???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: ’காசுக்கு கஷ்டப்பட்ட காலத்தில் எனக்கு வாய்ப்பு வழங்காதவர் சேரன்’: சரவணன்

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   03 , 2019  02:24:29 IST

மாரி திரைப்படத்தில் உள்ள ‘ ஏய் இந்தா இந்தா’ என்ற பாடலுடன் பிக்பாஸின் நேற்றைய எபிசோட் தொடங்கியது. நேற்று முழுவதும் சரவணன் -சேரன் இடையில் நடைபெற்ற வாக்குவாதம்தான் பெரிதாக பேசப்பட்டது.

 

சென்ற வாரம் டாஸ்கில் சிறப்பாக செயல்பட்ட இருவரை அனைத்து போட்டியாளர்களும் தேர்வு செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் கூறினார். இதைத்தொடர்ந்து அனைவரும் ஒரு மனதாக  மதுமிதா, சாண்டி, முகென் ஆகியோரை தேர்வு செய்தனர்.  இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடாதவர்கள் யார் ? என்று தேர்வு செய்வதில் சிக்கல் எழுந்தது.  போட்டியாளர்கள் சிலர் சேரன் சரியாக விளையாடவில்லை என்று சொன்னதால், விரக்தியடைந்த சேரன் எல்லா வாரமும் என் பெயரைத்தான் தேர்வு செய்வீர்களா என்று கேட்டார். என்னைப் பொருத்தவரை சரவணன்தான் சரியாக டாஸ்க் செய்யவில்லை என்று தோன்றுகிறது,  இதை ஏன் மற்றவர்கள் சொல்லவில்லை என்றும் கேட்டார்.

 

இதைக்கேட்ட சரவணன், தன்னை தனிப்பட்ட முறையில் சேரன் தாக்குகிறார்  என்று சேரன் மீது கோபம் கொண்டார். ‘சேரன் லூசு மாதிரி பேசுகிறார்’ என்று வார்த்தையை விட்டார். இதனால் சேரனின் மனம் புண்பட்டது. தன்னை ஏன் மரியாதை குறைவாக பேசுகிறார் என்று கேட்டார். சேரனுக்கு ஆதரவாக தர்ஷன் பேச, சரவணனுக்கு ஆதரவாக சாண்டி, கவின் பேசினர்.

 

இதைத்தொடர்ந்து  யார் சரியாக செயல்படவில்லை என்ற முடிவை வீட்டில் இருப்பவர்கள் தேர்வு செய்யத் தவறியதால், வீட்டின் தலைவரான தர்ஷன் தனியாக ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறினார். ஷெரின், லாஸ்லியா ஆகியோரை அவர் தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர். ’வயதில் மூத்தவர்களே சண்டை போடலாமா’ என்று மதுமிதா சரவணனிடம் தனியாக அழுதார். இதைத்தொடர்ந்து பேசிய சரவணன் இனி தான் சண்டை போட மாட்டேன் என்று கூறினார்.  மேலும் அவர் ‘ 1996 -இல் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு வேண்டும் என்று சேரனிடம் கேட்டேன். அவர் பிடிக்கவில்லை என்றால் நேரடியாக கூறியிருக்கலாம். ஆனால் நீங்கள் பல உயரங்களை அடைந்துவிட்டீர்கள் என்றும் பல படங்களில் நடித்துவிட்டீர்கள் என்று கூறிவிட்டு நான் ஏன் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அது எப்படி வலித்தது என்று எனக்கு மட்டும்தான் தெரியும். அப்போது நான் மிகவும் கஷ்டப்பட்ட நேரம்... அவரிடம் இயக்குநர் என்ற கர்வம் இருக்கிறது. அது எனக்கு பிடிக்கவில்லை. அவரிடம் கமல் சார் மன்னிப்பு கேட்க  சொன்னால், நான் இந்த நிழ்ச்சியில் இருக்க மாட்டேன்’ என்று கூறினார்.

 

 

இதைத்தொடர்ந்து தலைவர் போட்டிக்கான டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கில் ஸ்கேட்டிங் போர்டு போல் ஒன்று வழங்கப்பட்டது, இதில் போட்டியாளர்கள் மூவர் நிற்க வேண்டும். பாதுகாப்பிற்காக ஹெல்மெட் வழங்கப்படும். டாஸ்க் தொடங்கியதும் போட்டியாளர்கள் மூவரும் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். யார் இறுதிவரை அந்த போர்டில் இருக்கிறார்களோ அவர்கள்தான் அடுத்த வாரத்தின் தலைவர். இந்த போட்டியில் சாண்டியின் கை தவறுதலாக மதுமிதாவின் மூக்கில் பட்டதால், அவருக்கு ரத்தம் வந்தது. இதனால் சாண்டி போட்டியிலிருந்து விலகினார். இதைத்தொடர்ந்து டாஸ்கில் வென்ற முகென் தலைவராக  தேர்வு செய்யப்பட்டார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...