???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்து்றை போலீசார் சோதனை: சார் பதிவாளர்கள் கைது 0 தினகரனைத் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: ராஜேந்திர பாலாஜி 0 தமிழகத்தில் அடுத்த இருநாட்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 25 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் 0 இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நல்லுறவுடன் செயல்பட வேண்டும்: சீனா அறிவுரை! 0 இடைத்தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது! 0 அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்ததுள்ளது: ஸ்டாலின் 0 டெண்டர் முறைகேடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்க இறுதி கெடு 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 0 ஜம்மு காஷ்மீரில் சட்ட மேலவை கலைப்பு! 0 பிரதமர் மோடி பொதுத்துறை நிறுவனங்களை பாழ்படுத்துகிறார்: ராகுல் கடும் தாக்கு! 0 அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி! 0 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எப்படி சாத்தியம்? மன்மோகன்சிங் 0 நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவருக்கு ஜாமின்! 0 சென்னையில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கவினைவிட சேரனுக்கு குறைந்த வாக்குகள் எப்படி ? பிக்பாஸின் தில்லாலங்கடி !

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   09 , 2019  03:48:45 IST

பிக்பாஸ் வீட்டிலிருந்து எதிர்பாராத விதமாக நேற்று சேரன் வெளியேற்றப்பட்டார். பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்த சேரன் எப்படி வெளியேற்றப்பட்டார் என்ற கேள்வியை வனிதா எழுப்பினார். இதே கேள்வி பார்வையாளருக்கும் இருந்தது. ஆனால் வெளியேற்றப்பட்ட சேரனுக்கு ரகசிய அறை வழங்கப்பட்டது. மேலும் அவர் சிறிது நாட்கள் ரகசிய அறையில் இருந்துவிட்டு மீண்டும் வீட்டுக்குள் செல்வார். இது பார்வையாளர்களுக்கு மட்டுமே தெரியும்.

 

இதற்கு முன்பாக கமல் ஆசிரியர் தின வாழ்த்துகள் தெரிவித்தார். கல்வியின் முறை மாற வேண்டும் என்றும் மனப்பாடக் கல்வி முறையை கல்வி வல்லுநர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என்று கூறினார். கல்வி என்பது எல்லா இடத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியை வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பார்ப்பதைவிட அதையும் ஒரு கல்வியாக பார்க்க வேண்டும். கல்வி எதிலும் இருக்கும் தூணில் இருக்கும். பிக்பாஸிலும் இருக்கும்’ என்றார்.

 

தொடர்ந்து அகம் டிவி வழியே அகத்தினுள் என்ற வாசகத்தை சொல்லாமல் நிகழ்ச்சியை தொடங்கினார். அப்போது சாண்டி சோபாவில் படுத்துகொண்டிருந்தார். இதை பார்த்த கமல் சாண்டியை ’அரங்கநாதன் சாண்டி’ என்று நக்கல் செய்தார்.

 

தொடர்ந்து போட்டியாளர்களை அவர் பாணியில் கலாய்த்தார். சிறந்த போட்டியாளராக வனிதா, தர்ஷனை தேர்வு செய்தது யார் என்ற கேள்வியை கேட்டார். இதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தது என்று தர்ஷன் , ஷெரின் கூறினர். தொடர்ந்து தன்னை தேர்வு செய்தது சரி என்பதற்கான காரணங்களை வனிதா கூறினார். மேலும் இதை சேரன் ஒப்புக்கொண்டார்.

 

தொடர்ந்து ஷெரின், முகெனை கமல் காப்பாற்றினார். லாஸ்லியா, கவின், சேரன் இதில் யார் வெளியேறுவார் என்ற நிலை ஏற்பட்டது. கவின் அடுத்த வாரத்திற்கும் சேர்த்து நாமினேட் செய்யப்பட்டார் என்ற விஷயமும் இருக்கிறது என்று கூறிய கமல், கவின் காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார்.

 

தந்தையா? மகளா? என்ற நிலை வந்தது. இறுதியாக சேரன் என்று கமல் கூறினார். இந்த முடிவை வனிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ’போட்டி எங்கே சென்றுகொண்டிருக்கிறது. பார்வையாளர்களுக்கு என்ன நேர்ந்தது, ஏன் இப்படி ஒரு முடிவு வந்திருக்கிறது?’ என்று அழுதார் வனிதா. ஒருவர் வெளியேறும்போது வனிதா அழுவது இதுவே முதல் முறை.

 

மேலும் லாஸ்லியாவும் அழுகையை நிறுத்தவில்லை. தொடர்ந்து அழுதார். ’இது சரியான முடிவு இல்லை. நான்தான் வெளியே செல்ல வேண்டும்’ என்றார் லாஸ்லியா.

 

சேரன் அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கும்போதுகூட அவர் அழுகையை நிறுத்தவில்லை. இதைத்தொடர்ந்து வெளியே வந்த சேரனுக்கு ரகசிய அறை கொடுக்கப்பட்டது. கவினை விட மக்களின் ஆதரவை பெற்ற சேரன் எப்படி குறைவான வாக்குகளை பெறுவார் என்று நெட்டீசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...