னை இப்படியா வளர்த்தேன் நான்? என்றார்.

 

லாஸ்லியா  அழுதுகொண்டே அப்பாவை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். தொடர்ந்து பேசிய லாஸ்லியாவின் அப்பா தமிழ் சினிமா அப்பாக்களைபோல பல அறிவுரைகளை வழங்கினார். ‘ காசுக்காக எனது மகளை இழந்துவிட்டேன். எனக்கே புத்திமதி சொல்லும் என் மகள் இப்படி செய்யலாமா? பணத்தை எப்போதும் சம்பாதிக்கலாம் ஆனால் பெயரை சம்பாதிக்க முடியாது? என்னை எல்லாரும் உங்கள் மகள் கல்யாணத்துக்கா செல்கின்றீர்கள் என்று கேட்டபோது எப்படி இருந்தது தெரியுமா”? என்றார். பிறகு அவர் நார்மல் ஆனார். அதனபிறகு லாஸ்லியா குடும்பத்தினர் வெளியேறினர்.

 

லாஸ்லியா பதில் பேசாமல் அழுதுகொண்டே இருந்தார். 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...