???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு 0 ஹைதராபாத்தில் மீண்டும் ஆணவக்கொலை முயற்சி: பெண்ணின் தந்தை வெறிச்செயல்! 0 முத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் 0 வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம் 0 பாங்க் ஆஃப் பரோடா, தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு! 0 தென்னிந்திய எம்.எல்.ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 51.99 லட்சம்! 0 கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வங்கிக் கணக்குக்கு நிச்சயம் ஆதார் எண் வேண்டும்!

Posted : சனிக்கிழமை,   ஜுன்   17 , 2017  06:14:11 IST

டிசம்பர் 31-ஆம் தேதிக்கு மேல் ஆதார் எண் இல்லாத வங்கி கணக்குகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரேசன்கார்டு, பான்கார்டுக்கு மட்டுமல்ல திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கும் ஆதார் அவசியமாகிவிட்டது. இனி ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படும் என தேவஸ்தானம் ஏற்கனவே தெரிவித்து விட்டது.  ஆதார் எண்ணை வங்கிக்கணக்கு, எல்.பி.ஜி, பான்கார்டு என வரிசையாக இணைக்கக் கூறி தினசரி அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. 
 
இதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தாலும், அவசியம் கருதி ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்தநிலையில், வங்கி கணக்கு துவங்க ஆதார் எண் கட்டாயம்  என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. 
 
50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனை செய்ய ஆதார் எண் அவசியம் என வங்கிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டு உள்ளது. வங்கி கணக்கு உள்ள அனைவரும் டிசம்பர் 31-க்குள் ஆதார் எண்ணை தரவில்லை எனில் வங்கி கணக்குகள் ரத்தாகும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. அவ்வாறு ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைக்காவிட்டால், வங்கிகணக்குகள் செல்லாததாகி விடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...