???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்கும் 21-வயது இளைஞர்! 0 தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி 0 அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை 0 தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து 0 ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு 0 நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் 0 மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொஞ்சம் ஜொள்ளு! கொஞ்சம் வில்லு!

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   30 , 2019  03:33:11 IST

கிராமிய கலைகளை கற்றுத்தரும் டாஸ்க் தொடர்ந்து நடைபெறுவதால்  பிக்பாஸில் காலை நேரப்பாடல்கள் கிராமியப் பாடல்களாக இருக்கிறது. நேற்று ‘அவன் இவன்’ படத்தில் வரும் ‘ டியா டியா டோலு’ பாடல் ஒளிபரப்பப்பட்டது.  சேரன்,  ஷெரின், வனிதா ’என்னடா இது.. காலையில தூங்க விடமாட்டீங்களா’  என்ற எண்ணத்துடன் சோம்பல் முறித்தனர்.  முகென் , லாஸ்லியா, சாண்டி, தர்ஷன் கூட்டணி  வழக்கம்போல் ஆடியது. லாஸ்லியாவுக்கு வேறு நடன அசைவுகள் தெரியாது என்பது உறுதி. ஓரே மாதிரி எல்லா பாடலுக்கும் ஆடுகிறார். 

 

லாஸ்லியாவிடம் காதல் செய்வதை முழு நேர வேலையாக செய்து வரும் கவின் எங்கே என்று நாம் நினைப்பதற்குள் கவினும் லாஸ்லியாவும் பேசுவது காடப்படுகிறது.  ‘எனக்கு பல முறை டாட்டா காண்பித்து விட்டாய். நான் சென்ற பிறகு அடுத்த நாள் காலையில் நீ சந்தோஷமாக நடனம் ஆடுவாய்’ என்று கவின் கூற, அதற்கு எதுவும் பேசாமல் லாஸ்லியா சிரித்துகொண்டிருக்கிறார். முகத்தில் முழுக்க வெள்ளை க்ரீமை பூசிக்கொண்டிக்கிறார்.  வெளியே சென்றால் நிறைய பேச வேண்டும் ‘ என்று சிறிது நேரம் கழித்து லாஸ்லியா பதில் கூறுகிறார்.

 

’ பேச வேண்டும் என்றால் நடந்து முடிந்ததைப் பற்றி பேச வேண்டுமா?. அல்லது நடக்க இருப்பதை பேச வேண்டுமா?.  எதிர்காலத்தில் ஒன்றாய் பயணிக்கப்போகிறோம் என்றால் அதைப் பற்றி பேச நேரம் இருக்கிறது’ என்கிறார் கவின்.

 

இதற்கு லாஸ்லியா ‘ இங்கே  24 மணி நேரம் ஒன்றாகத்தான் இருக்கிறோம். வெளியில் சென்றால் அப்படி இருக்க முடியாது. இப்போது இருக்கும் நிலையை வைத்துகொண்டு முடிவு செய்யாதே’ என்று சொல்கிறார்.

 

இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க.  ‘நான் இல்லை என்றால் உன்னை யார் தொல்லை செய்வார்? ‘ என்று ஷெரின் தர்ஷனிடம் கேட்கிறார்.  தர்ஷனோ ‘ நிம்மதியாக இருப்பேன்’ என்று சொல்லிவிடுகிறார்.

 

‘ நீ கண்டிப்பாக என்னை மிஸ் செய்வாய்’ என்று மீண்டும் ஷெரின் கூறுகிறார். கவினின் நிலை நமக்கு வந்துவிடுமோ என்று  தர்ஷன் யோசிப்பது அப்பட்டமாக  தெரிகிறது.  விளையாட்டாக தலையணையை ஷெரின்மீது எறிந்துவிட்டு அமைதியாகிறார் தர்ஷன். 

 

இன்று முழுக்க காதலாக இருக்குமோ என்று நாம் நினைக்க தெய்வமாக நம்மைக் காப்பாற்ற வந்த காளீஸ்வரன்  ஆசான் வில்லுப்பாடலின் மகிமையை பேசுகிறார்.  வில்லு பாடலின் தோற்றம் திருநெல்வேலி என்றும்  வில்லு  பாடல் கலையை கண்டு பிடித்தது பெண்கள்தான் என்றும் கூறுகிறார்.  திருநெல்வேலியில் 300க்கும் மேற்பட்ட வில்லு பாட்டுக் கலைஞர்கள் இருப்பதாக கூறும் அவர், இந்த தகவலையெல்லாம் பாட்டாகவே பாடுவது மிகவும் சிறப்பு.

 

இதைத்தொடந்து சேரனின் அணிக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது.  வில்லுப்பாட்டின் இடையே எப்படி நகைச்சுவையை சேர்ப்பது,  வில்லுப்பாட்டு பாடும் நபருக்கு தோதாக ஒத்து ஊதும் நபர் எப்படி எதிரும் புதிருமாக கேள்வி கேட்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கிறார் காளிஸ்வரன்.

 

இதைத்தொடர்ந்து சாண்டி அணி வருகிறது. முகெனுக்கு ஏற்கனவே  டிரம்ஸ் வாசிக்க தெரியும் என்பதால் தவிலை நன்றாகவே வாசிக்கிறார். சாண்டி பயிற்சிப்பெற்ற  வில்லுப்பாட்டு கலைஞர்போல் போட்டியாளர்களைப்பற்றி பாடல் பாடுகிறார் சாண்டி.  அப்போது வீட்டின் அழகன் என்று தர்ஷனை வர்ணிக்கும் சாண்டி, ஷெரின்  தர்ஷன் பின்னால் சுற்றுகிறார் என்கிறார்.

 

இதனால் மன வருத்தம் அடைந்த ஷெரின் சாண்டியிடம் பேசுவது இறுதியில் நடக்கிறது. இதற்கு முன்பாக  இரு அணிகளும் தனித்தனியாக வில்லுப்பாட்டு ஒன்றை தயார் செய்து பாட வேண்டும் என்று ஆசான் கூறுகிறார்.

 

வேலை வேலை என்று சுற்றித்திரியும் பெற்றோர்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் பற்றி சாண்டி குழு பாடுகிறது.

 

இதைத்தொடர்ந்து சேரன் குழுவினர்  கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் சாதாரண மனிதன்  ஆடம்பரத்தைப் பார்த்து ஆசைகொள்வதால் ஏற்படும் விளைவுகளைப்பற்றி பாடுகின்றனர்.

 

சாண்டி அணியின் வில்லுப்பாட்டின் இடையில்  நகைச்சுவை, சோகம்  என்று உணர்வுகள் வெளிப்பட்டன.  சேரனின் குழுவினர் சொதப்பினார்கள். சேரன் பாடல் பாடும்போது வில்லை அடிக்கவில்லை. அவரே பேசிக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. இதனால் சாண்டி அணியினர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து காளீஸ்வரன் ஆசானுக்கு போட்டியாளர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர். போட்டியாளர்கள் என்ன சொதப்பலாக கலைகளை நிகழ்த்திக்காட்டினாலும் யார் மனதையும் புண்படுத்தாமல் அனைவரையும் காளீஸ்வரன் ஊக்குவித்தார்.

 

கிராமிய கலைஞர்கள் அளவிற்கு போட்டியாளர்கள்  சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைப்பதுகூட  அதிகபடியான எதிர்பார்ப்புதான்.

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...