???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் 0 ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி! 0 கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது! 0 கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை! 0 குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் 0 கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது! 0 மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் 0 கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது! 0 சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்: இன்று முதல்கட்ட வாக்குபதிவு! 0 பணமதிப்பிழப்பும் ஜிஎஸ்டியும் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளின: ரகுராம் ராஜன் 0 ஜனவரியில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடியதற்காக கல்லூரி மாணவி சஸ்பெண்ட்

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   16 , 2018  22:17:25 IST

கோவை அரசுக் கல்லூரியில் வரலாற்றுப் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் மாலதி என்ற மாணவி. கடந்த செப்டம்பர் 28-ம் தேதி பகத்சிங் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரியில் கூட்டம் நடத்துவதற்காக அனுமதி கேட்டுள்ளார் மாலதி. ஆனால் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதையடுத்து மாணவர்களை திரட்டி மாலதி கூட்டம் நடத்தியுள்ளார்.
 
அனுமதியின்றி கூட்டம் நடத்தியதற்காக மாலதி கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தியது குறித்து விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்வதற்காக மூத்த பேராசிரியர் செந்தூர் பாண்டியன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவையும் கல்லூரி நிர்வாகம் நியமித்துள்ளது.
 
இந்த நடவடிக்கை பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்கு எதிரான செயல் என்றும், இதற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் மாலதி கூறியுள்ளார் . அனுமதியில்லாமல் கூட்டம் நடத்தினாலும், பிரச்சைனக்குரிய கருத்துகள் எதையும் பகிரவில்லை என்று கூறியுள்ள மாலதி, கல்லூரி வளாகத்தில் அரசியல் பேசுவது மாணவர்களின் உரிமை என்றும் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, குறுகிய காலத்தில் கேட்டதால் அனுமதி அளிக்கப்படவில்லை என்றும், முன்னதாக கேட்டிருந்தால் கல்லூரி நிர்வாகம் சார்பில் விரிவான விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் என்றும் கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்
 
இதனிடையே, இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவியை வரும் 22-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...