???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம்: 5,835 பேருக்கு புதிதாக கொரோனா; 119 பேர் பலி 0 கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்: கு.க. செல்வம் 0 உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு 0 நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: தேசிய தேர்வு முகமை 0 ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே: ஓ.பி.எஸ் அறிவுரை 0 மக்களுக்கு புரியும் மாநில மொழிகளில் EIA 2020 வரைவை வெளியிடுங்கள்: பார்வதி 0 1947லிருந்து நாடு காணாத சரிவு காணலாம்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி 0 எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்: ஆர்.பி.உதயகுமார் 0 ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: ஜெயக்குமார் 0 தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்: தலைமை செயலாளர் 0 ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக்குவது கொள்கை முடிவு: தமிழக அரசு 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   07 , 2020  06:38:46 IST


Andhimazhai Image

அவருக்கு வயது 89! இந்த வயதிலும் ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆகி இருக்கிறார். இன்னும் நான் ஓய்ந்துவிடவில்லை என்று சவால் விடுகிறார்

யார் அவர்?

 

புகழ்பெற்ற பார்முலா ஒன் ரேஸ் நிறுவன முன்னாள் உரிமையாளர்  பெர்னி எக்லிஸ்டோன் என்பவர் தான்.

 

 “இன்னொரு குழந்தைக்கும் அப்பா ஆவேன்,” என்று சொல்லும் இந்த கோடீஸ்வரர் வயாக்ரா எல்லாம் பயன்படுத்துவது இல்லை. வைட்டமின் டி மாத்திரை போதுமாம்!

 

 

பெர்னி, இங்கிலாந்தில் உள்ள சப்போல்க் என்ற ஊரில் மீனவர் குடும்பத்தில் பிறந்தவர். தன் 16 வது வயதோடு படிப்பை விட்டவர். ரேஸ் கார் ஓட்டுநராக முயன்று முடியாமல் போய்விட, ரேஸ் கார் தொழிலிலேயே பெரும் பணக்காரர் ஆனவர்,  எழுபதாம் ஆண்டுகளில், க்ராண்ட் ப்ரிக்ஸ் ரேஸின் டிவி உரிமைகளை விற்கத் துணை புரிந்தவர் பார்முலா ஒன் குழுமத்தின் தலைவர் ஆனார். இவரது சொத்து  மதிப்பு 2.5 பில்லியன் பவுண்டுகள் ஆகும்.

 

இவரது முதல் திருமணம் நடந்தது 1952-ல். அதில் பிறந்த பெண் 65 வயதில் ஓய்வுபெற்ற தொழிலதிபராக இருக்கிறார். அடுத்ததாக ஒரு மாடல் அழகியை மணந்தார். அவருக்கு 36 வயதில் ஒரு மகளும், 31 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

 

இந்த கல்யாணம் விவகாரத்தில் முடிந்தபோது ஏற்பட்ட மனக்கசப்பால் பெர்னி, இனி கல்யாணமே வேண்டாம் என்று முடிவு செய்திருந்தாராம். ஆனால் 2009-ல் பேபியானா என்ற பிரேசில் நாட்டுப் பெண்ணைப் பார்த்தார். மூன்று ஆண்டுகள் கழித்து திருமணமும் செய்துகொண்டார்கள்.

 

பெர்னி 2017-ல் பார்முலா ஒன் குழுமத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்றுவிட்டு ஓய்வுபெற்றார்.

 

கடந்த மூன்று மாதமாக ஸ்விட்சர்லாந்தில் ஓய்வு எடுத்துவரும் பெர்னி- பேபியானா ஜோடிக்கு சில நாட்கள் முன்பு பிறந்திருப்பது ஆண் குழந்தை.

 

பிசினஸ் பிசினஸ் என அலைந்து என் பெண் குழந்தைகளுடன் முன்பு நேரம் செலவிட முடியவில்லை. இப்போது சும்மாதான் இருக்கிறேன். எனவே நல்ல அப்பாவாக இருப்பேன் என்கிறார் பெர்னி.

 

இவரது மகள்கள் அப்பா நீங்கள் 120 வயது வரை இருப்பீர்கள் என்று சொல்கிறார்களாம். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் திட்டம் இல்லை. நேரம் வந்தால் போகவேண்டியதுதான் என்று சொல்கிறார் பெர்னி.

 

இப்போதைக்கு குழந்தையுடன் பிஸியாக இருக்கிறார் வரும் அக்டோபரில் 90 வயதை எட்டும் இந்த கோடீஸ்வரர்!

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...