அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெ. மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயன்றார்- முதல்வர் குற்றச்சாட்டு 0 டிராக்டர் பேரணிக்கு தயாராகும் விவசாயிகள் 0 தமிழகத்தில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் ராகுல்! 0 இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய புதிய குழு 0 சூர்யாவைப் பின்னுக்குத் தள்ளிய புலிக்குத்தி பாண்டி 0 டிவிட்டரில் அசுரனாக மாறிய தனுஷ் 0 பா.இரஞ்சித் படத்தில் ஹீரோவான யோகிபாபு 0 நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் - சூழல் ஆர்வலர்கள் 0 சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல்

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   31 , 2020  23:42:25 IST

10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த இணைப்பு இன்று அமலுக்கு வருகிறது. அதன்படி, இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இன்று இணைகிறது. இனிமேல், அலகாபாத் வங்கிக்கிளைகள், இந்தியன் வங்கிக் கிளைகளாக செயல்படும்.

கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைகின்றன. அதனால், கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கிக்கிளைகள், இனிமேல் யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளைகளாக செயல்படும். சிண்டிகேட் வங்கி, இன்று கனரா வங்கியுடன் இணைகிறது. இனிமேல், சிண்டிகேட் வங்கிக்கிளைகள், கனரா வங்கிக்கிளைகளாக செயல்படும்.

யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைகின்றன. மேற்கண்ட 2 வங்கிக்கிளைகளும் இனிமேல் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளைகளாக செயல்படும்.

இதன்மூலம், 10 பொதுத்துறை வங்கிகள், 4 வங்கிகளாக இணைகிறது. இந்த இணைப்பு தொடர்பான அறிவிப்பாணையை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இணைப்பைத் தொடர்ந்து, நாட்டில் பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை 12 ஆக குறைகிறது. அத்துடன், பாரத ஸ்டேட் வங்கியை தொடர்ந்து, 2-வது பெரிய வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி உருவெடுக்கிறது. பேங்க் ஆப் பரோடா, கனரா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பெறுகின்றன.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...