???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 செய்தியாளர்களை சந்திக்க எப்போதும் அஞ்சியதில்லை: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 0 சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படும்: பிரதமர் 0 கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி! 0 ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு 0 எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து செயல்பாட்டுக்கு அரசு உதவும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் 0 "ஆளுநர் மௌனம் காப்பது ஏன்?": அற்புதம் அம்மாள் கண்ணீர் 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரஜினி கர்நாடகா காவியின் தூதுவர் என பாரதிராஜா கடும் விமர்சனம்

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   16 , 2018  23:40:28 IST

தமிழன் பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள் என ரஜினிகாந்தை பாரதிராஜா கடும் விமர்சனம் செய்து உள்ளார்.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் தாக்கப்பட்டதற்கு ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்து இருந்தார். ரஜினிகாந்தின் சமூக வலைதள பதிவுக்கு, இயக்குநர் பாரதிராஜா பதில் அளித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
'காவிரிக்காக ஒன்றுகூடிய தமிழர் ஒற்றுமை உணர்வை வன்முறை கலாசாரம் என கூறுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?; அறவழியில் போராடியவர்கள் வன்முறையாளர்களா? 
 
தமிழர்கள் எல்லாம் ஒன்றிணைந்து விட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியால் பேசும் பேச்சு இது. ரஜினிகாந்த் தமிழர் அல்ல, கர்நாடகா காவியின் தூதுவர் என்று இப்போது தான் தெரிகிறது. 
 
இலங்கை தமிழர், நியூட்ரினோ மற்றும் மீத்தேன் விவகாரம் குறித்து ரஜினி வாய்திறக்காதது ஏன்?
 
தமிழர்களுள் ரஜினிகாந்த் சிண்டு  முடிய வேண்டாம். நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் போராடினீர்களா? மீத்தேன் பற்றி வாய் திறந்தீர்களா? இலங்கை தமிழர்களை கொன்று குவித்தபோது குரல் கொடுத்தீர்களா?:
 
படம் வெளியாகும் போது மட்டும் பூச்சாண்டி காட்டும் ரஜினி போன்றோரை சந்தித்ததே இல்லை.
காவிரி பிரச்சினை பற்றி எரிந்தபோது, வெந்து செத்தது எங்கள் தமிழ் இனம். தமிழன் பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள். உங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது என ரஜினிகாந்த் குறித்து இயக்குநர் பாரதிராஜா விமர்சனம் செய்து உள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...