???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்! 0 நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு! 0 கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி 0 வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை! 0 பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 0 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் 0 நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை 0 சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் 0 கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு 0 தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் 0 பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

”கவினை முன்பு பிடிக்கும் இப்போ ரொம்ப பிடிக்கும்’’: அய்யோ பாவம் லாஸ்லியா!

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   23 , 2019  02:05:00 IST

கோமாளி படத்திலிருந்து ‘ யார் கோமாளி’ என்ற பாடலுடன் பிக்பாஸ் தொடங்கியது.

 

பிக்பாஸ் தொடங்கியதுமே இந்த வாரம் யார் லக்சூரி பட்ஜெட் டாஸ்க்கை சிறப்பாக விளையாடினார்கள் என்று தேர்வு செய்யப்பட்டது. அனைவரும் சாண்டி, லாஸ்லியா, சேரன் என்றார்கள். ஆனால் வனிதாவோ தனது பெயரை கூறிவிட்டு, ’பள்ளி மாணவியாக நான் நடித்தபோது சுவாரஸ்யமான விஷயங்களை செய்தேன்’ என்றார்.

 

ஆனால் பெரும்பான்மையானோர் பரிந்துரை செய்த பெயர்களை வீட்டின் தலைவரான ஷெரின் பிக்பாஸிடம் கூறினார்.

 

இதைத்தொடர்ந்து இந்த வாரம் டாஸ்க் உட்பட எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய ஒரு நபரை தேர்வு செய்யும்போது அனைவரும் சேரன் பெயரை பரிந்துரை செய்தனர். இதனால் கடுப்பான வனிதா, ’ஏன் எனது பெயரை யாரும் கூறவில்லை.

 

மூன்று வேளையும் சமையல் வேலை செய்து, அதன் பிறகு டாஸ்கையும் செய்திருக்கிறேன்’ என்றார். இதைத்தொடர்ந்து சேரனுக்கு ஆதரவாக ஷெரின் சில கருத்துக்களை பேசினார். முடிவாக சேரன் பெயரை ஷெரின் கூறினார். இதைத்தொடர்ந்து இந்த வாரம் தலைவர் பதவிக்கான போட்டியில் சேரன், லாஸ்லியா, சாண்டி போட்டியிடுவார்கள் என்று முடிவானது.  

 

இந்த வாரம் முழுவதுமாக யார் சரியாக செயல்படவில்லை என்பதை போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டாம் என்று பிக்பாஸ் கூறினார்.  இதனால் இந்த வாரம் யாரும் சிறைக்கு செல்லவில்லை.

 

இதைத்தொடர்ந்து ஷெரின்,’ சேரன் சரியாக செயல்பட்டதால்தான் அவரை தேர்வு செய்தோம் என்றும் அதற்காக கோபித்துக்கொள்ள வேண்டாம்’ என்று வனிதாவிடம் சொன்னார்.  இதற்கு வனிதா ’நீ மன்னிப்பு கேட்க வேண்டாம்.  எனது கருத்தை நான் தெரிவித்தேன்’ என்றார்.

 

இதைத்தொடர்ந்து கவின், சாண்டி, தர்ஷன், லாஸ்லியா, முகென், சேரன் ஆகியோர் கண்ணாமூச்சி விளையாடினர்.  முதலில் தர்ஷன்  கேட்ச்சராக (கண்டுபிடிக்கும் நபர்) அனைவரையும் கண்டுபிடித்தார்.  இதைத்தொடர்ந்து  கவின் கேட்ச்சராக விளையாடியபோது,  தர்ஷனும்  முகெனும் அவரவர்  சட்டையை மாற்றிக்கொண்டனர். இதனால் கவினால் அவர்களை கண்டறிய முடியவில்லை.

இதைத்தொடர்ந்து கவினும் லாஸ்லியாவும் சேரன் சொன்னதைப்பற்றி பேசிக்கொண்டனர்.  ’லாஸ்லியாவை குழந்தையாக நினைப்பதாக  சேரனிடம் நான் சொன்னேன்’ என்று கவின்  கூறியபோது, வெட்கத்தில்  முகத்தை மூடிக்கொண்டார் லாஸ்லியா.  இதைத்தொடர்ந்து பேசிய லாஸ்லியா  சேரனிடம் தான் சொன்னதை  கவினிடம் சொன்னார் ’ முதலில் கவினை பிடிக்கும்.. இப்போ ரொம்ப பிடிக்கும்.  இதற்கு மேலே இந்த உறவு எப்படி போகும் என்பதை போட்டியிலிருந்து வெளியே சென்றதும்தான்  பேச வேண்டும் என்று சேரனிடம் சொன்னேன்’ என்று கூறினார்.

 

கவினும்  இதைக்கேட்டு வெட்கத்துடன் சிரித்தார். இதைத்தொடர்ந்து போட்டியாளர்கள்  தங்களுக்குள் யாரை பிடிக்கும் என்றும் அவரின் குணங்களை பற்றி பேச வேண்டும் என்றும் பிக்பாஸ் கூறினார். அப்போது லாஸ்லியா கவினை அதிகமாக புகழ்ந்தார். அவர் பேசும்போது  கவின் மீது வைத்துள்ள அன்பு வெளிப்பட்டது.  மற்றவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எதையும் செய்யும் குணம் கவினிடத்தில் இருக்கிறது என்றும்  கவின் தனக்கு உறுதுணையாக எப்போதும் நிற்கிறார் என்றும் கூறினார்.

 

மேலும் ’கவினை முன்பு பிடிக்கும் இப்போது ரொம்ப பிடிக்கும்’ என்றும் கூறினார்.  இந்த வசனத்தை  நேற்றைய எபிசோடில் மூன்று முறைக்கும் மேலாக அவர் கூறினார்.  

 

சாக்‌ஷியை ஆசை வார்த்தை பேசி ஏமாற்றிய கவினை கண்மூடித்தனமாக  லாஸ்லியா நம்புவதால் லாஸ்லியா ஆர்மியினர் கவலையுடன் இருக்கிறார்களாம்!.

 

காதலைத்தவிற வேறு விஷயங்கள் பிக்பாஸுக்கு கிடைக்கவில்லை என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருவது ஒருபுறம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...