???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு 0 அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது 0 ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் 0 நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! 0 கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 0 தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் 0 கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் 0 சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 0 இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் 0 குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 0 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து! 0 பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் 0 தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: சாக்‌ஷி என்னை ஏமாற்றுகிறார்-கவின் புலம்பல்

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   02 , 2019  02:35:00 IST

பிக்பாஸின் நேற்றைய எபிசோட் முழுவதும் கவின் – லாஸ்லியா- சாக்‌ஷி ஆகியோரின் உறவுச் சிக்கல் தொடர்பான பிரச்சனை விவாதிக்கப்பட்டது.

 

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலே  சாக்‌ஷி அழுதுகொண்டிருந்தார்.  எப்போதும் பாடலுடன் தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி  நேற்று அழுகையுடன் தொடங்கியது.  சாக்‌ஷிக்கும் கவினுக்கு இடையில் என்ன நடந்தது என்ற கேள்விக்கு பதிலளித்தார் சாக்‌ஷி. ’ என்னை விட்டு பிரிந்த அன்றே கவின் வேறு ஒரு பெண்ணின் கையை பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். எனது உணர்வுகளுக்கு அவர் மதிப்புக்கொடுக்கவே இல்லை. கவின் ஒரு ஆண் அவனுக்கு புரியவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால் லாஸ்லியாகூட என்னிடம் வந்து சரியாக பேசவில்லை. நான் பல முறை அவரிடம் பேச முயற்சித்தேன்’ என்றார்.

 

 இதைத்தொடர்ந்து பேசும் லாஸ்லியா ‘நானும் கவினும் பேசுவதால் சாக்‌ஷி மனம் புண்பட்டது என்று முதலில்  எனக்கு தெரியாது.  வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் என்னிடம் வந்து சொன்னதும்தான் புரிந்துகொண்டேன்’ என்கிறார்.

 

இதற்கிடையில் குறிக்கிடும் சாக்‌ஷி ‘உங்கள் கண் முன்னே நான் காயப்படும் விஷயம் தெரிகிறது. ஆனால் மற்ற போட்டியாளர்கள் வந்து சொல்லும் வரை  உங்களுக்கு தெரியாது என்று சொல்வது நியாயமா’ என்று கேட்கிறார்.

 

இதற்கு லாஸ்லியா ’மற்றவர்கள் சொல்லும் வரை தனக்கு என்ன நடந்து என்று தெரியாது’ என்கிறார்.  இதைத்தொடர்ந்து அந்த இடத்திலிருந்து கோபமாக சென்று விடுகிறார்.

 

இதைத்தொடர்ந்து பேசும் கவின் ‘சாக்‌ஷி என்னிடம் நடிக்கிறார். இதை போட்டியின்  உத்தியாக பயன்படுத்துகிறார். அது மற்றவர்களுக்கு புரியவில்லை’ என்கிறார்.

 

மற்றப் போட்டியாளர்கள் அனைவரும் சாக்‌ஷிக்கு ஆதரவாக கவினிடம் பேசுகின்றனர்.  சரவணன்கூட சாக்‌ஷிக்கு ஆதரவாக பேசுகிறார். ‘  ஒரு பெண்ணிடம் கொண்டிருந்த நட்பை முறித்துக்கொண்ட பிறகு  அவள் கண்முன்பே வேறு ஒரு பெண்ணிடம் பேசினால் கண்டிப்பாக அந்த பெண்ணுக்கு வலிக்கும். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் உண்டு என்கிறார்.  

 

இதைத்தொடர்ந்து கவின் ஏன் தன்னை தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார் என்று சாக்‌ஷி  அழுகிறார். அப்போது பேசும் தர்ஷன்’ இரவு 3 மணிக்கு லாஸ்லியாவுடன் என்ன நட்பாக பேச வேண்டும் . அது தேவையா ?.’ என்று கவினிடம் கேட்கிறார்.

 

இதற்கிடையில்  அனைவரிடமும் பேச வேண்டும் என்று  கூறும் லாஸ்லியா ‘ சாக்‌ஷி காயப்படுவதற்கு நான்தான் காரணம்.  அபியை தவிர இந்த வீட்டில் இருக்கும் யாரும் என்னிடம் பேச வேண்டாம். வேண்டுமென்றே தான் சாக்‌ஷியை காயப்படுத்தினேன்.  இதற்காக அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்கிறேன்’ என்று கூறினார்.

 

இதைத்தொடர்ந்து அழுதுகொண்டே கழிவறைக்கு சென்றுவிட்டார்.  அவரை பின் தொடர்ந்து செல்லும் அபி , அவருக்கு ஆறுதலாக பேசுகிறார்.  

 

இது ஒரு புறம் இருக்க இரு பெண்களும் என்னை தவறாக பார்க்கிறார்கள் அடுத்த வாரமே தான் சென்றுவிடுகிறேன் என்று கவின் கூறுகிறார்.  வீட்டில் இருந்து செல்வது தீர்வாகாது என்று மதுமிதா கூறுகிறார்.  இதைத்தொடர்ந்து சாக்‌ஷி கவினிடம் ‘எல்லா பிரச்சனைக்கும் நான் தான் காரணம்’ என்கிறார். இதை கேட்கும் மற்ற போட்டியாளர்கள் ’உனக்காக கவினிடம் சண்டைபோடும்  நாங்கள் பைத்தியக்காரர்களா? ’என்று கேட்கின்றனர்.  இதைத்தொடர்ந்து  சேரன் ‘  உங்கள் பிரச்சனையை நீங்கள் மூவரும் பேசி தீர்வு  காணுங்கள். இதில் எங்களை இழுக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் நாங்கள்தான் முட்டாளாக்கப்படுகிறோம்’ என்கிறார்.

 

இதைத்தொடர்ந்து பேசும் ஷெரின்’ இங்கே யாரும் குழந்தைகள் இல்லை. பக்குவமான மனிதர்கள் யாரும் இதுபோன்று  நடந்துகொள்ள மாட்டார்கள். எல்லா பழியையும் உன் மேல் போட்டுக்கொள்ள வேண்டிய தேவையில்லை. இனியாவது கவினைப் பற்றிய  பிரச்சனையை மறந்துவிடு’ என்று சாக்‌ஷியிடம் சொல்கிறார் .  உஸ்ஸ்ஸ்ஸ்!

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...