செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
போபால் விஷவாயு கசிவு விபத்து இழப்பீடு வழக்கு: மறுசீராய்வு மனு தள்ளுபடி!
போபால் விஷவாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குக் கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரிய மத்திய அரசின் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
போபால் விஷவாயு கசிவு விபத்து இழப்பீடு வழக்கு: மறுசீராய்வு மனு தள்ளுபடி!
Posted : புதன்கிழமை, மார்ச் 15 , 2023 12:58:22 IST
போபால் விஷவாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குக் கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரிய மத்திய அரசின் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 1984ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தில் விஷவாயு கசிந்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உலகை உலுக்கிய இந்த சம்பவத்தில் அந்நிறுவனத்திடம் இருந்து 750 கோடி ரூபாய் இழப்பீடு பெறப்பட்ட நிலையில், கூடுதலாக 7 அயிரத்து 844 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், போபால் விஷவாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மடங்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், விஷவாயு விவகாரத்தை மீண்டும் கிளப்பினால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கே சிக்கலாக அமைந்துவிடும் எனவும் தெரிவித்தது.
தொடர்ந்து, ரிசர்வ் வங்கியிடம் மீதமுள்ள 50 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்திய நீதிமன்றம், கூடுதல் இழப்பீடு வழங்க யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரிய மத்திய அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
|