அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

எழில்மிகு அரசு அலுவலகம்: அரசு ஊழியர்களுக்குத் தலைமை செயலாளர் வெ.இறையன்பு கடிதம்!

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   11 , 2021  16:50:32 IST


Andhimazhai Image

அரசு அலுவலகங்களை எப்படி பேணி பராமரிக்க வேண்டும் என்பது குறித்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு அரசு ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அன்புள்ள அலுவலகத் தோழர்களே!" எனத் தொடங்கும் அந்தக் கடிதத்தில், ``நமக்கு அலுவலகம் என்றதுமே குவிந்து கிடக்கும் கோப்புகளும், உடைந்த நிலையில் ஒதுக்கப்பட்டிருக்கும் நாற்காலிகளும், பழுதடைந்த அலமாரிகளும், உபயோகமில்லாமல் கிடக்கும் கணினிகளும், நடந்து செல்லும்போதே துர்நாற்றம் வீசி மூக்கை பொத்த வைக்கின்ற கழிவறைகளும் பெரும்பாலும் நினைவுக்கு வருகின்றன. தூய்மையான அலுவலகம், நம் அலுவலகத்தை நேசிக்கத் தகுந்ததாக மாற்றும். நம் பணியைத் தென்றலாக்கும். கோப்புகளை மேசையிலிருந்து துள்ளிக் குதித்து ஓட வைக்கும். அத்தகைய `எழில்மிகு அரசு அலுவலகம்' என்ற சூழலை நாம் உருவாக்க வேண்டும்.

அதற்காக நாம் ஆற்ற வேண்டிய பணிகள் எளிமையானவை. பயனற்ற நாற்காலிகளை அப்புறப்படுத்த வேண்டும். உபயோகமற்ற பொருட்களை உடனடியாக அகற்றி ஏலம் விட வேண்டும். முடிவுற்ற கோப்புகளை முறைப்படி ஆவண அறைக்கோ, ஆவணக் காப்பகத்துக்கோ அனுப்பிக் கோப்புகள் குவிந்து கிடக்கும் சூழலை உருவாக்கக் கூடாது. ஆவணக் காப்பகத்திலிருந்து பெறப்படும் கோப்புகள் துறை வசமே இருப்பது குறித்து 2011-ம் ஆண்டு ஆணையர், ஆவணக்காப்பகம் அரசுக்கு மடல் எழுதியுள்ளார். பயன்பாடு இல்லாத கணினிகளை முறையாகக் குழு அமைத்து முறைகேடு நிகழாவண்ணம் களைவதன் மூலம் அலுவலகம் பொலிவு பெறும்.

மின் கழிவுகளும் தக்க முறைகளைப் பின்பற்றி அகற்றப்பட வேண்டும். மேசையில் கோப்புகளை அழகாக அடுக்கி வைத்துப் பணியாற்றினால் பணிச் சூழலும் பண்பாடும் மேன்மை அடைய வாய்ப்புகள் அதிகம். அலுவலக சுகாதாரம் பேணுவதும் குப்பைகள் அகற்றப்பட்டு அவ்வப்போது கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படுவதும் முக்கியம். தூய்மைப் பணியாளர்கள் மணிக்கு ஒருமுறை கழிவறைகளைச் சுத்திகரித்து அவை துர்நாற்றமின்றி விமான நிலையங்களில் உள்ள ஓய்வறைகளைப் போலத் திகழ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துறைத் தலைவர்களும், மாவட்ட ஆட்சியர்களும் வரும் பார்வையாளர்களுக்கு எனக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அவர்கள் தேவையின்றி தாழ்வாரங்களில் நடமாடிக் கொண்டிருப்பது தவிர்க்க வேண்டும். துறையின் தலைமை அதிகாரி தன் அறையோடு நின்று விடாமல் அவ்வப்போது தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகத்தை ஆய்வு செய்து அலுவலகத் தூய்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

செலவின்றி மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளை மூன்று வாரங்கள் மட்டும் இடைவிடாமல் தொடர்ந்து செயல்படுத்தினால் அது உடலின் ஒரு உறுப்பாகவே ஆகிவிடும். இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு தந்து எழில்மிகு அரசு அலுவலகம் என்கின்ற நோக்கத்தை அடையுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
 

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...