???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு 0 அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது 0 ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் 0 நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! 0 கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 0 தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் 0 கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் 0 சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 0 இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் 0 குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 0 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து! 0 பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் 0 தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சரவணன்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   06 , 2019  04:20:13 IST

பிக்பாஸின் நேற்றைய எபிசோடில் எதிர்பாராத நிறைய திருப்பங்கள் இருந்தன.

 

முகெனிடம் சாக்‌ஷி பேசுவது  அபிராமிக்கு பிடிக்கவில்லை என்று கமல் சொன்னதைப் பெரிதுபடுத்தினார் சாக்‌ஷி. இதனால் அபிராமி கோபம்கொண்டு அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்திலிருந்து சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து அபிராமி அழுதுகொண்டே இருந்தார்.   தொடர்ந்து முகெனும், அபிராமியும் பேசிக்கொண்டிருந்தபோது முகென்  கோபத்தில் மேஜையை குத்தி உடைத்தார். 

 

இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து போட்டியைவிட்டு வெளியேற்ற விரும்பும் நபர்களின் பெயர்களை போட்டியாளர்கள் பிக்பாஸிடம் சொன்னார்கள்.  அனைத்து போட்டியாளர்களும் அபிராமியின் பெயரை சொன்னார்கள். அவரால் முகெனுக்குத்தான் அதிக பிரச்சனை என்று காரணம் சொல்லப்பட்டது.  இதைத்தொடர்ந்து இந்த வாரம் வெளியேற்றப்படும் பட்டியலில் அபிராமி, சாக்‌ஷி, லாஸ்லியா, சரவணன்  இடம் பெற்றனர்.

 

இதைத்தொடர்ந்து ஏர்டெல் நிறுவனத்தின் ரிசார்ஜ் பிளான்களை நினைவில் வைத்துக்கொண்டு,  கொடுக்கப்பட்டிருக்கும் போர்டில் சரியாக அந்த பிளான்களை  அடுக்க வேண்டும். இந்த டாஸ்கில் தர்ஷன், லாஸ்லியா, அபிராமி அணி வெற்றிப் பெற்றது.

 

இப்படி நிகழ்ச்சி சென்றுகொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று சரவணனை பிக்பாஸ் தனியறைக்கு ( கன்பஷன் ரூம்) அழைத்தார்.  சேரன் – மீரா விஷயத்தை கமல் விசாரித்த போது ‘ பேருந்தில் பெண்களை உரச நானும் சென்றிருக்கிறேன்’ என்ற வார்த்தையை  கூறினீர்கள். அதை பிக்பாஸ் வன்மையாக கண்டிக்கிறது. இதை தமிழ்நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.  இதற்கு நீங்கள் மன்னிப்பும்  கேட்டீர்கள். ஆனால் இந்த செயலை கண்டித்து உங்களை வீட்டில் இருந்து வெளியில் அனுப்ப பிக்பாஸ் முடிவு செய்துள்ளது’ என்று பிக்பாஸ் கூறினார்.

 

பெண்களை பற்றி தவறாக பேசிய சரவணன் ஏன்  அந்த நிகழ்ச்சியில் இருக்கிறார் என்று பல பிரபலங்கள் விமர்சித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சரவணன் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.

 

இதை விடமோசமான விஷயங்கள் எல்லாம் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளாகப் போய்க்கொண்டிருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு சரவணன் பேச்சுவாக்கில் சொன்னதை அவர் மன்னிப்புக் கேட்டபிறகும் பெரிது படுத்துவதெல்லாம் என்ன நியாயம் பிக்பாஸ்?

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...