???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு 0 தமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் உயிரிழப்பு 0 கல்லூரி செமஸ்டர் தேர்வு பற்றி முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் கைது 0 நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: நாள் 8: பிக்பாஸில் இருந்து முதலில் வெளியேறப் போவது யார்?

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   02 , 2019  02:20:28 IST

”ஒரு குச்சி ஒரு குல்பி வந்து நின்னு எடு செல்பி”என்ற பாடலுக்கு அனைவரும் நடனமாட, பிக்பாஸின் 8 வது நாள் தொடங்கியது.

 

கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட மோகன் வைத்தியாவின் வருகையை நக்கல் செய்யும் வகையில் கவின்  மற்றும் சாண்டி ’வர்றாரு வர்றாரு’ என்றபாடலை பாடினர். அவரும் அதற்கேற்ப தன்னை கெத்தாக பாவித்துக்கொண்டு நடந்து வந்தார்.

 

இதைத்தொடர்ந்து சாக்‌ஷி தற்காப்பு கலையை அனைத்து போட்டியாளர்களுக்கும் சொல்லி கொடுத்தார். இதையும் ஜாலியாகவே செய்து முடித்தனர் மற்ற போட்டியாளர்கள்.

 

சிறு குழந்தைகள் அழுவதுபோல், தனது அம்மா, அப்பா நினைவு வருகிறது என்று கண்கலங்கினார் சாக்‌ஷி. இதைத் தொடர்ந்து முதல் லக்‌ஷூரி பட்ஜெட்டுக்கான(சமையலுக்கு தேவையான பொருட்கள்) ஷாப்பிங் செய்யப்பட்டது. மனதை திறந்த டாஸ்க்கில் பதில்கள், நேர்மையாகவும்,உண்மையாகவும் இருந்ததால், இந்த வாரத்திற்கு மொத்த மதிப்பெண்களும் (3200) முழுமையாக வழங்கப்பட்டது.

 

’என்னப்பா எந்த விறுவிறுப்பும் இல்லையே’ என்ற பார்வையாளர்களின் மைண்ட் வாய்ஸ பிக்பாஸுக்கு கேட்டதுபோல், வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர்களை தேர்வு செய்யுங்கள் என்று பிக்பாஸ் கூறினார்.

 

ஒவ்வொரு போட்டியாளராக தனியறைக்கு சென்று, அவர்கள் வெளியேற்ற விரும்பும் போட்டியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். அனைவரும் பாசத்தை கொட்டுவதுபோல் பாவனை செய்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தவே இந்த செயல்முறை நடத்தப்பட்டது.  இதில், மதுமிதா 6 வாக்குகள், மீரா 8 வாக்குகள், சாக்‌ஷி 2 வாக்குகள், கவின் 2 வாக்குகள், சரவணன் 2 வாக்குகள், சேரன் 5 வாக்குகள், ஃபாத்திமா பாபு 3 வாக்குகளும் பெற்று, இந்த வாரம் வெளியேற்றப்பட உள்ள போட்டியாளர்கள் இவர்கள்தான் என்று அறிவிக்கப்பட்டது.

 

இதைத்தொடர்ந்து அபிராமி பெயர் மட்டும் இந்த பட்டியலில் வரவில்லை ஏன் என்று சேரன் மற்றும் கவின் ஆச்சரியப்படுகின்றனர். கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் மீராவை குறிவைத்து வெளியே அனுப்ப நினைக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது. சாக்‌ஷி மற்றும் கவின் நாம் எப்படி இந்த  பட்டியலில் வந்தோம் என்று தங்களுக்குள்ளே புலம்புகிறார்கள்.

 

போட்டியாளர்களுக்கு நடுவில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறார் பிக்பாஸ்!

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...