???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மேகதாதுவில் புதிய அணை: தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை! 0 சிபிஐ இடைக்கால இயக்குநர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல் 0 போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பள பிடித்தம்: அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை 0 அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆறுமுகசாமி ஆணையம் 7 மணிநேரம் விசாரணை! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் 0 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளாராக நடிகை கரீனா கபூரை நிறுத்த கோரிக்கை 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பி.இ. ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

Posted : வியாழக்கிழமை,   மே   17 , 2018  07:34:47 IST

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பொறியியல் படிப்புக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையில் ஆன்லைன் முறை மூலமாக மட்டும் கலந்தாய்வு நடைபெறும் பட்சத்தில் அது கிராமப்புற மாணவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று மனுதாரா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், ’’கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் முறையில்தான் கலந்தாய்வு நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளாக எந்தவிதக் குற்றச்சாட்டும் எழவில்லை.  ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறுவதால் நேரம் மிச்சமாகிறது. இணையதள வசதி இல்லாத மாணவா்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்கலைக்கழகம் சார்பில் கலந்தாய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போதிய வெளிப்படைத்தன்மை இருப்பதால் இதற்கு தடை விதிக்கக் கூடாது’’ என்று தெரிவிக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள் ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது. மேலும் டி.டி முறையில் விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம் என்பதை பல்கலைக்கழகம் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...