செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி வெற்றி!
பவானிபூர் இடைத்தேர்தலில் பிரியங்கா டிப்ரிவாலை விட 56,388 வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி வெற்றி!
Posted : திங்கட்கிழமை, அக்டோபர் 04 , 2021 10:18:37 IST
பவானிபூர் இடைத்தேர்தலில் பிரியங்கா டிப்ரிவாலை விட 56,388 வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இருப்பினும், அவரது கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நிலையில் மம்தா பானர்ஜி மீண்டும் முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.
தேர்தல் ஆணையத்தின் விதிகள்படி சட்டமன்ற உறுப்பினர் பதவிகளில் இல்லாதவர்களும் முதலமைச்சராக பதவி ஏற்கலாம். ஆனால் அவர்கள் 6 மாத காலத்துக்குள் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற வேண்டும்.
அந்த வகையில் மம்தா பானர்ஜி நவம்பர் 5ஆம் தேதிக்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார்.
அந்தவகையில், பவானிபூர் தொகுதியில் சோபன் தேவ் சட்டோபாத்யாயா திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார். அவர் மம்தா பானர்ஜிக்கு தொகுதியை விட்டுக் கொடுக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அந்த தொகுதியில் மம்தா பானர்ஜி உட்பட 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கடந்த மாதம் 30-ஆம் தேதி இந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடந்தது. 57 சதவீதம் ஓட்டுப் பதிவாகி இருந்தது. நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் இருந்தே முன்னிலை பெற்றிருந்த மம்தா பானர்ஜி பாஜகவின் பிரியங்கா டிப்ரிவாலை விட 56,388 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
|