???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்!- தொல்.திருமாவளவன் 0 தமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு 0 குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி 0 அதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா?: அமைச்சர் ஜெயக்குமார் 0 எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா 0 கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி! 0 திருமாவளன் சகோதரி கொரோனாவால் மரணம் 0 கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்! 0 நாடக இயக்குநர் அல்காசி மரணம்! 0 5,8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் 0 தமிழகத்தில் ஒரே நாளில் 109 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு 0 தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு 0 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார் 0 ஆளுநர் மாளிகை சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ரத்து
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழர் பாரம்பரிய கலைகளுடன் களைகட்டிய பிக்பாஸ் வீடு!

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   28 , 2019  01:07:33 IST

பிக்பாஸ் வீட்டின் நேற்றைய எபிசோடில் லாஸ்லியாவும் சேரனும் தாங்கள் ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக இருக்க வேண்டும் என்று விவரித்தனர்.

 

’ நான் நானாக இருப்பதால்தான் இவ்வளவு நாட்கள் நிகழ்ச்சியில் தொடர்கிறேன். மேலும் எனது செயல்பாடுகள் மக்கள் ஏற்கும் வகையில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெறுவேன் என்று நம்புவதாக’ கூறினார் லாஸ்லியா.

 

இதைத்தொடர்ந்து தர்ஷன் சில கேள்விகளை எழுப்பினார்’ சேரன் அப்பாவை நாமினேட் செய்தபின் அழுதீர்கள். இதுபோன்று உணர்ச்சிவசப்படுபவர்கள் எப்படி வெற்றியாளராக முடியும்?’ என்று கேட்டார். இதற்கு பதிலளித்த லாஸ்லியா ‘ அந்த நேரத்தில் எனக்கு அப்படி தோன்றியது. நாம் மனிதர்களுடன்தான் விளையாடுகிறோம், சுவரோடல்ல. அதனால் உணர்ச்சிகள் வெளிப்படத்தான் செய்யும். நான் யார் என்று தெரியாமலே எனக்கு ஆதரவளிக்கும் மக்களுக்காக எனது உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு விளையாடுவேன்’ என்றார்.

 

இதைத்தொடர்ந்து சேரன் பேசினார் ‘ வீட்டில் யாருக்கு பிரச்சனை ஏற்பட்டாலும், இருபக்கத்தின் நியாயத்தை கேட்ட பிறகு அதற்கு தீர்வு காண முயற்சிக்கிறேன். கடந்த சீசன் போல் இல்லாமல் பிக்பாஸ் போட்டியில் வெற்றியாளர் ஒரு குடும்பத்தை பிரதிபலிப்பவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் எனக்கு நிகர் யாருமில்லை’ என்றார்.

 

தொடர்ந்து பேசிய தர்ஷன் ‘மதுவின் பிரச்சனையில் நீங்கள் தலையிட்டிருந்தால் அவர் கேட்டிருப்பார். செய்யவில்லை. அதுபோல உங்களுக்கு என்று பிரச்சனைகள் வரும்போது நீங்கள் அமைதியாகிவிடுகிறீர்கள்’ என்றார்.

 

இதற்கு பதிலளித்த சேரன்’ மதுமிதா தான் பேசும் கருத்தில் உறுதியாக இருப்பவர். அவருக்கு பிடிவாத குணம் அதிகம். பிரச்சனை நடக்கும்போது அவரிடத்தில் பேச முடியாது. நான் அவரிடம் தனியாக பேச முயற்சித்தேன். அது வீடியோவில் பதிவாகி உள்ளது’ என்று கூறினார்.

 

இதைத்தொடர்ந்து வனிதா பேசினார். அவரிடம்  ”இதுவரை வீட்டில் இருக்கும் யாரிடமும் நீங்கள் மன்னிப்பு கேட்டவில்லை. தர்ஷன் விஷயத்தில்கூட மன்னிப்பு கேட்கவில்லை என்று கவின் கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு பதிலளித்த வனிதா ‘ மன்னிப்பு என்ற வார்த்தையில் நம்பிக்கை இல்லை. தர்ஷனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை. தப்பு நடந்தால் தட்டிக்கேட்பதை எப்போதும் செய்து வந்திருக்கிறேன்’ என்றார்.

 

இந்த டாஸ்கில் யார் சிறப்பாக செயல்பட்டார். என்று பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கேட்டார். முதலில் அனைவரும் சேரன் என்றனர். ஷெரின் வனிதா என்றதும் எல்லாரும் வனிதா என்று பிக்பாஸிடம் கூறினர்.

 

இதைத்தொடர்ந்து சேரனிடம் தர்ஷன் தனியாக பேசினார். அவரிடம் சேரன் ‘ஒரு முடிவை எடுத்தால் அதில் உறுதியாக இருங்கள் எல்லா வாரமும் இதுபோன்றுதான் நடக்கிறது. முதலில் ஒரு பெயரை சொல்வீர்கள். பின்பு ஒருவர் மாற்றினால் நீங்களும் அந்த பெயரை பரிந்துரை செய்வீர்கள்.  இது புதிதல்ல.’  என்றார்.

 

பிறகு இரு கிராமங்களாக பிக்பாஸ் வீடு பிரிந்தது. சாண்டி, முகென், லாஸ்லியா, வனிதா ஆகியோர் ஒரு குடும்பமாகவும், கவின், சேரன், தர்ஷன், ஷெரின் ஆகியோர் ஒரு குடும்பமாகவும் பிரிந்தனர்.

 

கிராமத்து உடைக்கு எல்லா போட்டியாளர்களும் மாறினர். லாஸ்லியா கவினிடம் கருப்பு கயிரை கொடுத்து கட்டிவிடுமாறு கூறினார். கவினும் அதை அவர் கழுத்தில் கட்டினார்.

 

இதையடுத்து மறந்து போன தமிழக கலைகளை மீண்டும் ஞாபகப்படுத்தும் விதமாக போட்டியாளர்களுக்கு நாட்டுப்புற கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. இதற்காக 5000 கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ள கலைஞர் காளீஸ்வரன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். அவர், பொம்மலாட்டம்  பற்றி பேசினார்.

 

அதன் பிறகு போட்டியாளர்களுக்கு பொம்மலாட்டத்தை காளீஸ்வரன் கற்றுக் கொடுத்தார். இதனை ஒவ்வொரு நாளும் தினமும் மாலை நேரத்தில் கிராமத்தினர் செய்துகாட்ட வேண்டும்.

 

 

சேரன் கிராமத்தினர் மது ஒழிப்போம் பற்றியும், வனிதா கிராமத்தினர் கூட்டுக் குடும்பம் பற்றியும் பொம்மலாட்டம் நிகழ்ச்சியை அரங்கேற்றினர். இதில், வனிதா, முகென், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் கச்சிதமாக நிகழ்ச்சியை அரங்கேற்றி வெற்றி பெற்றனர்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...