???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: எல்லையற்ற சண்டை-நடந்தது என்ன ?

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   04 , 2019  04:42:56 IST

பிக்பாஸின் 10வது நாள் எபிசோட் முழுவதும் சண்டையாகத்தான் இருந்தது.  மீராவையும் மதுவையும்,  அபி மற்றும் அவர்களது தோழிகள் ( சாக்‌ஷி, ஷெரின்) குறிவைத்து சண்டைபோடுகின்றனர்.

 

அனைவராலும் ஒதுக்கப்பட்ட மீரா முகெனிடம் தனியாக பேச வேண்டும் என்று நினைக்கிறார். இந்த வீட்டில் இருக்கும் சிலர் நம்மை பிரிக்க நினைப்பதாகவும், அதனால் அதில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று மீரா முகெனிடம் கூறுகிறார்.  இதற்கு முகென் ‘நான் யார் சொல்வதையும் கேட்கப் போவதில்லை. உன்னிடம்  நான் நன்றாகத்தான் பேசுகிறேன்’’ என்று கூறுகிறார்.

 

இவர்களுக்குள் என்ன நடந்தது என்று வனிதா கேட்க , எங்களுக்குள் இருக்கும் நட்பை பற்றி பேசினோம் என்று கூறுகிறார் முகென். அபியிடம் உன்னை பேச வேண்டாம் என்று மீரா கூறினாளா என்று வனிதா கேற்கிறார். அப்படி அவள் கூறவில்லை என்று சொல்லும் முகென் ‘யார் இதை சொன்னார்கள் ‘’ என்று கேட்டவுடன் சாக்‌ஷிதான் என்கிற வனிதா நேராக  சாக்‌ஷியிடம் கேட்கிறார்.

 

எனக்கு அப்படிதான் கேட்டது என்று சொல்லும் சாக்‌ஷி, மீரா சுத்தி வளைத்து அதைத்தான் சொல்லியிருக்கிறாள் என்கிறார்.

 

இப்போது இதை மீராவிடம் கேட்கப்போகிறேன் என்று கூறிவிட்டு போகும் முகென் அதை மீராவிடம் கேட்கிறார். நமக்கிடையே  நடந்த உரையாடல் எப்படி அவர்களுக்கு தெரியும் என்று கூறிவிட்டு செல்லும் மீரா ‘கொஞ்சமாவது முதிர்ச்சியாக நடந்து கொள் முகென் என்று கூறுகிறார்.

 

இதனால் கடுப்பாகும் முகென் கோபம் கொள்கிறார். இந்த சண்டை மேலும் முற்றுகிறது. இந்த சண்டையை பார்த்து தனக்கு பைத்தியம் பிடிக்கிறது என்று கூறும் சரவணன், பிக்பாஸ் கேமிராவை பார்த்து தன்னை வெளியில் அனுப்புமாறு கேட்கிறார். அவரை பாத்திபா பாபு மற்றும் சேரனும் சமாதானப்படுத்துகின்றனர்.

 

வனிதாவின் அறிவுறுத்தல்படி அபிராமி அனைவரின் முன்பும் முகென் எனது நண்பர் என்றும் நாங்கள் ஒன்றாகத்தான் இருப்போம், அது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள் இல்லை என்றால் கண்களை மூடிக்கொள்ளுங்கள் என்று சத்தமாக பேசுகிறார்.

 

இதை பற்றி ஏன் இப்போது பேசுகிறீர்கள் என்று கேட்கும் மதுமிதாவிடம் ஷெரின் , சாக்‌ஷி, மற்றும் வனிதா அத்துமீறி சண்டை போடுகின்றனர். சாவித்திரிபோல் நல்லவள் வேஷம் போடுகிறாள் என்று மதுமிதாவை பார்த்து ஷெரின் கூறுகிறார்.சண்டை எல்லையை மீறி செல்கிறது. இதனால்  செம கடுப்பான லாஸ்லியா கோபப்பட்டு எழுந்து செல்கிறார்.

 

இத்துடன் இந்த பிரச்சனை முடியும் என்று பார்த்தால் முடிந்ததுபோல் தெரியவில்லை.  இரவு முழுக்க இதைப்பற்றியே  பேசிக் கொண்டு ஒருவர் மற்றவர் மீது குறை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

 

மேலும் இதை பார்த்த நமக்கு பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு சண்டை எல்லை மீறுகிறது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...