???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: ’விட்டுக்கொடுப்பதற்கும் எல்லை இருக்கிறது’: கடுப்பேற்றிய போட்டியாளர்கள்

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   10 , 2019  02:30:44 IST

பிக்பாஸ் வீட்டின்  நேற்றைய எபிசோட் பார்வையாளர்களை கடுப்பாக்கியது என்று கூறலாம். கடுமையான டாஸ்க் கொடுக்கப்படுவதில்லை என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து இன்றுதான் பிக்பாஸ் கடுமையான டாஸ்கை கொடுத்தார். எல்லா சீசனிலும் வருவதுபோல் இரு கைகளிலும் கண்ணாடி பாத்திரத்தை ஏந்திக்கொண்டு நிற்க வேண்டும். கண்ணாடி பாத்திரத்தில் கலர் நீர் நிரப்பப்பட்டிருக்கும். இறுதிவரை யார் கண்ணாடி பாத்திரங்களைக் கீழே விழாமல் வைத்திருக்கிறார்களோ அவர்களே  வெற்றியாளர்கள். 

 

இந்த போட்டி நடப்பதற்கு முன்பாகவே வனிதா, ‘ கேப்டன் போட்டிகள் சரியாக நடப்பட்தில்லை. நாமினேஷனில் இருந்து தப்பிக்கத்தான் இதில் சிலர் தேர்வு செய்யப்படுகிறார்கள்’ என்றார்.  மேலும்  தான் போட்டியில் கலந்துகொள்ள மாட்டேன் என்றார்.

 

ஆனால் பிக்பாஸ் அவரை போட்டியில் கலந்துகொள்ளும்படி கட்டளையிட்டார். இதனால் அவர் கலந்துகொண்டார். ஆனால் போட்டி தொடங்கியதும், விட்டுக்கொடுக்கிறேன் என்று போட்டியிலிருந்து விலகினார் வனிதா.

 

லாஸ்லியா, தர்ஷன் போட்டியை தொடர்ந்து விளையாடினர். ஆனால் தர்ஷனும் காரணம் ஏதும் சொல்லாமல் விலகிக்கொண்டார்.  மற்ற பிக்பாஸ் சீசனை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த சீசனில் உள்ள போட்டியாளர்கள் விட்டுக்கொடுக்கிறேன் என்று கூறி டாஸ்கை சரியாக செய்வதில்லை. சீசன் 1 மற்றும் சீசன்2 வில் இதே போட்டி நடைபெற்றபோது 8 மணி நேரத்திற்கும் மேலாக இந்த டாஸ் தொடர்ந்தது. போட்டியாளர்கள் விட்டுக்கொடுக்காமல் போட்டி மனப்பான்மையுடன் விளையாடினர். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

இதைத்தொடர்ந்து ‘ நாங்கள் விட்டுக்கொடுத்தால் உனக்கு வேண்டாம். நீ மட்டும் ஏன் விட்டுக்கொடுக்கிறாய்’ என்று லாஸ்லியா தர்ஷனிடம் கேட்டார். இந்த வாக்குவாதம் சிறிது நேரம் சென்றது.

 

இறுதியாக லாஸ்லியா வீட்டின் தலைவராக பொறுப்பேற்றார். இதன்பிறகு அடுத்த டாஸ்க் தொடங்கியது. மியூசிக்கல் சேர் விளையாட்டுப்போல் மியூசிக்கல் பந்து விளையாட்டு நடந்தது. இறுதியாக பந்து யாரிடம் இருக்கிறதோ அவர்கள் கண்ணாடி ஜாடியில் இருக்கும் சீட்டில் ஒன்றை எடுக்க வேண்டும். அதில் என்ன எழுதியிருக்கிறதோ அதை மற்றவர்களை செய்யச்சொல்ல வேண்டும்.

 

முதலில் சாண்டி ஒரு சீட்டை எடுத்து லாஸ்லியாவை 1 லிட்டர் ஐஸ்கிரீமை சாப்பிட வைத்தார். தொடர்ந்து தர்ஷனை உப்புபோட்ட காப்பியை குடிக்க வைத்தார்.

 

இந்த டாஸ்கில் தலையில் முட்டையை உடைப்பது, கிரில் சிக்கன் சாப்பிடுவது, குளிர்ந்த நீரை ஊற்றுவதுபோல வினோத விஷயங்களை போட்டியாளர்கள் செய்தனர்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...