???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை 0 கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது! 0 சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் 0 மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது! 0 வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் 0 குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு 0 வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 0 தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் 0 நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ் வீட்டில் தண்ணீர் பிரச்சனை !

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   05 , 2019  05:35:53 IST

பிக்பாஸ் வீட்டின் 11 வது நாள் சிறிது வாக்குவாதத்துடன் தொடங்கியது.  பாத்திரம் கழுவும் வேலையை எப்போதும் நாங்கள் தான் செய்கிறோம் என்று வனிதாவிடம் சாக்‌ஷி மற்றும் கவின் கேட்கிறார்கள். இதற்கு மற்றவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை என்று அவர் கூறிவிட்டு, இதை யார் உங்களிடம் கேட்க சொன்னார்கள் என்று கோபத்துடன் கேட்கிறார் வனிதா. சேரன்தான் அப்படி கேட்கச் சொன்னதாக சொல்கிறார்கள் இருவரும். உடனே எதை சொல்ல வேண்டுமானாலும் தலைவர் மோகன் வைத்தியாவிடம் சொல்லிவிட்டு வந்து என்னிடம் சொல்லுங்கள் என்கிறார்.

 

மேலும் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது என்ற பஞ்சாயத்து எழுகிறது. இதைப்பற்றி பேசுவதற்காக பிக்பாஸ் வீட்டின் தலைவர் மோகன் வைத்தியா அனைவரையும் அழைக்கிறார்.  தலைவர் என்ற மதிப்பை தனக்கு தர வேண்டும் என்று கோரிப்பேசும் மோகன் வைத்தியா  தண்ணீர் தொட்டியில் 25 சதவிகிதம்தான் தண்ணீர் இருக்கிறது என்று கூறுகிறார். தண்ணீரை அனைவரும் அதிகமாக செலவு செய்கின்றனர் என்று வனிதா புகார் சொல்கிறார். தண்ணீர் பயன்பாட்டை கவனிக்க தனி ஒருவரை நியமிக்கலாமா? என்று சில போட்டியாளர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.  இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியப்படாது என்று பாத்திமா பாபு கூறுகிறார்.

 

இறுதியாக தர்ஷன் மட்டும் நல்ல ஆலோசனை கூறுகிறார். கழிப்பறைக்கு தேவையான தண்ணீரை வாளியில்   பிடித்து வைத்துகொள்ளலாம் என்று கூறிகிறார்.  இது சரியான யோசனை என்று அனைவரும் கூறுகின்றனர்.

 

 ஒரு குடம் 15 ரூபாய் என்று காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலையில் இப்போது தமிழ்நாடு மக்கள் இருக்கின்றனர்.  இந்த சிறுதொகைகூட இல்லாமால்  தண்ணீருக்கு அவதிப்படும் மக்களும் தமிழ்நாட்டில்தான் வசிக்கின்றனர்.  ஆனால் பிக்பாஸ்  போட்டியாளர்களோ இருக்கும் தண்ணீரை வாளியில் பிடித்து வைத்து குளிக்க வேண்டும் என்ற சிக்கன குணம்கூட இல்லாதவர்களாக இருக்கின்றனர். இப்போதாவது அவர்களுக்கு சாதாரண மக்களின் வலி புரிந்தால் சரிதான் பாஸ்.

 

இதுவரை மீரா மற்றும் மதுவை தனிமைப்படுத்திய அபி, ஷெரின், சாக்‌ஷி கூட்டணி  தற்போது லாஸ்லியாவை தனிமைப்படுத்த முயற்சிக்கின்றனர். ’’லாஸ்லியா  தங்களிடம் கோபித்துக்கொண்டு செல்கிறார்’’ என்று கவினிடம் சொல்கின்றனர். லாஸ்லியாவிடம் பேச வாய்ப்பு கிடைக்காதா ? என்று எதிர்பார்க்கும் கவின் இதைப் பயன்படுத்திக்கொண்டு லாஸ்லியாவிடம் நீ ஏன் கோபித்துகொண்டாய் என்று கேட்கிறார்.  லாஸ்லீயா தான் அப்படி செய்யவில்லை என்று சொல்கிறார்.

 

சிவ பூஜைக்குள் கரடி நுழைந்ததுபோல், இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது சாக்‌ஷி நுழைகிறார். உடனே சாக்‌ஷியிடம் கவின் அவள் அப்படி கோபம் கொள்ளவில்லை என்று கூறுகிறார் கவின்.  நாங்கள் சும்மா விளையாடினோம் என்று லாஸ்லியாவிடம் சாக்‌ஷி கூறுகிறார்.  லாஸ்லியா அங்கிருந்து சென்றதும் கவினிடம் ’’ ஏன் இதை அவளிடம் கூறினாய்..நாம் பேசுவதை அவள்  மற்ற போட்டியாளர்களிடம் சொல்கிறாரா என்பதை சோதிக்கத்தான் அப்படி சொன்னேன் என்று சாக்‌ஷி கூறுகிறார். இந்த யுக்தி எனக்கு தெரியவில்லை  என்று கவின் சொல்கிறார்.

 

அபியிடம் சென்று பேசும் லாஸ்லியா நான் கோபித்துகொள்ளவில்லை. உங்களை கடந்து வெளியில் சென்றேன் அதை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என்று கூறுகிறார்.  உடனே அபி லாஸ்லியாவிடம்  சமாளிப்பதுபோல் பேசுகிறார். இதைத்தொடர்ந்து  ’கவினுக்கு இருக்கு. அவன் எல்லாத்தையும் அவகிட்ட சொல்லிட்டான்’’ என்று ஷெரினிடம் சொல்கிறார் அபி.

 

இதற்கு நடுவில் வனிதாவை தேடி பிக்பாஸ் வீட்டுக்கு வரும்  காவல்துறையினரிடம், வனிதா சென்று பேசுகிறார். இதற்காக வனிதாவை தனியாக அழைக்கும் பிக்பாஸ்  போலிஸிடம் வனிதாவை பேசச் சொல்கிறார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது ஒளிபரப்பப்படவில்லை.

 

இதைத்தொடர்ந்து ஆண் போட்டியாளர்கள் பெண் போட்டியாளர்களைப்போல் வேடமிட்டு  அவர்களைப்போல் சண்டை போடுகிறார்கள்.

 

இதில் நன்றாக நடித்த தர்ஷனுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மதுமிதா மற்றும் சாண்டிக்கு சேற்றில் உள்ள மஞ்சள் மற்றும் ஸ்டார் காயின்ஸை எடுக்க வேண்டும் என்ற டாஸ்க் வழங்கப்படுகிறது.

 

இதை சிறப்பாக விளையாடும் அவர்கள்  598 மதிப்பெண்களை எடுக்கின்றனர்.  click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...