???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு 0 ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் 0 மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா! 0 நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு 0 சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை! 0 சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு 0 அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு 0 தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை 0 கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   அக்டோபர்   20 , 2019  23:43:06 IST

அக்டோபர் 22ம் தேதி முதல் இந்திய அளவிலான வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக, இந்திய வங்கித்துறையின் இரண்டு மிகப்பெரிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆகஸ்டு மாதம் அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, கார்பரேசன் வங்கி, ஓரியண்டல் வங்கி, சிண்டிகேட் வங்கி, யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய 6 சிறிய வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய 4 வங்கிகளுடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்தியாவின் நிதித்துறையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த இணைப்பு நடைபெறுவதாக, வங்கிகள் இணைப்புக்கு காரணமாக கூறப்பட்டது. வங்கிகள் இணைக்கப்பட்டதா 27 ஆக இருந்து வந்த பொதுத்துறை வங்கிகள் 12 ஆக சுருங்கியது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தான் இந்திய அளவிலான வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கி தொழிற்சங்கங்களான அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் இந்திய வங்கி பணியாளர் கூட்டமைப்பு ஆகிய 2 தொழிற்சங்கங்களும் அக்டோபர் 22ம் தேதி வேலை நிறுத்தத்திற்கு அதன் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இரண்டு தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளதால், வழக்கமான வங்கி நடவடிக்கைகளில் பாதிப்பு இருக்கும் என்று ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் தெரிவித்துள்ளது. இவை மட்டுமல்லாமல் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, வங்கி சீர்திருத்தங்கள், அதிக அபராதம் மற்றும் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் அதிகப்படியான சேவைக் கட்டணன் ஆகியவற்றை எதிர்த்து இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இவை மட்டுமல்லாது மோசமான வங்கிக்கடன்களை திரும்பப்பெறுதல், வேலை பாதுகாப்பு மற்றும் கடனை திரும்ப செலுத்த தவறியவர்கள் மீதான கடுமையான நடவடிக்கை எடுக்க கோருதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...