???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் மீது கும்பல் தாக்குதல்!

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   11 , 2019  23:08:54 IST

நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முகம்மது பைசான், கடந்த 9-ம் தேதி மாட்டு இறைச்சி சூப் சாப்பிட்டுள்ளார். சூப் சாப்பிட்ட புகைப்படத்தை முகம்மது பைசான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர், முஹம்மது பைசானை கத்தி, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த முஹம்மது பைசானை அப்பகுதி மக்கள் மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இல்லையென்றால், போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் இளைஞரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடிவந்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், கணேஷ்குமார், மோகன்குமார், அகஸ்தியன் ஆகியோரை நள்ளிரவில் கைது செய்ததுடன் அவர்கள் மீது கொலைமுயற்சி வழக்கை பதிவு செய்துள்ளனர். இன்னும் தலைமறைவாக உள்ள பலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...