அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக! 0 ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக்! 0 கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு! 0 இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு! 0 பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால்! 0 போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! 0 திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் 0 புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்! 0 பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா! 0 கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார்! 0 தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள்! 0  தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் 0 தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு 0 காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு? திருநாவுக்கரசர் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நீதிபதி தஹில் ரமானியின் முடிவு கொலிஜியத்தை அவமதிக்கும் செயல்: பார் கவுன்சில் கருத்து

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   12 , 2019  10:30:29 IST

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியான தஹில் ரமானியை, மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்வதற்கு, கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனைதொடர்ந்து, தஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தஹில் ரமானியின் இடமாற்றத்தை கண்டித்து, தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், அவரது ராஜினாமா முடிவு கொலிஜியத்தை அவமதிப்பதாக உள்ளதாக அகில இந்திய பார் கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.

ரமானி மீது கொலிஜியத்தில் எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாதபோது, இடமாறுதலை ஏற்காதது ஏன் எனவும் பார் கவுன்சில் கேள்வி எழுப்பியுள்ளது. சிறிய நீதிமன்றங்களில் பணியாற்றுவதை தலைமை நீதிபதிகள் தவிர்த்தால், இந்திய நீதித்துறையின் நிலைமை என்னவாகும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மும்பை, சென்னை உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றியபோது, அதனை ஏற்றக்கொண்டது போல், மேகாலயாவுக்கு மாற்றியதையும் ஏற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. எனவே கொலிஜியம் உத்தரவை ஏற்கவேண்டும் என்றும், தஹில் ரமானியின் இடமாறுதல் ஆணையை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும், அகில இந்திய பார் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...