![]() |
பிக்பாஸ் சீசன் 3: நாள் 2-கவினிடம் காதல் தெரிவித்த அபிராமி முதல் உப்புமா சண்டை வரைPosted : புதன்கிழமை, ஜுன் 26 , 2019 01:42:51 IST
ரவுடி பேபி பாடலுடன் தொடங்கியது பிக் பாஸ் சீசன் 3யின் 2 வது நாள் எபிசோட் . இந்த பாடலுக்கு அனைத்து போட்டியாளர்களும் அவர்களுக்கு பிடித்ததுபோல் நடனமாடினர். சாண்டியும் லாஸ்லியாவும் தனியே அந்தப் பாடலின் நடனத்தை அச்சு அசலாக கொண்டு வந்தார்கள்.
கவின் மீதுள்ள காதலை அனைத்து போட்டியாளர்களிடம் அபிராமி அவரே போய் சொல்கிறார். இறுதியாக கவினிடம் இந்த விஷயத்தை சொல்லிவிட ஷாக்! ஆகும் நவீன் முதலில் சமாளிக்கிறார். சில நாட்கள் சென்றபிறகு எனது குணம் புரிந்து கொண்டதும் காதலை சொல்லு என்று கூறும் கவின், என்னை பற்றி தெரிந்ததும் நீயே ஓடி விடுவாய் என்று கூறிவிடுகிறார்.
வெளியில் அன்பு கிடைக்காமல்தான் இங்கே வந்ததாக சொல்லும் மோகன் வைத்தியா, சிறிது நேரத்தில் அழத் தொடங்குகிறார். நாட்டில் எதற்காகவோ சண்டை நடக்கிறது. ஆனால் பிக்பாஸ் இல்லத்தில் உப்புமாவிற்கு சண்டை நடக்கிறது.
சாக்ஷி தனக்கு உப்புமா பிடிக்கவில்லை என சண்டையின் மூலத்தை ஆரம்பிக்க, பிடிக்காதா? ஒத்துக்காதா? என சரியான கேள்வியை முன்வைத்தார் வனிதா. ஆனால் அதை அவர் கேட்ட விதம் தான் அவரை வில்லி போல் ஆக்கிவிட்டது.
இந்த விஷயத்தை தனியே கவினும் சாக்ஷியும் பேசிக் கொண்டார்கள். புதிய போட்டியாளராக களம் இறங்கினார் மாடல் மீரா மிதுன். இவருக்கும் சாக்ஷிக்கும் முன்பே பிரச்சனை இருந்திருக்கும் போல. அது அவரது முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. மிதுனை ஏற்றுக் கொள்வதில் அபிராமியும், சாக்ஷியும் ரொம்பவும் அலட்டிக்கொண்டார்கள்.
இறுதியில் சேரன் கொடுத்த அறிவுரையால் அவரை ஏற்றுக்கொண்டார்கள். கவினிடம் காதல் தெரிவித்த அபிராமி மற்றும் உப்புமாவுக்கு சண்டை என்று நகர்ந்தது 2 வது நாள்.
|
|